இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!

அண்மையில் நிறுத்தப்பட்ட புக்கிங் பணிகள் மீண்டும் இன்னோவா க்ரிஸ்டா டீசலுக்கு தொடங்கி இருக்கின்றது. புதிய அவதாரத்தில் டீசல் இன்னோவா க்ரிஸ்டா விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் டீசல் இன்னவோ கிரிஸ்டா காரின் விற்பனையை நிறுத்துவதாக டொயோட்டா அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு டொயோட்டா இன்னோவா டீசல் கார் பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையிலேயே அடுத்த ஒரு சில தினங்களிலேயே விரைவில் டீசல் இன்னோவா கிரிஸ்டா விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற வாக்குறுதியை நிறுவனம் வழங்கியது.

இன்னோவா க்ரிஸ்டா

டீசல் இன்னோவாவிற்கு நாட்டில் டிமாண்ட் அதிகம் காணப்பட்ட நிலையிலேயே அதன் புக்கிங்கை நிறுவனம் நிறுத்தியது. அதிகப்படியான புக்கிங் அதிகப்படியான காத்திருப்பு காலத்தை உருவாக்கும் என்பதன் அடிப்படையிலேயே முன்பதிவுகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையிலேயே மீண்டும் அதை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் டொயோட்டா களமிறங்கி இருக்கின்றது. மறு விற்பனைக்குக் வர இருக்கும் இந்த டீசல் பதிப்பை டொயோட்டா லேசாக அப்டேட் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகையால், அது புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வருவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையிலேயே டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா டீசலுக்கான ப்ரீ-லான்ச் புக்கிங்கையும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது டீசல் இன்னோவா விற்பனைக்கு வருவதற்கு முன்னரே புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ரூ. 50 ஆயிரம் முன்தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. நான்கு புதிய ட்ரிம்களில் இன்னோவா க்ரிஸ்டா டீசல் எம்பிவி விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.

இன்னோவா க்ரிஸ்டா

ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகியவையே அவை ஆகும். புதிய அவதாரமாக டீசல் இன்னோவா க்ரிஸ்டாவில் பல்வேறு சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், புதிய சதுர வடிவிலான கிரில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதுதவிர, புதிய பம்பரில் குரோம் பட்டைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த குரோம் அணிகலனை பம்பர், கிரில், பனி மின் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் நம்மால் காண முடிகின்றது. இவையே இன்னோவா க்ரிஸ்டாவிற்கு புதிய தோற்றத்தை வழங்குகின்றது.

குறிப்பாக, மிகவும் கவர்ச்சியான காராகவும் இன்னோவாவை இந்த அணிகலன்களே காட்டுகின்றன. அதேநேரத்தில், இன்னோவாவிற்கான உரித்தான ஸ்டைல் மற்றும் தோற்றத்தில் இந்த நிறுவனம் கை வைக்கவில்லை. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவாவுடன் ஒத்துபோக கூடிய அம்சங்கள் பலவற்றை புதிய இன்னோவா க்ரிஸ்டாவில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதேபோல், காரின் உட்பகுதியிலும் கணிசமான அப்டேட்டுகளை டொயோட்டா செய்திருக்கின்றது. ஆனால், இருக்கை மற்றும் முக்கிய அம்சங்கள் விஷயத்தில் எந்தவொரு மாற்றத்தையும் அது செய்யவில்லை.

இன்னோவா க்ரிஸ்டா

கேப்டைன் இருக்கை வசதிக் 7 சீட்டர் ஆப்ஷன் அல்லது 8 இருக்கைகள் தேர்வுகளுடன் புதிய இன்னோவா க்ரிஸ்டா விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ட்ம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடன் புதிய இன்னோவாவில் வழங்கப்பட இருக்கின்றது. இவற்றுடன், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, ஆம்பியன்ட் லைட் மற்றும் சாவியில்லாமலே காருக்குள் நுழைதல் மற்றும் ஆன் செய்தல் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அம்சத்திலும் புதிய இன்னோவா சற்றும் குறைச்சலில்லாத காராக காட்சியளிக்க இருக்கின்றது. அந்தவகையில், 7 ஏர் பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கத்தில் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களே புதிய இன்னோவா க்ரிஸ்டாவில் இடம் பெற இருக்கின்றன. இன்னோவா ஹைகிராஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வராத நிலை தென்படுகின்றது.

இது விற்பனைக்கு வந்த பின்னர், இதன் உடன் சேர்த்து 150 பிஎஸ் 2.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. ஆம், தற்போது விற்பனையில் இருக்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் மோட்டார் விற்பனையில் இருந்து அகற்றப்பட உள்ளது. அதேவேளையில் உங்களின் விருப்பமாக பெட்ரோல் தேர்வாக இருப்பின், நீங்கள் ஹைபிரிட் வசதிக் கிடைக்க உள்ள இன்னோவா ஹைகிராஸை மட்டுமே வாங்கிக்க முடியும்.

குறிப்பு: கடைசி இரு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை

Most Read Articles
English summary
Toyota innova crysta diesel pre launch booking starts
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X