டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலெக்ட்ரிக் கார் (Electric Car) சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள், கடந்த குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) தொடங்கப்பட்டது.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் முதற்கட்டமாக இந்தியாவின் 34 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழலில், முன்பதிவு தொடங்கப்பட்டு வெறும் 5 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன.

டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

ஏன் இவ்ளோ புக்கிங்?

பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 15.99 லட்ச ரூபாய் மட்டுமே (எக்ஸ் ஷோரூம்). இந்த காருக்கு இது மிகவும் சிறப்பான விலை நிர்ணயமாக கருதப்படுகிறது. எனவேதான் வாடிக்கையாளர்கள் பலரும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். EL மற்றும் EC என 2 வேரியண்ட்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

டெலிவரி எப்போ சார்?

இதில், EL வேரியண்ட்டின் டெலிவரி பணிகள் வரும் மார்ச் மாதம் தொடங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் EC வேரியண்ட்டின் டெலிவரி பணிகள் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் ஆரம்பிக்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 34.5 kWh மற்றும் 39.4 kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும்.

டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!

சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!

இதில் 34.5 kWh பேட்டரி தொகுப்பை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 375 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரத்தில் 39.4 kWh பேட்டரி தொகுப்பை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 456 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிலோ மீட்டர்கள் ஆகும்.

சார்ஜ் ஏற எவ்ளோ நேரம்ப்பா ஆகும்?

Fun, Fast மற்றும் Fearless என மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 3 டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதே நேரத்தில் 7.2 kW சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் முழுமையாக நிரம்புவதற்கு 6.30 மணி நேரம் ஆகும். 3.3 kW சார்ஜர் இதை செய்வதற்கு 13 மணி நேரத்தை எடுத்து கொள்ளும்.

வசதிகளையும் தாராளமா குடுத்திருக்காங்க ப்ரோ!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில், 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்ரூஃப் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட் உடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் என ஏராளமான வசதிகளை எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்கியுள்ளது.

டாடாவுக்கு பெரிய செக்!

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV), எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான், இந்தியாவில் தற்போது மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் காராக உள்ளது. ஆனால் முன்பதிவுகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் குவிந்திருப்பதன் மூலம், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra xuv400 ev receives over 10000 bookings all details here
Story first published: Monday, January 30, 2023, 23:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X