இவ்ளோ கார்களில் பாதுகாப்பு பிரச்சினையா! மாருதிக்கு அடி மேல் அடி! நம்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் கலக்கம்!

மாருதி நிறுவனம் தனது 11,000 கிராண்ட் விட்டாரா கார்களை சீட் பெல்ட் மவுண்ட் பிராக்கெட்ஸ் பிரச்சனை காரணமாகத் திரும்ப அழைத்துள்ளது. ஏற்கனவே ஏர்பேக் பிரச்சனை காரணமாகத் திரும்ப அழைக்கப்பட்ட நிலையில் தற்போது சீட் பெல்ட் மவுண்ட் பிரச்சனை காரணமாக இந்த கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி. இந்நிறுவனம் எல்லா செக்மெண்டிலும் காரை விற்பனை செய்து வந்தாலும் மக்கள் அதிகம் விரும்பும் செக்மெண்டான எஸ்யூவி செக்மெண்டில் மாருதி நிறுவனத்தால் பெரியதாக ஜொலிக்க முடியவில்லை. அந்நிறுவனம் கடந்தாண்டு வரை பிரெஸ்ஸா என்ற ஒரே காரை தான் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் தனது எஸ்யூவி செக்மெண்ட் பலத்தை அதிகரிக்கக் கடந்தாண்டு இறுதியில் கிராண்ட் விட்டாரா என்ற ஹைபிரிட் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் மாருதி நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த கார்களில் பிரச்சனை இருப்பதை அறிந்து அந்த கார்களை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியிலிருந்து நவம்பர் 15ம் தேதிக்குள் டெலிவரியான கார்களை எல்லாம் இந்நிறுவனம் திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் இந்த காலகட்டத்திற்குள் தயாரித்து விற்பனையான கார்களில் சீட் பெல்ட் மவுண்டிங் பிராக்கெட்டில் பிரச்சனை இருப்பதாக அந்நிறுவனம் சந்தேகிப்பதாகவும், இது நீண்ட கால உழைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும் என இந்நிறுவனம் கருதுவதாலும் இந்த கார்களை திரும்ப அழைத்துள்ளது.

இந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கார்களை வாங்கியவர்கள். அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாருதியின் சர்வீஸ் சென்டருக்கு காரை கொண்டு சென்றால் அங்கு காரில் உள்ள இந்த சீட் பெல்ட் பிராக்கெட் குறித்த பிரச்சனையை செக் செய்து அதைச் சரி செய்து கொடுத்துவிடுவார்கள். இதற்கு வாடிக்கையாளர் பணம் எதுவும் செல்ல தேவையில்லை. தாங்கள் செய்த பிரச்சனையை தாங்களே சரி செய்யும் முயற்சியாக மாருதி நிறுவனம் இதைச் செய்துள்ளது.

கிராண்ட் விட்டாரா எஸ்யூவி கார் திரும்ப அழைக்கப்படுவது இது முதன் முறையல்ல. ஏற்கனவே இந்த காரில் ஏர்பேக் கண்ட்ரோலர் பிரச்சனை காரணமாகத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. தற்போது சீட் பெல்ட் மவுண்ட் பிராக்கெட் காரணமாக மீண்டும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் அறிவித்துள்ள அறிக்கையின்படி இந்த முறை மொத்தம் 11,117 கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக ஏர்பேக் கண்ட்ரோலர் பிரச்சனை வரும் போது மாருதி நிறுவனம் 17,362 கார்களை திரும்ப அழைத்தது. அது கிராண்ட் விட்டாரா மட்டுமல்ல ஆல்டோ கே10, பிரெஸ்ஸா, பலேனோ, எஸ்-பிரஸ்ஸோ, ஈக்கோ போன்ற கார்களையும் திரும்ப அழைத்தது. ஏர்பேக் கண்ட்ரோலர் பிரச்சனை கடந்த 2022 டிசம்பர் 8ம் தேதி முதல் கடந்த 12ம் தேதி வரையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட கார்களில் இந்த பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுச் சரி செய்யப்பட்டுவருகிறது.

இவ்ளோ கார்களில் பாதுகாப்பு பிரச்சினையா! மாருதிக்கு அடி மேல் அடி! நம்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் கலக்கம்!

இதே போல டொயோட்டா நிறுவனமும் தனது கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை திரும்ப அழைத்துள்ளது. இந்த கார்கள் மாருதி பலேனோ மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா காரின் அதே தொழிற்நுட்பம் என்பதால் டொயோட்டா கார்களின் தயாரிப்பிலும் இது நிகழ்ந்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Maruti recalls 11 thousand grand Vitara SUV know the reason
Story first published: Tuesday, January 24, 2023, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X