இனி இந்த கார்களை வாங்கின மாதிரிதான்! இத செய்றதுக்கு முன்னாடி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டாங்களா? புலம்பும் மக்கள்!

டொயோட்டா நிறுவனம் அதன் கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வளவு விலை உயர்த்தப்பட்டு உள்ளது? என்பது போன்ற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவர்களின் புதிய வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், ஏற்கனவே மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை விலை உயர்வை பற்றி அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது டொயோட்டா நிறுவனம் அதன் புதிய கார்களின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களான கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகியவற்றின் விலையை டொயோட்டா கடுமையாக உயர்த்தி இருக்கின்றது.

விலை உயர்வு

விலை உயர்வு

இரண்டும் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களாக உள்ளன. இவற்றின் விலையையே டொயோட்டா தற்போது உயர்த்தி இருக்கின்றது. இந்த தகவல் டொயோட்டா கார் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. கிளான்ஸாவின் விலையில் ரூ. 12 ஆயிரம் வரையிலும், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் விலையில் ரூ. 50 ஆயிரம் வரையிலும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு உச்சபட்ச விலை உயர்வு செய்திருக்கின்ற காரணத்தினாலேயே டொயோட்டா கார் பிரியர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கிளான்ஸா (Glanza):

டொயோட்டா கிளான்ஸா ஒட்டுமொத்தமாக ஒன்பது விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இ, எஸ், எஸ் ஏஎம்டி, எஸ் சிஎன்ஜி, ஜி, ஜி ஏஎம்டி, ஜி சிஎன்ஜி, வி மற்றும் விஏஎம்டி ஆகியவையே அவை ஆகும். இவற்றில் வி ஏஎம்டி வேரியண்டின் விலையில் மட்டும் எந்த விதமான மாற்றத்தையும் டொயோட்டா செய்யவில்லை. அதன் முந்தைய விலையும், தற்போதையும் விலையும் ஒன்றே ஆகும். ரூ. 9.99 லட்சம் என்கிற பழைய எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.

விலை உயர்வு

இ, எஸ், ஜி மற்றும் வி ஆகிய வேரியண்டுகளின் விலையில் ரூ. 7 ஆயிரமும், எஸ் சிஎன்ஜி, ஜி சிஎன்ஜி ஆகிய இரு சிஎன்ஜி தேர்வுகளின் விலையிலும் ரூ. 2 ஆயிரமும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை உயர்வாக எஸ் ஏஎம்டி மற்றும் ஜி ஏஎம்டி ஆகியவற்றின் விலையில் ரூ. 12 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்ப விலை அதிகரிப்பு

புதிய விலை உயர்வால் கிளான்ஸாவின் ஆரம்ப விலை ரூ. 6.59 லட்சத்தில் இருந்து ரூ. 6.66 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். முன்னதாக கூறியதைப் போல் உயர் நிலை வேரியண்டின் விலையில் மாற்றம செய்யப்படாததால் அதன் விலை ரூ. 9.99 லட்சமாகவே உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். மாருதி சுஸுகி பலேனோவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலே டொயோட்டா கிளான்ஸா ஆகும்.

விலை உயர்வு

இந்த காரில் எக்கசக்க சிறப்பு வசதிகளை டொயோட்டா வாரி வழங்கி இருக்கின்றது. பலேனோவிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் விதமாக பீஜ் மற்றும் கருப்பு ஆகிய இரு நிற உட்புறம், ஆறு ஸ்பீக்கர்கள், 9 இன்ச் அளவுள்ள தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை வழங்கியிருக்கின்றது. இதுதவிர, ஆறு ஏர்பேக்குகள், குரல் கட்டளை வசதி, ஹெட்-அப் திரை மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் கிளான்ஸாவில் வழங்கப்பட்டிருக்கும்.

அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder):

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியண்டுகளிலேயே விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. எஸ் இ-சிவிடி, ஜி இ-சிவிடி மற்றும் வி இ-சிவிடி ஆகிய மூன்று தேர்வுகளின் விலையிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்டுகளின் விலையிலும் ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ரூ. 15.11 லட்சத்துக்கேக் கிடைத்து வந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் தற்போது ரூ. 15.61 லட்சத்திற்கு கிடைக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

நிறுவனம் இந்த கார் மாடலில் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் ஆரம்ப விலை ரூ. 10.48 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 17.19 லட்சம் ஆகும். இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதில் புதிதாக சமீபத்திலேயே சிஎன்ஜி தேர்வை டொயோட்டா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 13.23 லட்சம் தொடங்கி ரூ. 15.29 லட்சம் வரையிலான விலையில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota hikes glanza hyryder price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X