டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!

ரெனால்ட் -நிஸான் நிறுவனம் இந்தியாவிற்கான தங்கள் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ள நிலையில் புதிதாக டஸ்டர் கார், க்விட் இவி, நிஸான் பிராண்டில் டிரைபர் கார் ஆகியவை விரைவில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

சர்வதேச அளவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் கூட்டாக கார்களை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டு வந்து வருகின்றனர். இந்நிறுவனம் கடந்த 20 ஆண்டுக்கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றியமைத்தது. அதன்படி இரு நிறுவனம் ஒரே அளவிலான முதலீடுகளைச் செய்ய முடிவு செய்துள்ளது.

டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!

அதன்படி நிஸான் நிறுவனம் தனது பணத்தை ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதலீடு செய்யவுள்ளது. நிஸான்-ரெனால்ட் நிறுவனத்தின் இந்த ஆழமான ஒப்பந்தம் இந்தியா மட்டுமல்ல லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

உலகில் வேகமாக வளரும் கார் சந்தையான இந்தியாவில் நிஸான் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளைக் களம் இறக்கவுள்ளது. இந்த கார்கள் எல்லாம் 2025ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார்களில் இந்தியாவில் பெரிய அளவில் ஹிட்டான டஸ்டர் எஸ்யூவி காரும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட்- நிஸான் திட்டத்தின்படி இரு நிறுவனங்களும் தங்கள் கார்களை கிராஸ் பேட்ஜ்ஜிங் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. எப்படி மாருதி-டொயோட்டா நிறுவனங்கள் கார்களை ரீபேட்ஜ் செய்து வெளியிடுகின்றனவோ அதே போல இவர்களும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இது மட்டுமல்ல இரு நிறுவனங்களின் கார்களும் ஒரே ஆலையில் தயாரித்து கார்களுக்கான தயாரிப்பு செலவையும் மிச்சப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் புதிய திட்டங்களின்படி பல புதிய கார்கள் மற்றும் ஏற்கனவே உள்ள கார்களின் கிராஸ் பேட்ஜ் கார்கள் அறிமுகமாகவுள்ளன. நமக்குக் கசிந்த தகவலின்படி ரெனால்ட் நிறுவனத்திடம் உள்ள டிரைபர் 7 சீட்டர் கார் நிஸான் பேட்ஜ் உடன் வேறு பெயரில் வெளியாக வாய்ப்புள்ளது. இது போக ரெனால்ட் க்விட் காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இந்நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒரே பிளாட்ஃபார்மை இந்தியாவில் களம் இறக்க முடிவு செய்துள்ளனர். அதில் டஸ்டர் போன்ற பெரிய கார்களை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்நிறுவனங்கள் இணைந்து சிறிய கார்களுகளை ஒரே பிளாட்ஃபார்மில் தயாரித்து வருகின்றனர்.

ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனம் இணைந்து இந்தியாவில் விற்பனையாகும் ஒட்டு மொத்த கார் சந்தையில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பிடித்துள்ளனர். அதே போல உலக அளவில் பிரபல சந்தைகளான சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட நிஸான், ரெனால்ட் நிறுவனத்திற்குச் சிறப்பான சந்தையில்லை. இந்தியாவில்தான் ஓரளவிற்குச் சந்தை உள்ளது. அதனால் தான் இந்தியாவில் அதன் விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து சென்னையில் ஆலையை உருவாக்கி அதில் கார்களை தயாரித்து வருகின்றனர். இந்த ஆலையில் ஆண்டிற்கு 5 லட்சம் கார்களை தயாரிக்க முடியும். ஆனால் தற்போது 3ல்1 பங்கு கார்கள் தான் தயாராகிறது. இந்த ஆலையில் நிஸான் 70 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஆனால் இந்திய விற்பனை சந்தையில் ரொனல்ட் பிராண்டில் உள்ள கார்கள் ஆண்டிற்கு 87 ஆயிரம் கார்கள் விற்பனையாகிறது. நிஸான் பிராண்டில் வெறும் 35 ஆயிரம் கார்கள் தான் விற்பனையாகிறது

புதிய ஒப்பந்தத்தின் படி ரெனால்ட் நிஸான் நிறுவனம் தங்களது சர்வதேச கார்களை லோகலைஸ் செய்வது எப்படி என ஆய்வு செய்து கார்கள் தயாரிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். முன்னரே இப்படியான ஒரு உடன்படிக்கை குறித்துப் பேசப்பட்டது. ஆனால் காப்புரிமை சிக்கல் காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில் டொயோட்டா- மாருதி சுஸூகி ஒப்பந்தம் இந்தியாவில் வெற்றிகரமாக ஒர்க்அவுட் ஆகியுள்ள நிலையில் அதை தாங்களும் செயல்படுத்த நிஸான்- ரொனால்ட் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமானது கிடையாது. இது வெளியில் உள்ள நபர்கள் மூலம் கிடைத்த தகவலே இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
All new duster suv kwid ev renault nissan india future plan
Story first published: Thursday, February 2, 2023, 21:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X