வெறிகொண்டு காத்திருந்திருப்பாங்க போலையே.. மாருதியின் இந்த காருக்கு இப்படி புக்கிங் குவியுது! இத எதிர்பாக்கல!

உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல கலந்துக் கொண்டன. அந்தவகையில், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் வாகன கண்காட்சியில் பங்குபெற்றது. இந்த பங்களிப்பின் ஒரு பகுதியாக நிறுவனம் அதன் புதுமுக மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கார் மாடல்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது.

அந்தவகையில், நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தி வைத்த கார் மாடல்களில் ஜிம்னி (Maruti Suzuki Jimny 5 door SUV) -யும் ஒன்று. இந்த காரை அன்றைய தினமே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இத்துடன், புக்கிங் பணிகளையும் உடனுக்குடன் தொடங்குவதாக அறிவித்தது. இந்தியர்களுக்கு இந்த கார் மீது நீண்ட நாட்களாகவே ஒரு கண் என்று கூறலாம். இதன் விளைவாக காருக்கு புக்கிங் தொடங்கிய உடன் மக்கள் கூட்டமும் குவியத் தொடங்கியது.

மாருதி ஜிம்னி

விலையைகூட மாருதி சுஸுகி இன்னும் அறிவிக்கல

இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த செவ்வாய் கிழமை (ஜனவரி 17) அன்று மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் குவிந்ததாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகின. மாருதி நிறுவனம் இந்த காருக்கான விலையைகூட இன்னும் அறிவிக்காத நிலையிலேயே இத்தகைய மாபெரும் புக்கிங் குவிந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவல் நேற்றைய (ஜனவரி 20) தினம் வெளியாகியது.

தொடர்ச்சியாக குவியும் புக்கிங்

அதாவது, ஜிம்னிக்கு மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஜிம்னிக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் புக்கிங் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருப்பது, இந்திய வாகன துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்னும் இந்த காரை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வராத நிலையிலேயே ப்ரீலான்ச் புக்கிங் இந்த உயரிய எண்ணிக்கையை பெற்றிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றது.

மாருதி ஜிம்னி

காத்திருப்பு காலம் அதிகரிக்கும் அபாயம்

இவ்வாறு தொடர்ச்சியாக புக்கிங் உயர்ந்துக் கொண்டே போனால் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி காருக்கு நிலவுவதை போல் ஜிம்னி மாடலுக்கும் மாதக் கணக்கில் காத்திருக்கும் சூழல் நாட்டில் ஏற்படும் நிலை உருவாகும் என வாகனத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை மஹிந்திரா தார் எஸ்யூவி-க்கு போட்டியாகவே இந்தியாவில் ஜிம்னியை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு மிக சிறந்த போட்டியாளன் என்பதை ப்ரீலான்ச் புக்கிங் வாயிலாக ஜிம்னியும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கின்றது.

எத்தனை வேரியண்டுகளில் எதிர்பார்க்கலாம்

மாருதி நிறுவனம் ஜிம்னியை ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் பிரீமியம் தர வாகனம் என்பதால் நெக்ஸா ஷோரூம் வாயிலாகவே விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. இந்த கார் ஓர் ஆஃப்-ரோடர் ரக வாகனமாக இருந்தாலும், அதில் சிறப்பம்சங்களுக்கு சற்றும் குறைச்சல் இருக்காது என மாருதி தெரிவித்திருக்கின்றது.

மாருதி ஜிம்னி

சிறப்பம்சங்கள் விபரம்

அந்தவகையில், 9 அங்குல ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆர்கேம்ஸ் சரவுண்ட் சிஸ்டம், லெதரால் கவர் செய்யப்பட்ட ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்மார்ட் கீ மற்றும் சாவியில்லாமல் நுழையும் வசதி என எக்கச்சக்க பிரீமியம் தர அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும். இதுதவிர, புஷ் பட்டன் எஞ்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சம், பொத்தான் வாயிலாக கட்டுப்படுத்தக் கூடிய சைடு பார்க்க உதவும் கண்ணாடிகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், ஹெட்லேம்பை கழுவும் அம்சம், எல்இடி பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகள், அலாய் வீல்கள், டார்க் கிரீன் கிளாஸ்கள் உள்ளிட்ட அம்சங்களும் ஜிம்னியில் இருக்கும்.

பாதுகாப்பு அம்சம் மற்றும் மோட்டார் விபரம்

இதேபோல் மாருதி சுஸுகி ஜிம்னி பாதுகாப்பு கருவிகளைத் தாங்கியிருத்தல் விஷயத்திலும் மிக சிறப்பானதாக இருக்கப் போகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மும்முனை சீட் பெல்ட்டுகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், சென்ட்ரல் டூர் லாக்கிங் சிஸ்டம் என பன்முக அம்சங்கள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டாரை பொருத்தவரை மாருதி சுஸுகி ஜிம்னி காரில் 1.5 லிட்டர் கே 15 பி பெட்ரோல் மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது.

எஞ்ஜின் திறன் வெளிப்பாடு விபரம்

இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 104.8 பிஎஸ் பவரையும், 134.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், நிறுவனத்தின் ஆல்கிரிப் ப்ரோ 4X4 தொழில்நுட்பமும் வழங்கப்பட இருக்கின்றது. இவை அனைத்தும் சேர்ந்து மாருதி சுஸுகி காரை வேற லெவல் வாகனமாக பயன்பாட்டின்போது காட்சியளிக்கச் செய்ய இருக்கின்றன. இதுபோன்ற அம்சங்களைத் தாங்கிய வாகனமாக ஜிம்னி வர இருப்பதனாலேயே இப்போதே புக்கிங் ஜிம்னிக்கு குவிந்துக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki jimny receives 5000 pre launch booking
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X