இன்னோவாலாம் இனி வேஸ்ட் இனிமே இந்த கார்தான் பெஸ்ட்னு நினைச்சுட்டாங்க போல! புக்கிங் கண்ட மேனிக்கு குவியுது

கியா நிறுவனத்தின் கடந்த ஜனவரி மாத விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதன் படி கியா கார்னிவெல் காருக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளதும், நல்ல டிமாண்ட் இருப்பதும் தெரியவந்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் இதை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனம் இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்ட பல தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கியா நிறுவனத்தின் ஜனவரி மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் இருக்கிறது.

இன்னோவாலாம் இனி வேஸ்ட் இனிமே இந்த கார்தான் பெஸ்ட்னு நினைச்சுட்டாங்க போல! புக்கிங் கண்ட மேனிக்கு குவியுது

கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 28,634 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 48 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது கடந்தாண்டு ஜனவரி மாதம் மொத்தமே 19,319 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இது மட்டுமல்ல கியா நிறுவனம் கடந்த மாதம் வேறு ஒரு சாதனையையும் செய்துள்ளது. அந்நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்பனை செய்யத் துவங்கி 4 மாதங்களில் 6.5 லட்சம் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய சாதனையைச் செய்தது கியா நிறுவனம் மட்டுமே.

கியா நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பொருத்தவரை செல்டோஸ் மற்றும் சோனட் கார்களின் விற்பனை தான் அதிகமாக இருந்தாலும் கடந்த ஜனவரி மாதம் கியா கார்னிவெல் காரின் விற்பனை நம்மை வியக்க வைத்துள்ளது. பிரிமியம் செக்மெண்டில் கியா கார்னிவெல் கார் நல்ல விற்பனையைப் பெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 1003 கியா கார்னிவெல் எம்பிவி கார்கள் விற்பனையாகியுள்ளது.

இத்தனைக்கும் இந்த காருக்கு தள்ளுபடி அறிவிப்போ அல்லது ஆஃபர்களே எதுவும் கிடையாது. அதுவும் இந்த கியா கார்னிவெல் காரின் டாப் வேரியன்டிற்கு தான் கிராக்கி அதிகமாக இருக்கிறது. கியா நிறுவனம் இந்த காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் கியா நிறுவனம் இந்தியாவிற்குக் கொண்டு வந்த இரண்டாவது காராகும்.

இந்த கார் மார்கெட்டில் ரூ30.99-ரூ35.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் பிரஸ்டீஜ், லிமோஷின், மற்றும் லிமோஷின் ப்ளஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகிறது. இது வெறும் 7 சீட்டர் காராக மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

இதில் லிமோஷின் வேரியன்டில் பிரிமியம் அம்சங்கள் இருக்கிறது. 8 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஓவர்-தி-ஏர் மேப் அப்டேட்டகள், யூவிஓ கனெக்ட், இரண்டாம் வரிசையில் கால்களுக்கான சப்போர்ட் உடன் லெதர் சீட்கள், ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளன. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 200 பிஎஸ், 440 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது போக 10.1 இன்ச் பின்சீட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏர் ஃப்யூரிஃபையர், ஹார்மன் கோர்டான் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 18 இன்ச் கிரிஸ்டல் கட் அலாய் வீல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், அட்ஜெஸ்டபுள் பவர்டு வென்டிலேட்டட் சீட்கள், லெதர் வேர்ப்பு ஸ்டியரிங் வீல் மற்றும் கியர் நாப், இன்டீரியரில் உட் ஃபினிஷ், டயர் பிரஷர் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

கியா நிறுவனம் கடந்த ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கேஏ4 என்ற கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தான் கியா கார்னிவெல் காரின் 4வது தலைமுறை காராக கருதப்படுகிறது. இந்த கார் இன்னும் தயாரிப்புக்கு தயாராகவில்லை. இந்த கார் எதிர்காலத்தில் கார்னிவெல் காருக்கு பதிலாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia carnival mpv getting high demand on jan 2023
Story first published: Friday, February 3, 2023, 9:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X