பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?

குவான்டினோ எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் பேட்டரி இல்லாத புதிய தொழிற்நுட்பம் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தில் பேட்டரி இல்லாமல் அதற்கு அபதிலா நேனோஃப்லோசெல் பொருத்தப்பட்டுள்ளது. இது பை-அயான் தொழிற்நுட்பத்தில் இயங்குகிறது. இந்த தொழிற்நுட்பம் குறித்து விரிவாக காணலாம்.

குவான்டினோ நிறுவனம் தனது 25 ஆண்டு விழாவைக் கொண்டி வருவதால் அதன் நினைவாகத் தனது புதிய காருக்கு 25 எனப் பெயரிட்டுள்ளது. இதை வித்தியாசமாக பேட்டரி இல்லாத எலெக்ட்ரிக் காராக வடிவமைத்துள்ளது. இந்த தொழிற்நுட்பட்பத்தில் குவான்- இ காரில் பொருத்தியுள்ளனர். இதில் ஒவ்வொரு வீலுக்கும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?

இந்த மோட்டார் மூலம் காருக்கு 320 எச்பி பவர் கிடைக்கிறது. இதன் மூலம் இந்த கார் 0-62 மைல் அதாவது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3 நொடியில் எட்டி பிடிக்கிறது. இந்த கார் 1242 மைல் அதாவது 2000 கி.மீ ரேஞ்ச் கொண்டது. இதற்கெல்லாம் முக்கியமான காரை பை-அயான் தொழிற்நுட்பம் தான் இது எப்படி பேட்டரி இல்லாமல் எலெக்ட்ரிக் காரை இயங்க வைக்கிறது எனக் காணலாம்.

இந்த தொழிற்நுட்பத்தின் பிடி குவான்டினோ காரில் பேட்டரிக்கு பதிலாக பாசிடிவ் சார்ஜ் செய்யப்பட்ட எலெக்ட்ரோலைட்ஸ் மற்றும் நெகட்டிவ் சார்ஜ் செய்யப்பட்ட அனோலைட் பயன்படுத்தப்படுகிறது. இவை இரண்டும் அயான்-செலக்டிவ் மெம்பரைன் உடன் சேரும் போது மின் சக்தி உருவாகிறது.

இப்படியாக எலெகட்ரோலைட்களையும், அனோலைட்களையும் கடத்தி செல்ல தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இ்த தண்ணீர் காரில் 125 லிட்டர் டேங்கில் சேமிக்க்படுகிறது. இதற்குத் தண்ணீர் என்றால் உப்பு தண்ணீர், வேஸ்ட் தண்ணீர் போன்ற மனிதர்களுக்குப் பயன்படாத நீரைக் கூட பயன்படுத்த முடியும்.

இந்த தண்ணீர் தனித்தனியாகச் சேமிக்கப்பட்டு நானோ ஃப்யூயல்செல்லில் பயன்படுத்தப்படும். இப்படியாகப் பயன்படுத்தும் போது டாக்ஸிக்காக இந்த தண்ணீர் மாறாது மற்றும் தீ பிடிக்காமலும் இருக்கும். அதனால் இந்த கார் தீ விபத்தில் சிக்காமலும் இருக்கும். பேட்டரி வாகனங்கள் தீவிபத்து சம்பவங்கள் அதிகம் நடக்கும் நிலையில் இந்த காரில் பேட்டரியே இல்லாததால் தீ விபத்து நடக்க வாய்ப்பே இல்லை.

இந்த காருக்கான எலெக்ரோலைட் லிக்யூட் வெறும் தண்ணீர் தான் என்றால் அதை சிறியதாக ஒரு புரோசஸ் செய்ய வேண்டும். அப்படிச் செய்து இந்த தண்ணீரை பெரும் அளவில் தயாரித்த ஒரு லிட்டர் தயாரிக்க 10 யூரோ சென்ட் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ரூ7 தான் செலவாகும் பெட்ரோல் போல அதிக செலவாகாது. அதே போல இந்த காரில் உள்ள நோனோஃப்ளோசெல்லை தயாரிக்க ரூ53 ஆயிரம் செலவாகிறது. இது சுமார் 50 ஆயிரம் மணி நேரம் வரை உழைக்கும். இந்த நேரத்தில் கார் 18 லட்சம் கி.மீ வரை பயணிக்க முடியும்.

அதனால் நீடித்து உழைப்பும் இந்த வகை தொழிற்நுட்பத்தில் சாத்தியமாகிறது. தற்போது உள்ள பேட்டரி எலெக்ட்ரிக் காரில் உள்ள பிரச்சனை எல்லாம் சரி செய்த ஒரு எலெக்ட்ரிக் கார் என்றால் இது இந்த நானோஃப்ளோசெல் எலெக்ட்ரிக் காராக தான் இருக்கும். மற்றபடி இதன் மோட்டார் மற்றும் பிற செயல்பாடுகள் எல்லாம் ஒரு எலெக்ட்ரிக் கார் போல தான் செயல்படும். எலெக்ட்ரிக் மோட்டாருக்கு பவரை கொடுப்பது பேட்டரியாக இல்லாமல் இந்த நானோஃப்ளோசெல்லாக இருக்கும் என்பது மட்டும் தான் இதில் இருக்கும் வித்தியாசம்.

பொதுவாகப் புதிதாக ஒரு தொழிற்நுட்பம் என்றால் அது அதை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வது என்பது பெரிதும் சவாலான விஷயமாக இருக்கும். எலெக்ட்ரிக் காருக்கு மாற்றாக ஹைட்ரஜன் ப்யூயல் செல் வாகனங்கள் பேசப்பட்டாலும் ஹைட்ரஜனை அதிக அளவில் தயாரிப்பது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது, அதைச் சேமித்து வைப்பது எல்லாம் மிகவும் சிரமமான ஆபத்தான விஷயம்.

ஆனால் இந்த பை-அயான் தொழிற்நுட்பம் அப்படியல்ல வெறும் தண்ணீர் தான் என்பதால் உலகம் முழுவதும் இந்த காருக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது எளிமையானது. தற்போது பெட்ரோல்/டீசல் காரணமாக உலகம் முழுவதும் எல்லா எல்லைகளிலும் ஒரு எரிபொருள் கட்டமைப்பு வந்துவிட்டது இந்த தொழிற்நுட்பம் வெற்றிகரமாக மாறிவிட்டால் இந்த பை-அயான் தொழிற்நுட்பத்திற்கு அதே கட்டமைப்பைப் பயன்படுத்த முடியும். திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் 2030ல் இந்த தொழிற்நுட்பம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

Most Read Articles
English summary
Quantino nanoFlowcell ev runs without batteries
Story first published: Friday, February 3, 2023, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X