பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார் விற்பனைக்கு வந்தது!! எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட்... விலை இவ்வளவா!

பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி காராக எக்ஸ்7 -இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. விலை உள்பட இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இங்கு தான் தற்போது புதியதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்7 எஸ்யூவி காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.22 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்7 அறிமுகம்!!

விலை அறிவிக்கப்பட்டு இருப்பதுடன் எக்ஸ்7 காரின் முன்பதிவுகளும் இந்தியாவில் உள்ள அனைத்து பிஎம்டபிள்யூ டீலர்ஷிப் மையங்களிலும் துவங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்தவர்களுக்கு எக்ஸ்7 கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை மினரல் வெள்ளை, ப்ளாக் சாப்பைர், கார்பன் கருப்பு, டிராவிட் கிரே மற்றும் டான்ஸானைட் என மொத்தம் 5 விதமான நிறத்தேர்வுகளில் தேர்வு செய்யலாம். இவற்றுடன் பிஎம்டபிள்யூவின் தனித்துவமான பெயிண்ட் வேலைப்பாடுகளிலும் புதிய எக்ஸ்7 காரை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காரில் ஆற்றல்மிக்க இரு டர்போ என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றான 3.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்-லைன் 6 சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 380 பிஎச்பி மற்றும் 520 என்எம் டார்க் திறனையும், 3.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்-லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 340 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவை இரண்டுடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்7 அறிமுகம்!!

அத்துடன் 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டாரையும் இந்த என்ஜின்களுடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக கூடுதலாக 12 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இவற்றின் உதவியுடன் பெட்ரோல் என்ஜினில் எக்ஸ்7 எஸ்யூவி காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடலாம். டீசல் என்ஜினில் 0.1 வினாடி அதிகம் தேவைப்படும். காரின் டிரைவிங் பண்பை கம்ஃபர்ட், எஃபிசியண்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் என்ற நான்கில் ஒன்றில் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட் காரில் எக்ஸ்-டிரைவ் ஆல்-வீல் டிரைவ் தொழிற்நுட்பத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. டிரைவிங் சூழலை அவ்வப்போது கண்காணித்து, அதற்கேற்ப அட்ஜெஸ்ட்மெண்ட்களை மேற்கொள்ளும் இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக அதிகப்பட்ச டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் வைகல் ஸ்டெபிளிட்டியை பெறலாம். மேலும் ஒரு சிறப்பம்சமாக, அடாப்டிவ் 2-ஆக்ஸல் ஏர் சஸ்பென்ஷனை புதிய எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட் காரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்7 அறிமுகம்!!

இவற்றுடன் ஆட்டோமேட்டிக் டிஃப்ரென்ஷியல் பிரேக்ஸ்/லாக்ஸ் (ADB-X), எக்ஸ்டெண்டட் 'டைனாமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல்' (DTC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், டிஜிட்டல் கீ, க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் அசிஸ்டண்ட், எமர்ஜென்சி கால், ரியல்-டைம் டிராஃபிக் இன்ஃபர்மேஷன் மற்றும் ரிமோட் சர்வீஸஸ் உள்ளிட்டவையும் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய எக்ஸ்7 காரில் உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், காரின் முன்பக்கம் முந்தைய எக்ஸ்7 காரில் இருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அளவில் பெரிய ஸ்கை பனோராமிக் கண்ணாடி சன்ரூஃப் புதிய எக்ஸ்7 காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. காரின் உட்பக்கத்திற்கு சென்றால், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ரியல்-டைம் டிராஃபிக் இன்ஃபர்மேஷனை வழங்கக்கூடிய வளைவான பிஎம்டபிள்யூ டிஸ்பிளே, 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே, பெரிய 14.9-இன்ச் கண்ட்ரோல் டிஸ்பிளே மற்றும் வண்ண நிறங்களில் ஹெட்-அப் டிஸ்பிளே உள்ளிட்டவை நம்மை கவர்கின்றன.

Most Read Articles
English summary
Bmw x7 facelift launched in india at rs 1 22 crore
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X