பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் பிஎம்டபிள்யூ, இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது 3ம் தலைமுறை எக்ஸ்1 எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

2023 பிஎம்டபிள்யூஎக்ஸ்1 காரை பொருத்தவரை மொத்தம் 2 வேரியன்ட்களில் வெளியாகிறது. எஸ்டிரைவ்18ஐ எக்ஸ்லைன் (பெட்ரோல்) மற்றும் எஸ்டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் ஆகிய இரண்டு வேரியன்ட்கள் உள்ளன. இந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 எஸ்டிரைவ்18ஐ எக்ஸ்லைன் வேரியன்டை பொருத்தவரை 1499 சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 134 பிஎச்பி பவரை 4400 - 6500 ஆர்பிஎம்மில் வழங்குகிறது. 230 என்எம் டார்க் திறனை 1500-4000 ஆர்பிஎம்மில் 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.2 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இது அதிகபட்சமாக 208 கி.மீ வேகம் வரை சீறி பாயும். இந்த கார் பெட்ரோல் வேரியன்ட் கார் மைலேஜாக லிட்டருக்கு 16.3 கி.மீ தரும் என ஏஆர்ஏஐ சான்றிழித்துள்ளது.

அடுத்ததாக பிஎம்டபிள்யூ எஸ்டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் காரை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை கொண்டது. இது 147.5 பிஎச்பி பவரையும் 360 எம்என் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பிஎம்டபிள்யூ எஸ்டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.9 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த கார் 210 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும். இந்த காரின் மைலேஜை பொருத்தவரை லிட்டருக்கு 20.37 கி.மீ வரை மைலேஜை வாரி வழங்கும் திறன் கொண்டது.

இந்த மூன்றாம் தலைமுறை எக்ஸ் 1 காரின் அளவுகளைப் பொருத்தவரை 1845 மிமீ அகலம், 1642 மிமீ உயரம், 4500 மிமீ நீளம் கொண்டது. இந்த கார் வீல் பேஸாக மட்டும் 2692 மிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் முந்தைய தலைமுறை காரை விட 61 மிமீ நீளம், 24 மிமீ அகலம், 30 மீமீ உயரம் மற்றும் 22 மிமீ அதிக வீல் பேஸை கொண்டது.

இந்த காரில் 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இதில் பெட்ரோல் வேரியன்ட் 1500 கிலோ எடையையும், டீசல வேரியன் 1575 கிலோ எடையையும் கொண்டது.

டிசைன் மற்றும் அம்சங்கள்

இந்த 3ம் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை பொருத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய தலைமுறையிலிருந்து இதை வேறுபடுத்தி பார்க்க முடியும். முக்கியமாக பெரிய கிட்னி கிரில், முன்பக்கம் ஸ்லீக்கான எல்இடி ஹைட்லைட்கள், முன்பக்க பம்பரில் ஸ்லிக்கான ஏர் இன்டேக் பகுதி சைடு பகுதியிலும் மத்தியில் பெரிய ஏர் இன்டேக் பகுதியும் உள்ளது.

பக்கவாட்டைப் பொருத்தவரை அதிகரிக்கப்பட்ட நீளம் இந்த காரின் ரூஃப் லைட் பகுதியில் தெரிகிறது. சதுரமான வீல் ஆர்ச் உடன் 18 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது. புதிய 3டி எல்இடி டெயில் லைட்களும் பொருத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ பேட்ஜ் காரின் பின்பக்க விண்ட் ஸ்கிரீனிற்கு பொறிக்கப்பட்டுள்ளது. வேரியன்ட் பேட்ஜ் டெயில் கேட்டின் கீழ் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 476 லிட்டர் பூட் வசதி இருக்கிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை முந்தைய தலைமுறையிலிருந்து இது பல்வேறு மாற்றங்களை கேபின் உள்ளேயும் பெற்றுள்ளது. இந்த கோரின் டேஸ் போர்டில் சிங்கள் பேன் கர்வ் கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10.25 இன்ச் டிரைவர் டிஸ்பிளே மற்றும் 10.7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பிஎம்டபிள்யூ ஐடிரைவ் சிஸ்டத்துடன் ஓஎஸ் 8 இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 காரின் இரண்டு வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாக ஸ்போர்ட்ஸ் சீட் வழங்கப்பட்டுள்ளது. டீசல் வேரியன்ட்டில் டிரைவர் மற்றும் முன்பக்க பயணிக்கு மட்டும் ஆக்டிவ் சீட் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க பயணிக்குச் சீட்டில் மசாஜ் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின் சீட்டை முன்பின் 130 மிமீ வரை நகர்த்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காரில் டூயல் சோன் ஏசி செட்டப் இருக்கிறது. இதில் ஆம்பியன்ட் லைட்டிங், 6 விதமான டிம்மிங் செட்டிங்ஸ், பெரிய கிளாஸ் சன் ரூஃப் மற்றும் செல்போன்களுக்கான வயர் லெஸ் சார்ஜர் வசதியிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 காரை பொருத்தவரை 3ம் தலைமுறை கார் என்ட்ரி-லெவ்ல சொகுசு காருக்கு சிறந்த காராக இருக்கிறது. இந்த காரில் பல ஸ்டைலிங் மற்றும் அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 எஸ்டிரைவ் 18ஐஎக்ஸ் லைன் பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை ரூ45.90 லட்சம் என்ற விலையிலும், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ் 18டி எம் ஸ்போர்ட் வேரியன்டை பொருத்தவரை ரூ47.90 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகிறது.

Most Read Articles
English summary
Bmw 3rd gen x1 launched in India know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X