யூஸ்டு காரை வாங்கும்போது இந்த 5 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! தலையில் நல்லா மொளகா அரைச்சிடுவாங்க...

புதிய பிராண்ட் காரை வாங்குவதாக இருந்தாலும் சரி, பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதாக இருந்தாலும் சரி வாழ்க்கையிலேயே முதல்முறையாக காரை வாங்குகிறீர்கள் என்றால், யாராக இருந்தாலும் சற்று குழப்பம் ஏற்பட தான் செய்யும். அத்தகைய நேரத்தில் பலரது யோசனைகள் நமக்கு உதவியாக இருக்கும். சிலர் அருகில் இருக்கும் டீலர்ஷிப் மையத்தை கூட மொபைல் போனிலோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொண்டு பேசுவது உண்டு.

புத்தம் புதிய காரை வாங்கும்போதே இவ்வாறு என்றால், பயன்படுத்தப்பட்டு சில காரணங்களினால் விற்கப்படும் யூஸ்டு கார்களை வாங்கும்போது அதனை காட்டிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுதல் அவசியம். ஆதலால், பழக்கம் இல்லாத/ முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து காரை வாங்குவதை காட்டிலும் நன்கு பழக்கப்பட்ட நண்பர் அல்லது உறவினர்களிடம் இருந்து யூஸ்டு காரை வாங்குவது நல்லது.

யூஸ்டு காரை வாங்கும்போது இந்த 5 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!!

அப்போதுதான் ஏதேனும் பிரச்சனையென்றால் உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ள இயலும். இல்லையெனில், அங்கீகரிக்கப்பட்ட யூஸ்டு கார் விற்பனை தளங்கள் இந்தியாவில் ஏகப்பட்டவை உள்ளன. அவற்றின் வாயிலாக காரை வாங்கலாம். இவ்வாறு எந்த இடத்தில் இருந்து வாங்கினாலும் சரி, யூஸ்டு காரை வாங்கும்போது நம்மில் சிலர் சில தவறுகளை செய்துவிடுவது உண்டு. அந்த தவறுகளை தவிர்ப்பது நல்லது. அல்லது குறைந்தப்பட்சம் கீழ்காணும் 5 தவறுகளை ஆவது செய்துவிடாமல் இருப்பது நல்லது.

1. எரிபொருள் திறனை அறியாதது

யூஸ்டு காரை வாங்கும்போது அது வழங்கும் மைலேஜை முக்கியமாக பார்த்தல் அவசியமாகும். எந்தவொரு காரும் பயன்படுத்த பயன்படுத்த மைலேஜ் குறைவது வழக்கமே. ஆதலால் செய்திகளில் பார்த்த மைலேஜை யூஸ்டு காரில் எதிர்பார்க்காதீர்கள். பயன்படுத்தியவரிடம் இருந்து நேரடியாக வாங்குகிறீர்கள் என்றால், அவரிடமே மைலேஜ் குறித்த விபரங்களை கேட்டறியவும். அதன்பின், வாய்ப்பு கிடைத்தால் காரை ஓட்டி பார்த்துவிடவும்.

யூஸ்டு காரை வாங்கும்போது இந்த 5 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!!

2. முறையான ஆய்வுகளை தவிர்ப்பது

ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த யூஸ்டு காரை வாங்கும்போது முழுமையாக & விரிவாக அந்த காரை ஆய்வு செய்து பார்த்தல் வேண்டும். டீலரிடம் இருந்து யூஸ்டு காரை வாங்கும்போது, அந்த காரில் உள்ள/இருந்த பழுதுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் குறித்த விபரங்கள் டீலரிடம் இருக்கும். அவ்வாறான தகவல்கள் இல்லையெனில், நீங்களே சொந்த பணத்தில் மெக்கானிக் ஒருவரை அழைத்து செல்வது சிறந்தது.

3. எல்லா இடங்களிலும் விசாரிக்காதது

புத்தம் புதிய காரை வாங்கும்போது 1 அல்லது 2 இடங்களில் விசாரிப்பது போதுமானது. ஆனால் யூஸ்டு கார் விஷயத்திற்கு வரும்போது, நீங்கள் முடிந்த அளவிற்கு எல்லா இடங்களிலும் தீர விசாரித்தல் அவசியம். அருகில் உள்ள டீலர்களிடம் மட்டுமின்றி இணையத்திலும் பல்வேறு இணைய பக்கங்களில் ஒரே வயதுடைய குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலைகளை ஒப்பிட்டு பார்க்கலாம். இவ்வாறு ஒப்பிட்டு பார்ப்பதற்கு ஆன்லைனிலேயே ஏகப்பட்ட வசதிகள் உள்ளன.

யூஸ்டு காரை வாங்கும்போது இந்த 5 தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!!

4. டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்காதது

ஏற்கனவே கூறியதுபோல், யூஸ்டு காரின் அப்போதைய மைலேஜை அறிய டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தல் மிக சிறந்த வழி ஆகும். அதுமட்டுமின்றி, டெஸ்ட் டிரைவ்கள் காரில் இருக்கும் மற்ற குறைகள் மற்றும் பராமரிப்பு தேவைகளையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும். தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வெளிவரும் பிராண்ட்டின் புதிய காரையே டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் சூழலில், பயன்படுத்தப்பட்ட காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தல் மிக அவசியமாகும்.

5. முந்தைய சர்வீஸ் வரலாற்றை காணாதது

யூஸ்டு கார்களில் பொதுவாகவே சில பல குறைகள் இருப்பது சகஜமே. இருப்பினும், காரை சிறந்த விலையில் விற்பதற்காக உரிமையாளர்/டீலர் இதுவரையில் காரில் மேற்கொள்ளப்பட்ட சர்வீஸ் வேலைப்பாடுகளை மறைக்க முயல்வர். ஆதலால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கார் சர்வீஸ்கள் குறித்த விபரங்களை முறையாக கேட்டு பெற்று கொள்வது சிறந்தது. நாம் எதிர்பார்க்காத சர்வீஸ்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தால், காரின் மதிப்பை மேலும் குறைத்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Important things to avoid while buying used cars
Story first published: Wednesday, January 18, 2023, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X