நடிகர்கள், அரசியல்வாதிகள்னு போட்டி போட்டு வாங்குறாங்க... ரேஞ்ஜ் ரோவர் காருக்கு இப்பவே விற்பனை நிறுத்தம்!

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ரேஞ்ஜ் ரோவர் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆகிய இரு கார் மாடல்களும் அடங்கும். முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடங்கி திரை நட்சத்திரங்கள் வரை என பலர் இந்த கார் மாடல்களின் மிகப் பெரிய விரும்பிகளாக இருக்கின்றனர். இதன் விளைவாகவே இந்த வருடம் தொடங்கி முழுமையாக இரண்டு மாதங்கள்கூட முடிவடைவதற்கு முன்னரே இரு கார் மாடல்களும் (ரேஞ்ஜ் ரோவர் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட்) விற்று தீர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 2023 ஆம் ஆண்டிற்காக விற்பனைக்கு என ஒதுக்கப்பட்ட ரேஞ்ஜ் ரோவர் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆகிய இரு மாடல்களும் விற்று தீர்ந்து உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே இந்த இரு கார் மாடல்களையும் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனாக லேண்ட் ரோவர் இந்தியா சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இவை விற்பனைக்கு வந்த ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்புக் கிடைத்ததாகக் கூறப்படுகின்றது.

ரேஞ்ஜ் ரோவர்

புக்கிங் நிறுத்தம்

குறிப்பாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மத்தியில் இந்த சொகுசு காருக்கு நல் ஆதரவு நிலவி இருக்கின்றது. இந்த நிலையிலேயே 2023 ஆம் ஆண்டிற்கான ரேஞ்ஜ் ரோவர் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார் மாடல்களுக்கான புக்கிங் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட அத்தனை யூனிட்டுகளும் விற்று தீர்ந்ததை அடுத்தே இந்த நடவடிக்கையில் லேண்ட் ரோவர் நிர்வாகம் இறங்கி இருக்கின்றது.

புக்கிங் நிறுத்தம் தற்காலிகமா?

இந்த புக்கிங் நிறுத்தம் தற்காலிகமானதாக இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு கார் மாடல்களுக்கும் இப்போதும் இந்திய சந்தையில் டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், வெகு விரைவில் மீண்டும் சொகுசு கார்களுக்கான புக்கிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் இரண்டும் இரட்டையர்களைப் போன்ற கார் மாடல்கள் ஆகும்.

ரேஞ்ஜ் ரோவர்

கணிசமான வித்தியாசங்களை மட்டுமே இந்த கார்கள் கொண்டிருக்கும். குறிப்பாக, வெளிப்புற தோற்றத்தில் லேசான மாற்றங்களைக் காணலாம். அதேவேளையில் எஞ்ஜின் மற்றும் அதன் திறன் வெளிப்பாடு ஆகியவற்றில் மிகப் பெரிய மாற்றத்தை நம்மால் காண முடியும். அதிக திறன் வெளியேற்றம் கொண்ட தேர்வாக ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் இருக்கிறது. இந்த மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பவர்ஃபுல்லானது, விலை அதிகமானது

இதுவே ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்டின் அதிக திறன் வெளியேற்றத்திற்கு காரணமாக உள்ளது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 346 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் இந்த டீசல் மோட்டார் வெளியேற்றும். இதேபோல் அதிக விலையைக் கொண்ட கார் மாடலாகவும் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் காட்சியளிக்கின்றது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 1.64 கோடி ஆகும். லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் இதுவே நிறுவனத்தின் மிகவும் அதிகம் வரவேற்பைப் பெறும் மாடலாக உள்ளது.

ரேஞ்ஜ் ரோவர்

சொகுசான கார்

ஆகையால், பிராண்டின் எஸ்யூவி பிரிவில் டாப் பிளேஸில் இது இருக்கின்றது. இந்த கார் மாடலை ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் லேண்ட் ரோவர் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதிக இட வசதி மற்றும் சொகுசு பயண அனுபவத்தை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்காக பிரத்யேகமாக விற்பனைக்குக் கிடைக்கும் தேர்வே ஐந்து இருக்கைகள் தேர்வு ஆகும்.

அதேவேளையில், குடும்பத்துடன் சொகுசான மற்றும் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என விரும்புவர்களுக்காக விற்பனைக்கு வழங்கும் ஆப்ஷனாக ஏழு இருக்கைகள் தேர்வு இருக்கின்றது. இதனை ஸ்டாண்டர்டு மற்றும் லாங் வீல் பேஸ் பதிப்பாகவும் லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, பிளக் இன் ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் வழக்கமான டீசல் ஆகிய இரு மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் கிடைக்கின்றது.

பயண அனுபவம் சூப்பரா இருக்கும்

இதுமாதிரியான மிக சிறப்பான வசதிகளே தொழிலதிபர்களையும், திரைநட்சத்திரங்களையும் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களையும் இந்த கார் கவரக் காரணமாக உள்ளது. இதில் தொழில்நுட்ப வசதிகள் மட்டுமல்ல சொகுசு வசதிகளும் மிக தாராளம். நாள் முழுக்க பயணித்தாலும் பயண அசதியே ஏற்படாத வண்ணம் இந்த காரின் கேபின் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மாதிரியான வசதியைக் கொண்டிருப்பதாலேயே ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் இரண்டும் முழுமையாக விற்று தீர்ந்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார் பிளான்

லேண்ட் ரோவர் நிறுவனம் வெகு விரைவில் ரேஞ்ஜ் ரோவரின் மின்சார வெர்ஷனையும் உலகளவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. எம்எல்ஏ (Modular Longitudinal Architecture) மற்றும் இஎம்ஏ (Electric Modular Architecture) இரு விதமான ஆர்கிடெக்சரை பயன்படுத்தி லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் மின்சார கார் உருவாக்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் ரேஞ்ஜ் ரோவர் கார் மாடலுக்கு வரவேற்பு அதிகம் என்பதால் இதன் மின்சார வெர்ஷன் உலகளவிலான வெளியீட்டிற்கு பின்னர் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டிற்கு ரேஞ்ஜ் ரோவர் மின்சார வெர்ஷனை வெளியீடு லேண்ட் ரோவர் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Orders for range rover and range rover sport closed for 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X