கம்மியான பராமரிப்பு செலவுகளை கொண்டது டொயோட்டா கார்கள் தான்! மாருதி எல்லாம் லிஸ்ட்லயே இல்ல!

ஒரு கார்களை வாங்கிய பின்பு அதற்கான அடுத்த 10 ஆண்டுகள் பராமரிப்பு செலவுகளைக் கணக்கிட்டுக் குறைவான பராமரிப்பு செலவுகளைக் கொண்ட கார் எது? எந்த நிறுவனத்தின் கார்களுக்கு குறைவான பராமரிப்பு செலவு இருக்கிறது என ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் நாம் பல்வேறு விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். காரின் விலை, அதன் ஆயுள் எனப் பல விஷயங்களைப் பற்றி யோசிப்போம். ஆனால் கார் வாங்க வேண்டும் என்றால் அதை வாழ் நாள் முழுவதும் பராமரிக்க வேண்டும். ஒரு காரை வாங்குவதை விட அதைப் பராமரிக்கத் தான் அதிகமாகச் செலவாகும். இப்படியாக எந்தெந்த கார்களுக்கு பராமரிப்பு செலவு எவ்வளவு ஆகிறது என ஒரு தனியார் நிறுவனம் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

கம்மியான பராமரிப்பு செலவுகளை கொண்டது டொயோட்டா கார்கள் தான்! மாருதி எல்லாம் லிஸ்ட்லயே இல்ல!

அதன் முடிவுகள் பல அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இப்படியாக அந்நிறுவனம் பட்டியலிட்ட குறைந்த பராமரிப்பு செலவுகளைக் கொண்ட டாப் 10 காரில் 7 இடங்களை டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் தான் இடம் பிடித்துள்ளது. நீண்ட கால பயன்பாட்டிற்கு டொயோட்டா தான் சிறப்பான காராக இருப்பது இந்த முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகள் ஒரு காருக்கு 10 ஆண்டு பராமரிப்பு செலவுகளைக் கணக்கிட்டு முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் டொயோட்டா கார்களுக்கு சராசரியாக 10 ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவு என்பது 5,996 அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக மிட்சுபிஸி நிறுவனம் இரக்கிறது. இந்நிறுவனத்தின் சராசரி பராமரிப்பு செலவு என்பது 7787 அமெரிக்க டாலர், அடுத்தாக ஹோண்டா நிறுவனம் 7827 அமெரிக்க டாலர், மாஸஅடா நிறுவனம் 8035 அமெரிக்க டாலர் இறுதியாக நிஸான் நிறுவனம் 8,088 அமெரிக்க டாலர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் மொத்தம் 164 கார்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அந்தந்த கார்களுக்கான 10 ஆண்டு பராமரிப்பு செலவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இருப்பதிலேயே குறைவாக டொயோட்டா ப்ரீயூஸ் கார் 4,008 அமெரிக்க டாலர் பராமரிப்பு செலவைப் பெறுகிறது. அடுத்த இடத்தில் டொயோட்டா யாரீஸ் கார் 4,027 அமெரிக்க டாலர், 3வது இடத்தில் டொயோட்டா கரொல்லா கார் 4,087 அமெரிக்க டாலர், 4வது இடத்தில் டொயோட்டா ப்ரீயூஸ் பிரைம் 4,098 அமெரிக்க டாலர்

5வது இடத்தில் டொயோட்டா கேம்ரி, 4,203 அமெரிக்க டாலர், 6வது இடத்தில் டொயோட்டா அவலான் 4,407 அமெரிக்க டாலர், 7து இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் 2 டோர் ஸ்போர்ட் காராக டொயோட்டா சூப்ரா கார் 4,950 அமெரிக்க டாலருடன் 7வது இடத்தில் இருக்கிறது. இந்த டாப் 7 இடத்தையும் டொயோட்டா நிறுவனத்தின் கார்களே பிடித்துவிட்டன.

இந்த ஆய்வில் சொகுசு கார்களுக்கான தனி பிரிவு உருவாக்கப்பட்டது. அதன் படி குறைவான பராமரிப்பு செலவு கொண்ட சொகுசு கார் என்றால் டெஸ்லா நிறுவத்தின் கார் தான் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளது. டெஸ்லா காரின் சராசரி பராமரிப்பு செலவு 5,867 அமெரிக்க டாலராகும். இதில் முதலிடத்தைப் பிடித்துள்ள கார் டெஸ்லாவின் மாடல் 3 கார் இது வெறும் 3,587 அமெரிக்க டாலரை பராமரிப்பு செலவாகக் கொண்டதாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் டெஸ்லாவின் மாடல் எஸ் கார் இது 4,566 அமெரிக்க டாலரைச் செலவாகக் கொண்டுள்ளது. டெஸ்லா மாடல் ஒய் காரை பொருத்தவரை 4,732 அமெரிக்க டாலரை பராமரிப்பு செலவாகக் கொண்டு 3வது இடத்தில் இருக்கிறது.

இந்த பட்டியலில் 4வது இடத்தை டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் பிடித்துள்ளது. லெக்சஸ் இஎஸ் 350 கார் 5,488 டாலருடன் 4வது இடத்திலும், லெக்சஸ் இஎஸ் 300எச் கார் 5,662 அமெரிக்க டாலருடன் 5வது இடத்திலும், லெக்சஸ் ஐஎஸ் 350 கார் 5,680 அமெரிக்க டாலருடன் 6வது இடத்திலும், லெக்சஸ் ஜிஎஸ் 350 கார் 5,721 அமெரிக்க டாலருடன் 7வது இடத்திலும் இருக்கிறது.

இதே பட்டியலில் அதிக பராமரிப்பு செலவுகள் கொண்ட கார்களை கொண்ட பிராண்டாக அமெரிக்க டிராக் தயாரிப்பாளர் ராம் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சராசரி பராமரிப்பு செலவு 22,075 அமெரிக்க டாலாக இரக்கிறது. இரண்டு, மூன்று, மற்றும் நான்காவது பிராண்ட்களை பொருத்தவரை ஜீப்-11,476 அமெரிக்க டாலர், சிரிஸ்லர் - 11,364 அமெரிக்க டாலர், டாட்ஜ் - 11,079 அமெரிக்க டாலர் ஆகிய பிராண்ட்கள் இருக்கிறது. இது எல்லாமே ராம் நிறுவனத்தின் சப் பிராண்ட்கள் தான்.

சொகுசு கார் பட்டியலில் அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட கார்களை இருக்கும் நிறுவனமாக போர்ஷே நிறுவனம் இருக்கிறது. இது 22,075 அமெரிக்க டாலர் செலவுகளைக் கொண்டது. இரண்டாவது இடத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 19,312 அமெரிக்க டாலர் செலவுகளை கொண்டது. 3 மற்றும் 4வது இடத்தில் டாடா மோட்டார் நிறுவனத்தின் லேண்ட் ரோவர் - 18,569 அமெரிக்க டாலர், ஜாக்குவார் - 17,636 அமெரிக்க டாலர் என ப்டடியலிடப்பட்டுள்ளது. 5வது இடத்தை மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் 15,986 அமெரிக்க டாலருடன் பிடித்துள்ளது.

இது சர்வதேச அளவிலான கார்களை வைத்து எடுக்கப்பட்ட கணக்கு என்பதால் இதில் இந்தியாவில் மட்டும் விற்பனையாகும் பல கார்கள் இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் டொயோட்டா நிறுவனத்திற்குக் கிடைத்தது மிகப்பெரிய கவுரவமாகும். அதுவும் குறைவான பராமரிப்பு செலவு கொண்ட கார்களில் முதல் 10 இடத்தில் 7 இடத்தை டொயோட்டா நிறுவனத்தின் கார்களே பிடித்துள்ளது. அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய நல்ல இமேஜை பெற்றுத் தந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

Most Read Articles
English summary
New study says Toyota has the worlds cheapest 10 year maintenance cost cars
Story first published: Friday, January 20, 2023, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X