இதுவரையில் இல்லாத உச்சம்... ஒரே மாதத்தில் இத்தனை க்ரெட்டா கார்கள் விற்பனையா!! ஹூண்டாயை கையில் பிடிக்க முடியாதே

நம் இந்திய மக்களின் தேவை மெல்ல மெல்ல பட்ஜெட் விலை கொண்ட கார்களில் இருந்து சற்று பிரீமியம் தரத்திலான கார்களின் பக்கம் திரும்பி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதும் ஒவ்வொரு மாதத்திலும் அதிகம் விற்பனையாகும் கார்களாக பட்ஜெட் விலை கார்களே உள்ளன என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதேநேரம் ரூ.10 லட்சத்திற்கு மேல் விலை கொண்ட கார்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் இன்னும் சில வருடங்களில் பட்ஜெட் விலை கார்களை காட்டிலும் இவ்வாறான பிரீமியம் தர கார்கள் அதிகம் விற்பனையாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. இதற்கு மிக சிறந்த உதாரணம் ஹூண்டாய் க்ரெட்டாவின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை ஆகும். ஏனெனில், இந்திய சந்தையில் ஹூண்டாய் மோட்டார்ஸின் மிகுந்த நம்பிக்கைக்குரிய மாடலாக கடந்த சில வருடங்களாக விளங்கி வரும் க்ரெட்டா கடந்த 2023 ஜனவரி என்ற ஒரே மாதத்தில் இதுவரையில் எப்போதும் இல்லாத உச்சமாக சுமார் 15,037 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் இத்தனை ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனையா!!

இந்தியாவில் முதன்முதலாக 2015 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா அப்போதில் இருந்து 2020 பிப்ரவரி மாதம் வரையில் மொத்தமாக 4,67,030 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட அந்த 5 வருட காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட க்ரெட்டா கார்களின் எண்ணிக்க்கை இதுவாகும். அதன்பின் 2020 மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் க்ரெட்டாவின் 2ஆம் தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது

2020 மார்ச் மாதத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் அந்த மாதத்தில் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கியது. இதன் காரணமாக ஏறக்குறைய 1.5 மாத காலத்திற்கு தொழிற்சாலைகளும், கார்களை விற்பனை செய்யும் டீலர்ஷிப் மையங்களும் கூட மூடப்பட்டு இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் அறிமுகமாகினாலும், 2020 மே மாதத்தில் இருந்து நிலைமை ஓரளவிற்கு சீரான பிறகு எதிர்பார்த்ததை போல் க்ரெட்டாவின் விற்பனை எகிற துவங்கியது.

ஒரே மாதத்தில் இத்தனை ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனையா!!

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், அதற்கடுத்த சில மாதங்களிலேயே அதிகம் விற்பனையாகும் இந்தியாவின் நம்பர்.1 எஸ்யூவி கார் என்ற பெயரை ஹூண்டாய் க்ரெட்டா பெற்றது. 2020 மார்ச் மாதத்தில் இருந்து கடந்த 2023 ஜனவரி மாதம் வரையில் மொத்தமாக 3,71,267 க்ரெட்டா கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது வெறும் 3 வருடங்களில் எட்டப்பட்டவை ஆகும். இதில் இருந்து பார்க்கும்போது முந்தைய தலைமுறையை காட்டிலும் புதிய க்ரெட்டாவின் விற்பனை வேகமாக உள்ளதை அறியலாம்.

ஒட்டு மொத்தமாக பார்த்தோமேயானால், 5-இருக்கை மிட்-சைஸ் எஸ்யூவி காரான க்ரெட்டா இந்தியாவில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 8.3 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஹூண்டாய் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.84 லட்சத்தில் இருந்து ரூ.19.13 லட்சம் வரையில் உள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் புதிய அப்டேட்களுடன் 2023 க்ரெட்டா காரை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது.

ஒரே மாதத்தில் இத்தனை ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனையா!!

புதிய அப்டேட்களின் காரணமாக காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.20,000மும், டீசல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.45,000மும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்புகளுக்கு ஏற்ப 6 ஏர்பேக்குகளை நிலையான அம்சமாக பெற்று வந்துள்ள 2023 க்ரெட்டா காரில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ரியர் டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சீட்பெல்ட் உயரம் உள்ளிட்டவைவும் ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஹூண்டாய் க்ரெட்டாவில் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என 3 விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவை மூன்றும் புதிய 2023 க்ரெட்டாவில் ரியல் டிரைவ் எமிஷன்ஸுக்கு இணக்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிமுகத்தின்போது ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அத்துடன் பெட்ரோல் என்ஜின்கள் இனி இ20 என்ற 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai revealed creta has recorded domestic tally in jan 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X