நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!

கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டிலும் இந்தியாவில் புதுமுக வாகனங்கள் பல விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. இந்த விஷயத்தில் வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் மிகக் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் இருக்கப்போகின்றது.

இந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 8 புதுமுக கார்கள் விற்பனைக்காக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், இந்த மாதம் வாகன பிரியர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கும் மாதமாக அமைய இருப்பது உறுதியாகி உள்ளது. அப்படி என்ன கார் மாடல்கள் இந்த பிப்ரவரியில் அறிமுகமாக இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

புதிய கார்கள்

சிட்ரோன் இசி3 (Citroen eC3)

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான சிட்ரோன், இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி சி5 ஏர் கிராஸ் மற்றும் சி3 ஆகிய இரு கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் நிறுவனம் வெகு விரைவில் இசி3 எனும் புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது சிட்ரோன். இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

இதில் 29.2 kWh பேட்டரி பேக்கையே சிட்ரோன் பயன்படுத்தி இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 320 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். மேலும், இதில் 57 பிஎஸ் பவரையும், 143 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதுதவிர, 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற நவீன கால சிறப்பம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கும்.

புதிய கார்கள்

டாடா அல்ட்ராஸ் ரேசர் (Tata Altroz Racer)

டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் தனது பங்களிப்பை வழங்கியது. இந்த பங்களிப்பின் வாயிலாக தனது புதுமுக கார் மாடல்களை வெளியீடு செய்தது. டாடா அல்ட்ராஸ் ரேசர்-ம் நிறுவனம் வெளியீடு செய்து கார் மாடல்களில் ஒன்றாகும். இந்த கார் மாடலை நிறுவனம் வழக்கமான அல்ட்ராஸைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்புகள் தாங்கியதாக உருவாக்கி இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் எனில் ஸ்போர்ட்ஸ் ரக வாகனத்தைபோல் உருவாக்கி இருக்கின்றது.

அதன் தோற்றம் மட்டுமல்ல எஞ்ஜின் பவரும் உயர்ந்துள்ளது. அதிக திறன் வெளிப்பாட்டிற்காக அல்ட்ராஸ் ரேசரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் வரை வெளியேற்றும். இத்தகைய திறன்மிக்க காராகவே அல்ட்ராஸ் ரேசர் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமில்லைங்க இந்த வாகனத்தை அதிக பிரீமியம் வசதிகள் நிறைந்த வாகனமாகவும் டாடா உருவாக்கி இருக்கின்றது. இதன் அறிமுகமே இந்த மாதம் இந்தியாவில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய கார்கள்

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta)

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா டீசல் தேர்வின் புக்கிங் சில நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலேயே சமீபத்தில் புதிய அவதாரத்தில் டீசல் இன்னோவா க்ரிஸ்டாவை டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்திய டொயோட்டா, அதற்கான புக்கிங் பணிகளையும் நாட்டில் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து இந்த மாதம் அதிகாரப்பூர்வமாக டீசர் வெர்ஷன் இன்னோவா க்ரிஸ்டாவை விற்பனைக்குக் கொண்டு வரவும் டொயோட்டா திட்டம் போட்டு இருக்கின்றது.

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG)

டாடா நிறுவனம் இந்த அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாகக் காட்சிப்படுத்தியது. நீண்ட நாட்களாக சாலையில் வைத்து சோதனையோட்டத்திற்கு இந்த காரை உட்படுத்தி வந்த நிலையில், நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ வாயிலகா வெளியீடு செய்தது. இந்த நிலையில் இதன் அதிகாரப்பூர்வ வருகை இந்த மாதம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சிஎன்ஜி கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 21 கிமீ முதல் 23 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.

டாடா பஞ்ச் சிஎன்ஜி (Tata Punch CNG)

டாடா மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மற்றுமொரு சிஎன்ஜி காராக பஞ்ச் இருக்கின்றது. இந்த கார் மாடலையும் நடப்பு பிப்ரவரி மாதத்திலேயே டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இது, ஒரு கிலோவிற்கு 23 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் மாருதியின் ஸ்விஃப்ட், வேகன்ஆர் சிஎன்ஜி போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Brezza CNG)

மாருதி சுஸுகி அதன் பிரெஸ்ஸா சிஎன்ஜி காரையும் இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த காரின் அறிமுகத்தை ஏற்கனவே நாட்டில் மாருதி சுஸுகி நிகழ்த்திவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இதனை அதிகாரப்பூர்வமாக இந்த மாதம் விற்பனைக்குக் கொண்டு வர மாருதி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஆகிய ட்ரிம்களிலேயே சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

மேலே பார்த்த கார் மாடல்கள் மட்டுமின்றி இரு சொகுசு கார் மாடல்களும் இந்தியாவில் 2023 பிப்ரவரியில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. லெக்சஸ் நிறுவனம் அதன் ஐந்தாம் தலைமுறை ஆர்எக்ஸ் சொகுசு கார் மாடலையும், ஆடி நிறுவனம் அதன் க்யூ3 ஸ்போர்ட்பேக் கார் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த எட்டு கார் மாடல்களே 2023 பிப்ரவரியை அலங்கரிக்க இருக்கின்றன.

Most Read Articles
English summary
This 2023 feb upcoming cars list
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X