கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லாரோட கண்களும் அது மேலதான் இருக்கும்...

2023 ஆட்டோ எக்ஸ்போவில் பலவகையான கார் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் அனைவரின் பார்வையையும் கவரும் வகையில் காட்சிபடுத்தப்பட்டிருந்த கான்செப்ட் கார் மாடல்களை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

களத்தை அதகளப்படுத்தும் வகையில் வகையில் பல புதிய கார்கள் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த முறை சில முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தனர். இருந்த போதிலும் ஆட்டோ எக்ஸ்போவில் வாகன ஆர்வலர்களின் வருகைக்கு சற்றும் பஞ்சமிருந்ததாகத் தெரியவில்லை. எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இம்முறை ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர் குவிந்துக் காணப்பட்டு இருக்கின்றனர்.

கான்செப்ட் கார் மாடல்கள்

அந்தவகையில், சுமார் 6.36 லட்சத்திற்கும் அதிகமானோர் 2023 ஆட்டோ எக்ஸ்போவைக் கண்டுகளித்து இருக்கின்றனர். இத்தகைய ஆட்டோ எக்ஸ்போவை தெறிக்க விடும் வகையில் சில முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் கான்செப்ட் மாடல்களைக் காட்சிப்படுத்தின. இவற்றில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இடம் பெற்றிருந்த மிக சிறந்த கான்செப்ட் கார் மாடல்களைப் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கியா இவி9 (Kia EV9)

கியா மோட்டார்ஸ் 2023 ஆட்டோ எக்ஸ்போவை மிக சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது என்றே கூறலாம். இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் காட்சிப்படுத்திய கான்செப்ட் கார் மாடலே இவி9. ஆட்டோ எக்ஸ்போவில் பலரைக் கவர்ந்த கான்செப்ட் மாடல்களில் இதுவும் ஒன்று. இதன் தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கார் பற்றிய முக்கிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மின்சார கார் ஓர் ஃபுல் 500 கிமீட்டருக்கும் அதிகமான கிமீ பயணிக்கும் என்பது போன்ற சில முக்கிய தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ

கியா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை இ-ஜிஎம்பி பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் இந்த காரை விற்பனைக்காக உற்பத்தி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, இதன் வருகையை 2023 ஆம் ஆண்டிற்குள் நிறுவனம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், வாகன ஆர்வலர்கள் இதன் வருகையை பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX)

மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு தயாரிப்பை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். நிறுவனம் பெரிய அளவில் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தாத சூழலே இப்போது வரை நிலவுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தனது இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்து, அனைவரையும் மாருதி சுஸுகி ஆச்சரியத்தில் மூழ்க செய்தது. எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதற்கென பிரத்யேக பிளாட்பாரத்தை அந்நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. புதிய இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் 2025 ஆம் ஆண்டில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ

சிங்கிள் சார்ஜில் 550 கிமீ தூரம் பயணிக்கும் திறனுடனேயே இந்த காரை மாருதி சுஸுகி தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூபே கார்களை இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி வடிவமைத்திருக்கின்றது. இந்த தோற்றமே ஆட்டோ எக்ஸ்போவில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது. இத்துடன் கட்டுமஸ்தான உடலைக் கொண்டதாகவும் இந்த காரை மாருதி வடிவமைத்திருக்கின்றது. இந்த காரில் அதிக ரேஞ்ஜ் திறனுக்காக எல்எஃப்பி பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இத்துடன் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டாடா சைரா இவி (Tata Sierra EV)

டாடா சைரா இந்தியர்களுக்கு இந்த பெயர் புதியது அல்லது. 1991 ஆம் ஆண்டில் டாடா விற்பனைக்குக் களமிறக்கிய கார் மாடலே சைரா. பல்வேறு காரணங்களுக்காக இந்த காரை கடந்த காலங்களில் விற்பனையில் இருந்து அகற்றியது. இதைத்தொடர்ந்தே, மீண்டும் இந்த காரை உயிர்பிக்கும் பணியில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் புதிய அவதாரம் சைரா கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இவி எனும் மின்சார கார் அவதாரம் அக்காருக்க வழங்கப்பட்டு உள்ளது.

டாடா மோட்டார்ஸ் சைரா காரை மின்சார வாகனமாக மட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிலும் இயங்கும் காராக விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் வருகை இன்னும் சில மாதங்களிலேயே அரங்கேற இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 2023 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கலக்கு கலக்கிய கான்செப்ட் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரும் பல்வேறு அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்திய சந்தையை வந்தடைய இருக்கின்றது.

டாடா அவின்யா (Tata Avinya)

டாடா மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவை காட்சிப்படுத்திய மற்றுமொரு கான்செப்ட் மாடலே அவின்யா. இந்த காரை நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்துவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் இரண்டாவது முறையாக நாட்டில் காட்சிப்படுத்தி இருப்பது, அக்காரின் உற்பத்தி பணிகளை வெகு விரைவில் தொடங்க இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கேற்பே இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் டாடா அவின்யாவின் உற்பத்தி பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களிலேயே தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன. ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்றவர்களை வெகுவாகக் கவர்ந்த கான்செப்ட்டில் இதுவும் ஒன்று.

டாடா கர்வ் (Tata Curvv)

டாடா மோட்டார்ஸின் அடுத்த சூப்பரான கான்செப்ட் மாடல் கர்வ் ஆகும். இந்த கான்செப்ட்டையும் டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய வெர்ஷன்களில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டம் போட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வருகை 2024 ஆம் ஆண்டிற்குள்அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த அட்டகாசமான கான்செப்டுகளில் கர்வும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Top 5 concept cars showcased 2023 auto expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X