இந்த கார் வந்ததுக்கு அப்புறம் யாரும் டூவீலர் வாங்க மாட்டாங்க! இந்தியாவே இதுக்காகதான் தவம் கெடக்குது!

டாடா நானோ காரை விட சிறியதாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை இஸ்ரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கார் கடும் போக்குவரத்து நெருக்கடியிலும் பைக் போலப் புகுந்து புகுந்து செல்லக்கூடிய அளவிற்கு சிறியது. அதே நேரம் காரில் உள்ள அம்சங்கள் எல்லாம் இதிலும் இருக்கிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

உலகளவில் இன்று பெரு நகரங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் போக்குவரத்து நெருக்கடி தான். நகரமயமாக்கல் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே பகுதியில் வாழத் துவங்கிவிட்டனர். இதனால் குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகிவிட்டது. இதனால் பெருநகரங்களில் தனி நபர் பயணிக்க கார்கள் ஏற்ற வாகனமாக இருக்காது. பைக் அல்லது ஸ்கூட்டர்களை தான் மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

இந்த கார் வந்ததுக்கு அப்புறம் யாரும் டூவீலர் வாங்க மாட்டாங்க! இந்தியாவே இதுக்காகதான் தவம் கெடக்குது!

கார்கள் பெரிதாக இருப்பதால் சாலை நெருக்கடிக்குள் சிக்கிச் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல கால தாமதமாகிறது. இதனால் டூவீலர்களை தேர்வு செய்தாலும், தூசு, வெயில், மழை எனப் பல பிரச்சனைகள் டூவீலர் ஓட்டுநர்களுக்கு இருக்கிறது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் இஸ்ரேல் எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான சிட்டி டிரான்ஸ்ஃபார்மர்ஸ் நிறுவனம் புதிய வாகனம் ஒன்றைத் தயாரித்துள்ளது.

சிட்டி டிரான்ஸ்ஃபார்மர்ஸ் நிறுவனம் தனது சிறிய அர்பன் இவி காராக சிடி-2 என்ற காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் முழுமையாக பேட்டரி பவரில் இயங்கும் காராகும். கடும் போக்குவரத்து நெருக்கடியிலும், புகுந்து புகுந்து பைக் போலச் செல்ல ஏற்ற கார். இதுமட்டுமல்ல இந்த காரை பார்க்கச் செய்ய அதிகமான இடமும் தேவையில்லை குறைவான இடத்தில் பார்க் செய்ய முடியும். இந்த காரின் அகலம் வெறும் 1 மீட்டர் தான்.

இந்தியாவில் தற்போது குறைந்த விலை இவி காராக டாடா டியாகோ இவி கார் இருக்கிறது. இந்த காரின் அகலம் 1.66 மீட்டர் அதை விட இந்த கார் சிறியது. ஒரு கன்வென்ஷனல் காரை பார்க் செய்யத் தேவையான இடத்தில் இந்த காரில் 4 காரை நிறுத்தி விடலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு நபர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல 600 கிலோ ப்ட்டரி கொண்ட பெரிய காரை எடுத்துச் செல்கின்றனர். இந்த கார் வந்துவிட்டால் தனி நபர் செல்ல ஏற்றதாக இந்த கார் இருக்கும்.

தற்போது பி செக்மெண்ட் கார்கள் கிட்டத்தட்ட அழிந்து கொண்டே வருகின்றன. மக்கள் பல எஸ்யூவி கார்கள் பக்கம் நகர்ந்து கொண்டேயிருக்கின்றனர். ஆனால் இந்த கார் அதை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என அந்நிறுவனத்தினர் கூறுகின்றனர். சிட்டி டிரான்ஸ்ஃபார்மனர் சிடி-2 கார் குடும்பத்தினர் எல்லாம் ஒன்றாகச் செல்லக்கூடிய கார் எல்லாம் கிடையாது. டிரைவர் போக ஒரு சக பயணிப் பின் சீட்டில் அமர்ந்து செல்லக்கூடிய கார் தான் இது.

இந்த கார் மொத்தமே 450 கிலோ எடை கொண்டது தான். பல உயர் ரக இவி கார்களின் பேட்டரி எடையே இதை விட அதிகமாக இருக்கும். இந்த கார் முழு சார்ஜில் 180 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த கார் அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை சீறிப் பாயும் திறனும் கொண்டது.

சிட்டி டிரான்ஸ்ஃபார்மர்ஸ் நிறுவனம் இந்த சிடி2 காரின் தயாரிப்பை 2024ம் ஆண்டு துவங்கவுள்ளது. மேற்கு ஐரோப்பா பகுதியில் உள்ள அந்நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலையில் இந்த கார் தயாராகவுள்ளது. இந்த கார் விற்பனைக்கு வரும் போது 16 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனைக்கு வரும் அதாவது இந்திய மதிப்பில் ரூ13 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கு மானியம் கிடைத்தால் இதை விடக் குறைந்த விலைக்கு இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் தற்போது ஐரோப்பா பகுதியில் தான் அறிமுகமாகவுள்ள நிலையில் இப்படியான காருக்கு இந்தியாவில் அதிகமான தேவையிருக்கிறது. இந்தியாவில் இந்த கார் வந்தால் இந்தியா போன்ற அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக இருக்கும்.இதனால் போக்குவரத்து நெருக்கடிகள் குறையும். சிட்டி பகுதிகளில் நிலவும் பார்க்கிங் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். இந்த கார் இந்தியாவிற்கு வந்தால் நீங்கள் வாங்குவீர்களா?

Most Read Articles
English summary
Isreli ev startup city transformers ct2 car range and price details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X