2022 விற்பனையில் மாருதி காருக்கே தண்ணி காட்டியுள்ள டாடா நெக்ஸான்!! வெளியானது முழு ரிப்போர்ட்...

இன்றைய தினத்தில் சாலையில் செடான் கார்களை காட்டிலும் எஸ்யூவி ரக கார்களையே அதிகமாக காண முடிகிறது. நிமிர்ந்த தோற்றம், கட்டுக்கோப்பான உடலமைப்பு உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை எஸ்யூவி கார்களின் பக்கம் ஈர்க்கிறது. அதிலிலும் குறிப்பாக, விலை குறைவான அளவில்-சிறிய சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களையே நம் நாட்டு மக்கள் பரவலாக தேர்வு செய்கின்றனர்.

ஏனெனில் நம் நாட்டில் பட்ஜெட் விலையிலான கார்களுக்கே மவுசு அதிகமாக இருக்கும் என்பதை கூற வேண்டியது இல்லை. இந்திய சந்தையில் தற்போதைக்கு சிறப்பாக விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் என்று பார்த்தால், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவற்றை சொல்லலாம். இதில் குறிப்பாக, டாடா நெக்ஸான் அறிமுகமான சமயத்தில் நல்லப்படியாகவே விற்பனையாகியது என்றாலும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர்.1 சப்-4 மீட்டர் எஸ்யூவி என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

2022 விற்பனையில் மாருதி காருக்கே தண்ணி காட்டியுள்ள நெக்ஸான்!

ஆனால் சமீப ஆண்டுகளாக மாருதி, ஹூண்டாய் மாடல்களை எல்லாம் முந்திக்கொண்டு டாடா மோட்டார்ஸின் இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் ஒவ்வொரு மாத விற்பனையிலும் முதலிடத்தை பிடித்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டில் ஆகஸ்ட், செப்டம்பர் என்ற 2 மாதங்களை தவிர்த்து மற்ற 10 மாதங்களிலும் அதிகம் விற்பனையாகும் இந்தியாவின் நம்பர்.1 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் தான்.

மொத்தமாக கடந்த 2022ஆம் ஆண்டில் 1,68,278 நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் டாடா நெக்ஸானின் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 38,000 யூனிட்கள் அதிகமாகும். அதிகப்பட்சமாக கடந்த நவம்பர் மாதத்தில் 15,871 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 12,053 நெக்ஸான் கார்கள் தான் கடந்த ஆண்டில் ஒரு மாதத்தில் டாடா நிறுவனம் குறைந்தப்பட்சமாக நெக்ஸான் கார்களை விற்பனை செய்த மாதம் ஆகும்.

2022 விற்பனையில் மாருதி காருக்கே தண்ணி காட்டியுள்ள நெக்ஸான்!

மாருதி சுஸுகி நிறுவனம் தனது புத்தம் புதிய பிரெஸ்ஸா காரை ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தினாலும், கடந்த ஆண்டில் முதல் பாதியை காட்டிலும் 2ஆம் பாதியில் தான் அதிக எண்ணிக்கையில் நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2022 ஜூலை- டிசம்பர் என்ற 6 மாதங்களில் மொத்தம் 85,508 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்தில் விற்பனையான நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 14,023 ஆகும்.

கடந்த ஆண்டில் மொத்தமாக விற்பனையான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களில் டாடா நெக்ஸானின் பங்கு மட்டும் 29.73% ஆகும். இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கடந்த ஆண்டில் மொத்தம் 1,30,563 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு மாதத்தில் 10,880 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை. கடந்த ஆண்டில் வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட்டதில் 100இல் 23 கார்கள் பிரெஸ்ஸா ஆகும். ஏற்கனவே கூறியதுபோல் பிரெஸ்ஸாவை கடந்த 2022 ஜூன் மாத இறுதியில் தான் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

2022 விற்பனையில் மாருதி காருக்கே தண்ணி காட்டியுள்ள நெக்ஸான்!

அதற்கு முன்பு வரையில் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் விற்பனையில் இருந்தது. விட்டாரா பிரெஸ்ஸாவும் விற்பனை நிறுத்தப்படும் வரையில் ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 10,000 யூனிட்கள் விற்பனையாகி வந்தது என்றாலும், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக மாடர்ன் தோற்றத்திலான பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி கொண்டுவந்தது. இதனால் விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடல் பிரெஸ்ஸா எனலாம். கடந்த 2022இல் அதிகப்பட்சமாக செப்டம்பரில் 15,445 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி இருந்தன.

விற்பனையில் டாடா நெக்ஸானை பிரெஸ்ஸா முந்திய 2 மாதங்களில் இந்த செப்டம்பர் மாதமும் ஒன்று ஆகும். அந்த செப்டம்பரில் நெக்ஸான் கார்கள் ஏறக்குறைய ஆயிரம் யூனிட்கள் குறைவாக விற்பனையாகி இருந்தன. இந்த இரு சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களுக்கு அடுத்து கடந்த 2022ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான 3வது, 4வது மற்றும் 5வது மாடல்களாக ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளன. இவை மூன்றும் கடந்த ஆண்டில் முறையே 1,20,703 ; 86,251 மற்றும் 60,260 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Sub 4 meter suv cars sales in calendar year 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X