இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!

டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல் நெக்ஸான் இவி. இது நெக்ஸான் இவி பிளஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம் என இரு விதமான மாடல்களில் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டிற்கும் இடையில் ரேஞ்ஜ் திறன் வழங்குவதில் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

நெக்ஸான் இவி பிரைம் ஓர் ஃபுல் சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜையும், நெக்ஸான் இவி பிளஸ் ஓர் முழு சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காராகவே டாடா நெக்ஸான் இவி மாடலை உருவாக்கி இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு உள்ளது.

டாடா நெக்ஸான் இவி

ஆச்சரியம் அளிக்கும் தகவல் வெளியாகியிருக்கு

இந்த நிலையிலேயே டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் குறித்த ஆச்சரியம் அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை பார்க்கும் முன்னர், நெக்ஸான் இவி பிளஸ் எனும் பெயரில் இப்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த மாடல் கடந்த காலங்களில் 'நெக்ஸான் இவி' எனும் விற்கப்பட்டு வந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நெக்ஸான் இவி பிரைம்மின் வருகைக்கு பின்னரே அது நெக்ஸான் இவி பிளஸ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

பெயர் மாற்றத்துடன் சேர்த்து லேசாக அதன் ரேஞ்ஜ் திறனையும் டாடா உயர்த்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாற்றத்திற்கு முன்னரில் இருந்தே நாட்டின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி இருந்து வருகின்றது. ஆகையால், இதன் பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் சற்று அதிகம் என கூறலாம். அவ்வாறு, நெக்ஸான் இவி மாடலை பயன்படுத்தி வரும் ஓர் நபரே அதுகுறித்த ஆச்சரியமளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளார்.

டாடா நெக்ஸான் இவி

1.38 லட்சம் கிமீ பயணம்...

அந்த நபர் 2.5 வருடங்களிலேயே சுமார் 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனையைப் படைத்திருக்கின்றார். இந்தியாவில் இந்த அளவு அதிக கிமீ பயணத்தை வேறு எந்த எலெக்ட்ரிக் காரும் செய்திருப்பதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. பலர் மின்சார காரை பயன்படுத்துவதே மிக சிரமம் என நாட்டில் கருத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் மதன் குமார் எனும் நபர் இந்த சூப்பரான சம்பவத்தை செய்து, மற்றவர்களையும் மின் வாகன பன்பாட்டின் ஈர்க்கும் வகையில் அதுகுறித்த தகவலை வெளி உலகிற்குக் கொண்டு வந்திருக்கின்றார்.

ஆடி க்யூ3 சொகுசு காரையே தூக்கியெறிஞ்சுட்டார்

மதன் குமார் ஓர் மருத்துவர் ஆவார். இவர் கடந்த காலங்களில் ஆடி க்யூ3 சொகுசு காரை பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது. பொதுவாக, சொகுசு காரை பயன்படுத்தும் எந்தவொரு நபரும், அடுத்த அப்கிரேட் என செல்லும்போது, அதாவது, வேறொரு காரை புதிதாக வாங்க திட்டமிடுகிறார்கள் என்றால், அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாகனத்தைவிட அதிக சொகுசான கார் மாடலையே வாங்க விரும்புவார்கள்.

டாடா நெக்ஸான் இவி

Source: Plug in India

வெளுத்து வாங்கியிருக்காரு

ஆனால், மதன் குமாரோ சற்று வித்தியாசமாக டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றார். வாங்கியதோடு நிறுத்திக் கொள்ளாமல் அந்த வாகனத்தை ஓர் டூ-வீலர்போல் அதிக பயன்பாட்டிற்கு உட்படுத்தி இருக்கின்றார். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் எனில் அதனை அடிஅடி என அடித்து வெளுத்து வாங்கி இருக்கின்றார். முதல் ஓராண்டு பயன்பாட்டின்போதே அவர் 85 ஆயிரம் கிமீ பயணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.

இவ்ளோ ரேஞ்ஜ் கொடுத்திருக்கா?

இந்த செயலுக்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையிலேயே 2.5 ஆண்டுகளுக்குள் 1.38 லட்சம் கிமீ தூர பயணத்தை டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் மேற்கொண்டு மீண்டும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார், மதன் குமார். அதேவேளையில் எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டின் வாயிலாக ஓர் பெரும் தொகையை சேமித்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முழு சார்ஜிலும் 240 கிமீட்டருக்கும் அதிக ரேஞ்ஜையே நெக்ஸான் இவி அவருக்கு வழங்கி இருக்கின்றது.

மிகக் கடுமையான பயன்பாட்டின்போது 190 கிமீ வரையிலான ரேஞ்ஜ் வழங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த திறனே அவருக்கு பெரும் தொகையை சேமிக்க உதவியாக இருந்திருக்கின்றது. அவர் ஆடி சொகுசு காரை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது ஒரு கிமீ பயணத்திற்கு ரூ. 10 வரை செலவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதுதவிர பராமரிப்பு உள்ளிட்ட இதர செலவு காரணமாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 90 ஆயிரம் வரை அவருக்கு செலவாகி இருக்கின்றது.

பெருந்தொகை மிச்சம்

ஆனால், நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் ஒரு கிமீ பயணிக்க ரூ. 1.5 மட்டுமே செலவாகி இருக்கின்றது. பராமரிப்பு செலவும் அந்த அளவு அதிகம் இல்லை என்கின்றார். இதன் விளைவாக அவரால் ரூ. 10 லட்சம் வரை சேமிக்க முடிந்திருக்கின்றது. இதேபோல் பிறரும் அதிக பலனை அடைய வேண்டும் என எண்ணியே தான் பெற்ற பலன் குறித்த தகவலை மருத்துவர் மதன் குமார் தற்போது வெளியுலகிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்.

Most Read Articles
English summary
Tata nexon ev owner reveals how much he saved
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X