மஹிந்திரா பொலிரோவை வாங்கும் பிளானில் உள்ளவர்கள் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை வாங்கலாம்!! விலையும் குறைவு...

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் சில தோல்வியுற்ற கார்களுள் ஒன்றான டியூவி300-இன் விற்பனை நிறுத்தப்பட்டு அதன் இடத்தை நிரப்பும் பொருட்டு சில வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டதே பொலிரோ நியோ ஆகும். இந்த நிலையில், மஹிந்திரா பொலிரோ நியோ லிமிடெட் எடிசன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பொலிரோ நியோ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார் என்றால், அது பொலிரோ ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 6 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் பொலிரோ வாகனங்கள் வாடிக்கையாளர்களால் வாங்கப்படுகின்றன. இதனாலேயே விற்பனை நிறுத்தப்பட்ட டியூவி300 காரின் இடத்திற்கு கொண்டுவரப்பட்ட வாகனத்திற்கு பொலிரோ நியோ என மஹிந்திரா நிறுவனம் பெயர் வைத்தது.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ ஸ்பெஷல் எடிசன் கார் அறிமுகம்!!

இருப்பினும் தோற்றம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாலோ என்னவோ பொலிரோ நியோ கார்களின் விற்பனை பெரியதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. இந்த நிலையில்தான் பொலிரோ நியோவை மக்கள் மத்தியில் மேலும் கொண்டு சேர்க்கும் பொருட்டு, அந்த காரில் புதிய லிமிடெட் எடிசனை தற்போது மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. பொலிரோ நியோவின் வழக்கமான என்10 வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த புதிய வேரியண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது, அந்த வேரியண்ட்டில் வழங்கப்படும் அத்தனை அம்சங்களும் புதிய லிமிடெட் எடிசனிலும் இருக்கும். அத்துடன் கூடுதலாக காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொலிரோ நியோவின் இந்த புதிய லிமிடெட் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பொலிரோ நியோ என்10 வேரியண்ட்டின் விலை உடன் ஒப்பிடுகையில் இது ரூ.29,000 அதிகமாகும்.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ ஸ்பெஷல் எடிசன் கார் அறிமுகம்!!

அதுவே, டாப் வேரியண்ட்டான என்10 (ஆப்ஷ்னல்)-ஐ காட்டிலும் ரூ.78,000 குறைவு. ரூஃப் ஸ்கை-ராக்ஸ், புதிய ஃபாக் விளக்குகள், எல்இடி டிஆர்எல்-கள் உடன் ஹெட்லேம்ப்கள் மற்றும் அடர் சில்வர் நிறத்தில் ஸ்பேர் வீல் கவர் உள்ளிட்டவற்றுடன் தோற்றத்தில் வழக்கமான பொலிரோ நியோ காரில் இருந்து மாறுப்பட்டதாக இந்த புதிய லிமிடெட் எடிசன் காட்சியளிக்கிறது. அப்படியே உட்பக்கத்திற்கு சென்றால், ஓட்டுனர் இருக்கை உயரம் அட்ஜெஸ்ட்மெண்ட் வசதி உடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முன் இருக்கை பயணிகளுக்கு லம்பர் சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

மைய கன்சோல் பகுதி சில்வர் நிற ஹைலைட்கள் உடன் காட்சியளிக்கிறது. மேலும், முன் மற்றும் பின் இருக்கை வரிசையில் புதியதாக ஆர்ம்ரெஸ்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிஸ்டம் ஆனது ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்டதாக இல்லை. இந்த புதிய வசதிகள் அனைத்திற்கும் சேர்த்துதான் காரின் விலை வழக்கத்தை காட்டிலும் ரூ.29,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ ஸ்பெஷல் எடிசன் கார் அறிமுகம்!!

மற்றப்படி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, க்ரூஸ் கண்ட்ரோல், மஹிந்திரா ப்ளூ சென்ஸ் கனெக்டிவிட்டி செயலி மற்றும் ஸ்டேரிங் சக்கரத்தில் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்டவை வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுனர் இருக்கைக்கு அடியில் பொருட்களை வைத்துக்கொள்ள இடவசதி பொலிரோ நியோவில் வழங்கப்படுகிறது. மஹிந்திராவின் 7 இருக்கைகளை கொண்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி காரான இதில் கடைசி வரிசையில் நேருக்கு நேராக பார்க்கப்பட்ட ஜம்ப் இருக்கைகள் கொடுக்கப்படுகின்றன.

லிமிடெட் எடிசனில் வழங்கப்படாத அம்சம் என்று பார்த்தால், மெக்கானிக்கல் லாக்கிங் டிஃப்ரென்ஷியல் (MLD) ஆகும். இது டாப் வேரியண்ட்டான என்10 (ஆப்ஷ்னல்)-இல் மட்டுமே கொடுக்கப்படுகிறது. பொலிரோ நியோ காரில் 1.5 லிட்டர் எம் ஹாவ்க் 100 டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே டீசல் என்ஜின் தான் புதிய லிமிடெட் எடிசனிலும் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
New mahindra bolero neo special edition launched at rs 11 50 lakhs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X