இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) நடைபெற்றது. இதில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் பல்வேறு கார்களை காட்சிப்படுத்தியது. ஆனால் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) மற்றும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) ஆகிய 2 கார்களும்தான் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இதில் ஃப்ரான்க்ஸ் காரானது, காம்பேக்ட் கூபே எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். வரும் ஏப்ரல் மாதம் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் ஜிம்னி காரானது, லைஃப் ஸ்டைல் ஆஃப் ரோடு எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வரும் மே மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) பிரீமியம் டீலர்ஷிப்கள் மூலமாக இந்த 2 கார்களும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!

புக்கிங் கூரையை பிச்சுகிட்டு கொட்டுது

இந்த 2 கார்களுக்கும் தற்போது முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காருக்கு தற்போது வரை 5,500க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் குவிந்துள்ளன. அதே நேரத்தில் மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு தற்போது வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த 2 கார்களும் சேர்த்து, 20,500க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை குவித்து விட்டன. எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த 2 கார்களும் இந்திய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்

ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் அடிப்படையில்தான் ஃப்ரான்க்ஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 கார்களும் ஹார்ட்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரானது, 5 சீட்டர் மாடல் ஆகும். இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் ட்யூயல் ஜெட் ட்யூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!

இந்த காரில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரை மனதில் வைத்து ஃப்ரான்க்ஸ் காரின் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசதிகளை பொறுத்தவரையில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் கனெக்டட் வசதிகள் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி ஜிம்னி

மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் K15B பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற கார்கள்

ஃப்ரான்க்ஸ் மற்றும் ஜிம்னி தவிர 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் ஏராளமான கார்களை காட்சிக்கு வைத்திருந்தது. இதில், இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் (eVX Electric SUV Concept) முக்கியமானது. அத்துடன் பிரெஸ்ஸா சிஎன்ஜி (Brezza CNG) மற்றும் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வேகன் ஆர் (Flex-Fuel Wagon R) ஆகிய மாடல்களும் மாருதி சுஸுகி நிறுவனத்தால் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டன.

வருகிறது பிரெஸ்ஸா சிஎன்ஜி

இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சிஎன்ஜி கார்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எனவே தொடர்ச்சியாக பல்வேறு கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை மாருதி சுஸுகி களமிறக்கி வருகிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனும் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Maruti suzuki jimny 15000 fronx 5500 bookings
Story first published: Thursday, February 2, 2023, 23:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X