“தாலாட்டும் காற்றே வா...” நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?

கடந்த காலங்களில் இருந்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பல்வேறு தனித்துவமான வாகனங்களை சந்தையில் விற்பனை செய்துள்ளது. அத்தகைய வாகனங்களுள் ஒன்று தார் என்றால், அது மிகையில்லை. முதல் தலைமுறை தாருக்கு கிடைத்த அமோக வரவேற்பினால் புத்துணர்ச்சியான தோற்றத்தில் 2ஆம் தலைமுறை தார் வாகனத்தை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

எதிர்பார்த்ததை போல் 2ஆம் தலைமுறை தாரையும் நம் இந்திய மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். அவ்வாறு வாங்கியவர்களில் பலர் தங்களது தார் வாகனத்தை மாடிஃபை செய்தும் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் மஹிந்திரா தார் ஆனது மாடிஃபிகேஷன்களுக்கும் ஏற்ற எஸ்யூவி வாகனமாக விளங்குகிறது. ஏனெனில் தார் வாகனத்தை கஸ்டமைஸ்ட் செய்து கொள்வதற்கு ஏகப்பட்ட கஸ்டமைசேஷன் தொகுப்புகளை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வழங்குகிறது.

வில்லீஸ் ஜீப்களுக்கே டஃப் கொடுக்கும் தோற்றத்தில் தார் வாகனம்

இந்த தொகுப்புகளை மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூம்களிலேயே வாங்கலாம் என்பது மட்டுமின்றி, அவர்களே வாகனத்தை மாடிஃபை செய்தும் வழங்குகிறார்கள். அதேநேரம் சிலர், அங்கீகரிக்கப்பட்ட கஸ்டமைஸ் நிறுவனங்கள் மூலமாக பல லட்சங்கள் செலவு செய்து கூட தங்களது தார் வாகனத்தை மாடிஃபை செய்துள்ளதை இதற்கு முன் பார்த்துள்ளோம். அவ்வாறுதான், இங்கு ஒரு 2ஆம் தலைமுறை மஹிந்திரா தார் வாகனம் பழமையான வில்லீஸ் ஜீப் போன்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடிஃபிகேஷன் வேலைப்பாடுகளை செய்திருப்பது கர்நாடகா மாநிலம், மங்களூரை சேர்ந்த கே.ஏ.எம் கஸ்டம்ஸ் என்ற நிறுவனமாகும். மாடிஃபை செய்யப்பட்டிருக்கும் இந்த குறிப்பிட்ட வாகனம் ஆனது விற்பனையில் இருக்கும் தார் வாகனத்தின் விலை குறைவான வேரியண்ட் ஆகும். இந்த கஸ்டமைஸ்ட் வாகனத்தின் முக்கிய அம்சமே, மேற்கூரை இல்லாமல், மடக்கக்கூடிய முன்பக்க கண்ணாடி உடன் வில்லீஸ் ஜீப்கள் போன்று காட்சியளிப்பதாகும்.

வில்லீஸ் ஜீப்களுக்கே டஃப் கொடுக்கும் தோற்றத்தில் தார் வாகனம்

அத்துடன், இத்தகைய தோற்றத்திற்கு ஏற்ப வாகனத்தில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, இத்தகைய வாகனத்தில் இருந்து வெளியேறவும், உள்ளே நுழையவும் ஆண்கள் பெரும்பாலும் கதவுகளை பயன்படுத்த விரும்பமாட்டார்கள். கதவுகளை தாண்டி குதித்து உள்ளே நுழையவே முயல்வர். அத்தகைய முரட்டுத்தனமான ஹேண்ட்லிங்கிற்கு தார் வாகனத்தின் வழக்கமான கதவுகள் ஏற்றவைகளாக இருக்காது என்பதால், மத்தியில் தடிமனான உலோக பகுதியை கொண்ட இரும்பு குழாய் கதவு இந்த மாடிஃபை தாரில் பொருத்தப்பட்டுள்ளது.

இவை தவிர்த்து மற்றவை அனைத்தும் வழக்கமான மஹிந்திரா தார் வாகனத்தில் இருப்பவையே. இவ்வாறான ஜீப் வாகனத்தில் சுற்றுச்சூழலுடன் இணைந்தவாறு, எதிர்வரும் காற்றை அனுபவித்தவாறு ஒரு டிரைவ் செல்ல யாருக்கு தாங்க பிடிக்காது? இந்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாடிஃபிகேஷன்களை இரண்டு பத்தியில் கூறிவிட்டோம். பார்ப்பதற்கும் இந்த மாடிஃபிகேஷன் வேலைப்பாடுகள் எளிமையானவைகளாகவே தெரியும். ஆனால் இதனை மேற்கொண்டவர்களுக்கே எதிர்கொண்ட சிரமங்கள் தெரியும்.

வில்லீஸ் ஜீப்களுக்கே டஃப் கொடுக்கும் தோற்றத்தில் தார் வாகனம்

Image Courtesy: KAM Customs

ஏனெனில் ஒரு சில ஸ்டிக்கர்களை ஒட்டுவது போன்ற மாடிஃபை வேலை கிடையாது இது. ஒரு வாகனத்தின் முக்கியமான பாகங்களே அதன் மேற்கூரை, கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் தான். இவை மூன்றையும் நீங்கும்போது அந்த வாகனத்தை அதே தோற்றத்தில் மாறாமல் கொண்டுவருவது சற்று சிரமமான காரியம் ஆகும். குறிப்பாக மேற்கூரையை தாங்கி நிற்கும் பில்லர்களை உடைத்து நீக்கும்போது கூடுதல் கவனம் தேவை. சற்று பிசுறு தட்டினாலும் வாகனத்தின் தோற்றம் ஏடாக்கூடமாக மாறிவிடும்.

சரி, இவ்வளவு சிரமப்பட்டு இவ்வாறான தோற்றத்திற்கு மாற்றிவிட்ட பின்பு எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைத்தால், அது உங்கள் அறியாமையை காட்டுகிறது. ஏனெனில் எவரொருவருக்கும் பார்த்தவுடனே தெரிந்திருக்கும் இந்த தார் வாகனத்தை மழைக்காலத்தில் உபயோகப்படுத்த இயலாது என்பது. மழை, வெயில் என எல்லா காலங்களிலும் இந்த வாகனத்தை முறையாக பாதுகாக்க ஒரு கூடாரம் அவசியம். ஒருவேளை மழையில் நனைய நேர்ந்தால், டேஸ்போர்டு, ஸ்டேரிங் சக்கரம் மற்றும் மைய கன்சோல் பகுதி நாள் ஆக ஆக சேதமடையும். அத்துடன் வளைவான சாலையில் சொல்லும்போது வாகனம் கவிழ்வதற்கும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Customised 2nd gen mahindra thar turned into willys jeep
Story first published: Thursday, January 26, 2023, 9:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X