மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!

மாருதி சுஸுகியின் புதுமுக வரவாக ஃப்ரான்க்ஸ் இருக்கின்றது. இந்த காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வைத்தே மாருதி சுஸுகி நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தியது. காட்சிப்படுத்திய கையோடு அன்றைய தினமே காருக்கான புக்கிங் பணிகளையும் நிறுவனம் தொடங்கியது. இப்போது இந்த காருக்கு மிக சூப்பரான எண்ணிக்கையில் புக்கிங் குவிந்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரை விற்பனைக்காக ஷோரூம்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் ஷோரூம்களில் ஃப்ரான்க்ஸ் கார்கள் நிற்கும் படங்கள் வெளியாகி உள்ளன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரை பிரீமியம் தர எஸ்யூவி ரக வாகனமாக உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், நெக்ஸா ஷோரூம்களிலேயே ஃப்ரான்க்ஸ் அதன் தரிசனைத்தை வழங்கத் தொடங்கி இருக்கின்றது.

ஃப்ரான்க்ஸ்

நெக்ஸா ஷோரூமில் தரிசனம்

மாருதி சுஸுகியின் பிரீமியம் தர வாகனங்களுக்கான பிரத்யேக விற்பனையகமே நெக்ஸா ஷோரூம்கள் ஆகும். இங்கேயே ஆட்டோ எக்ஸ்போவிற்கு அடுத்தபடியாக ஃப்ரான்க்ஸ் காட்சியளிக்கத் தொடங்கி இருக்கின்றது. வெகு விரைவில் இந்த காரை மாருதி சுஸுகி டெஸ்ட் டிரைவ் வழங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வருகின்ற ஏப்ரல் மாதத்திற்குள் இதுகுறித்த தகவலை மாருதி சுஸுகி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கவர்ச்சிகரமான ரூஃப்

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புகழ்பெற்ற பலேனோ காரை தழுவியே ஃப்ரான்க்ஸை உருவாக்கி இருக்கின்றது. இருப்பினும் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கட்டுமஸ்தான தோற்றம் ஆகியவற்றில் இந்த கார் புதிதாக காட்சியளிக்கின்றது. இதன் புதிய தோற்றத்திற்காக வேவ் ரக க்ரில் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன், மிகவும் கவர்ச்சிகரமான ரூஃபும் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஃப்ரான்க்ஸ்

நியூ ஏஜ் ஏரோடைனமிக் தோற்றம்

கூபே கார்களில் காணப்படுவதைப் போல் இதன் பின் பகுதி தயார் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி தனது நியூ ஏஜ் ஏரோடைனமிக் டிசைனைப் பயன்படுத்தி இந்த காரை உருவாக்கியிருக்கின்றது. இதன் விளைவாக அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தில் ஃப்ரான்க்ஸ் காட்சியளிக்கின்றது. இதுதவிர, 9 அங்குல ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எச்டி தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டு இருக்கும். இதில் ஃபிங்கர் பிரிண்ட் அக்சஸ் வழங்கப்பட்டிருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள் வேற லெவல்

இத்துடன், ஒயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் திரை, செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் பூஸ்டர்ஜெட் மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

ஃப்ரான்க்ஸ்

இதுமட்டுமில்லைங்க, ஒட்டுமொத்தமாக எட்டு விதமான நிற தேர்வுகளிலும் ஃப்ரான்க்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. ஆர்க்டிக் ஒயிட், கிராண்டியர் கிரே, எர்தன் பிரவுன், எர்தன் பிரவுன் - ப்ளூயிஸ் பிளாக், ஒபுலண்ட் ரெட், ஒபுலண்ட் ரெட் - ப்ளூயிஸ் பிளாக், ஸ்பிளெண்டிட் சில்வர் மற்றும் ஸ்பிளெண்டிட் சில்வர் - ப்ளூயிஸ் பிளாக் ஆகியவை நிற தேர்வுகளிலேயே ஃப்ரான்க்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

இதை வைத்து பார்க்கையில் சிங்கிள் டோன் மற்றும் டூயல் டோன் என இருவிதமான நிற தேர்வுகளில் ஃப்ரான்க்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் மாருதி சுஸுகி நிறுவனம் ஃப்ரான்க்ஸ் காரை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் முதலில் ஆஸ்திரேலியா நாட்டிற்கே இந்தியாவில் இருந்து ஃப்ரான்க்ஸ் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னரே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாராவின் ஏற்றுமதி பணிகளை தொடங்கியது. லத்தின் அமெரிக்காவிற்கே இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த கார் மாடல்களைத் தொடர்ந்து விரைவில் அறிமுகமாக இருக்கும் ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னியையும் மாருதி சுஸுகி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Maruti fronx arrives dealer showroom
Story first published: Saturday, February 4, 2023, 19:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X