மாருதி சாயம் எல்லாம் வெளுக்க போகுது! மத்திய அரசே எடுத்த முடிவால் குஷியில் டாடா நிறுவனம்

இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் மையங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை டெஸ்ட் செய்ய ஏதுவாக இறக்குமதிக்காக இருந்த 252 சதவீத வரியை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்

ஒரு வாகனம் விற்பனைக்கு வர வேண்டும் என்றால் அந்த வாகனம் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் கட்டாயம் இல்லை என்றாலும், இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் கிராஷ் டெஸ்டில் பெறும் ஸ்டார் ரேட்டிங்கை பொருத்து அந்த கார்களின் விற்பனை அதிகரிக்கும். இதனால் பல நிறுவனங்கள் தங்கள் கார்களை கிராஷ் டெஸ்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

மாருதி சாயம் எல்லாம் வெளுக்க போகுது! மத்திய அரசே எடுத்த முடிவால் குஷியில் டாடா நிறுவனம்

இந்தியாவில் கிராஷ் டெஸ்ட்டிற்கான தளம் இல்லை உலக அளவில் 5 நாடுகள் தான் கிராஷ் டெஸ்டிற்கு பிரபலமான நாடுகளாக இருக்கிறது. இங்கிலாந்தில் 2 மையங்கள் கிராஷ் டெஸ்டிற்காக அமைக்கப்பட்டுள்ளன. இது போக ஜெர்மனி, ஜப்பான், சீனா, தைவான், ஆகிய நாடுகளில் இந்த கிராஷ் டெஸ்ட் மையங்கள் இருக்கின்றன.

உலகின் பிற நாடுகளில் உள்ள கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார்களை இந்த நாடுகளுக்கு அனுப்பித் தான் கிராஷ் டெஸ்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் பாரத் கிராஷ் டெஸ்ட் மையத்தை உருவாக்கத் திட்டமிட்டது. இதற்காக விதிமுறைகளை எல்லாம் வகுத்தது. ஆனால் இந்த கிராஷ் டெஸ்ட் மையங்கள் அமைக்கப்பட்டால் இந்தியாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களின் கார்கள் டெஸ்ட் செய்யலாமே தவிர வெளிநாடுகளிலிருந்து கார்கள் கொண்டு முடியாத சூழ்நிலை இருந்தது.

இதற்குக் காரணம் இப்படியாக கிராஷ் டெஸ்ட் செய்வதற்காக இந்தியாவிற்குள் ஒரு காரை இறக்குமதி செய்தால் 252 சதவீதம் வரி என்ற சட்டம் இருந்தது. அதனால் மிகப்பெரிய செலவு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால் அந்நிறுவனம் இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் செய்ய விரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 1ம் தேதி மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இப்படியாக இந்தியாவிற்கு கிராஷ் டெஸ்ட் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் கார்களை இறக்குமதி செய்தால் அதற்காக விதிக்கப்பட்டும் 252 சதவீத வரியை முற்றிலுமாக ரத்து செய்து கிராஷ் டெஸ்ட்டிற்கு இலவசமாகவே காரை இறக்குமதி செய்யலாம் எனக் கூறியுள்ளார். இது மத்திய ஹெவி இன்டஸ்ட்ரீஸ் துறை அமைச்சர் மகேந்திரநாத்பாண்டே தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச அளவில் கிராஷ் டெஸ்டிங் செய்யும் நாடுகளின் பட்டியலில் 6வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்தியா சர்வதேச அளவில் கிராஷ் டெஸ்டிங் மையமாக மாறவுள்ளது. கொரியா, ஈரான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கார்களை கிராஷ் டெஸ்ட் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு இது சர்வதேச அளவில் கிடைத்த ஒரு மகுடமாக இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் இந்த கிராஷ் டெஸ்ட் மையங்கள் மிக முக்கிய மைல் கல்லாக அமையும். இந்த கிராஷ் டெஸ்ட் மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் நாம் குலோபல் என்கேப் கிராஷ் டெஸ்டிங்கை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்தியாவில் அத்தனை கார்களும் விற்பனைக்கு முன்பே கிராஷ் டெஸ்ட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Indian govt removes 252 percent customs duty for car testing in India
Story first published: Monday, February 6, 2023, 9:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X