தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!

தாலிபான்கள் முதல் முறையாக ஓர் காரை தயாரித்து இருக்கின்றனர். இந்த காரின் வெளியீட்டு நிகழ்வே கடந்த தினங்களுக்கு முன்பு அந்நாட்டுல் அரங்கேறியது. அவர்கள் உருவாக்கிய முதல் காரே சூப்பர் கார் மாடல் ஆகும். மடா 09 எனும் பெயரிலயே அந்த சூப்பர் காரை தாலிபான் அரசு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆஃப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் என்டாப் (ENTOP) நிறுவனமே இந்த காரை உருவாக்கி உள்ளது.

இது ஓர் உள்ளூர் வாகன வடிவமைப்பு ஸ்டுடியோ ஆகும். காபூலைச் சேர்ந்த எஞ்ஜினியர் முஹம்மது ரஸா அஹ்மத் என்பவரே இந்த வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, ஜப்பானைச் சேர்ந்த ஜேஎன்சி கார்பரேஷன் எனும் நிறுவனத்தின் பங்களிப்பும் இந்த காரின் உருவாக்கத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிறுவனமே கடந்த காலங்களில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வாகனங்களை உருவாக்க உதவியது என்பது குறிப்பிடத்தகுந்தது. மடா 09 சூப்பர் காரில் டொயோட்டா கொரோல்லா காரில் பயன்படுத்தப்படும் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மடா 09

டொயோட்டா மோட்டார்

1.8 லிட்டர், டிஓஎச்சி, 16 வால்வுகள் கொண்ட விவிடி-ஐ, 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே டொயோட்டா கொரோல்லா காரில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த அதி திறனை வெளியேற்றக் கூடிய மோட்டாரே மடா 09 இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜினை லேசான மாடிஃபிகேஷனுக்கு உட்படுத்தியே தாலிபான்கள் தங்களுடைய சூப்பர் காரில் பயன்படுத்தி இருக்கின்றனர். மாடிஃபிகேஷன் காரணமாக வழக்கமான மோட்டாரைக் காட்டிலும் அதிக பவரை வெளியேற்றக் கூடியதாக அது மாறி உள்ளது.

அதிக பவரை வெளியேற்றும்

தெளிவாகக் கூற வேண்டுமானால் ஆயில் கூலர் மற்றும் பிற பெர்ஃபார்மன்ஸ் அம்சங்களில் செய்யப்பட்ட மாற்றங்களால் 166 பிஎச்பி-யாக இருந்த திறன் 187 பிஎச்பி-ஆக உயர்ந்து இருக்கின்றது. ஆனால், இதன் டாப் ஸ்பீடு போன்ற பிற முக்கிய விபரங்களை தாலிபான்கள் வெளியிடவில்லை. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனும் கொரோல்லாவிடம் இருந்து பெறப்பட்டு இந்த தாலிபானியர்களின் மடா 09இல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

மடா 09

முன்மாதிரி மாடல்

தற்போது தாலிபான்கள் இந்த காரை ஓர் முன்மாதிரி மாடலாகவே உருவாக்கி இருக்கின்றனர். இதன் உட்பகுதியை உருவாக்கும் பணிகள் இன்னும் நிறைவுறவில்லை என கூறப்படுகின்றது. இன்னும் சில மாதங்களுக்குள் அந்த பணிகளும் நிறைவுறும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முழுமையாக உருவாக்கப்பட்ட மடா 09 சூப்பர் காரை தாலிபான்கள் நடப்பாண்டில் நடைபெற இருக்கும் கத்தார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்த திட்டம் போட்டிருக்கின்றனர்.

இதுவரையிலான உருவாக்க செலவு

இதற்கான முயற்சியில் தாலிபான்கள் தற்போது மிக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர். இப்போது வரை இந்த வாகன உருவாக்கத்திற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களே செலவாகி இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் கேபின் இன்னும் முழுமையடையாத சூழல் தென்படுவதால் இந்த செலவு இன்னும் பலமடங்கு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேவேளையில், தாலிபான்களின் இந்த சூப்பர் காரின் உருவாக்க பணிகள் தாலிபான்களின் ஆட்சி காலம் தொடங்குவதற்கு முன்னரே தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது.

மடா 09

தாலிபான்களின் ஆட்சியில் உருவாக்க பணிகள் தீவிரம்

ஆனால், தாலிபான்களின் ஆட்சி காலத்திற்கு பின்னரே காரின் முக்கியமான உருவாக்க பணிகள் பல நிறைவுற்று இருக்கின்றன. குறிப்பாக, முந்தைய ஆட்சி காலத்தில் 50 சதவீத உருவாக்க பணிகளே முடிவுற்றிருக்கின்றது. மேலும், ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் உருவாக்க பணிகள் இப்போதே இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் அது தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, கடந்த 8 மாதங்களாகவே கார் உருவாக்க பணிகள் பல முன்னேற்றங்களைக் கண்டதாக தாலிபான்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

தாலிபான்களுக்கு குவியும் பாராட்டு

தாலிபான்களின் இந்த செயல் பலரை வியக்கச் செய்திருக்கின்றது. குறிப்பாக பல ஆண்டுகளாக போர் மற்றும் கலவரங்களால் பாதிப்பைச் சந்தித்து வரும் நாட்டில் இவ்வளவு திறன்மிக்கவர்கள் இருக்கின்றனரா என வியக்கச் செய்திருக்கின்றது. மடா 09 சூப்பர் காரை 10க்கும் மேற்பட்ட குழுவே இணைந்து உருவாக்கி இருக்கின்றது. இவர்களுக்கே தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அதேவேளையில், இந்த கார் மீது விமர்சனங்கள் எழாமலும் இல்லை.

விமர்சனங்கள்

பிற நிறுவனங்களின் தயாரிப்புகளை ஒன்றிணைத்து தாலிபான்கள் இந்த சூப்பர் காரை உருவாக்கி இருப்பதாக விமர்சகர்கள் தங்களின் விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றனர். இந்தமாதிரியான விமர்சனங்கள் விரைவில் தாலிபான்களை உள்நாட்டிலேயே வைத்து வாகனங்களுக்கான அனைத்து பாகங்களையும் உருவாக்கத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்னதான் கடுமையான விமர்சனங்கள் இந்த கார் மீது வைக்கப்பட்டாலும், அதன் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை என வாகன ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

கவர்ச்சிக்கு குறைவே இல்ல

இதற்கேற்ப அதிக கவர்ச்சியான காராகவே மடா 09 காரை தாலிபான்கள் உருவாக்கி இருக்கின்றனர். பக்கெட் ரக இருக்கை, மாடர்ன் கால காரில் இடம் பெற்றிருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள், அகலமான டயர்கள் மற்றும் சொகுசு அம்சங்கள் என ஏராளமான வசதிகளை மடா 09 இல் வழங்கி இருக்கின்றனர். விரைவில் இந்த கார் பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களை தாலிபான்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கணிசமான விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது.

Most Read Articles
English summary
Taliban unveiled first supercar mada 09
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X