புதிய டொயோட்டா இன்னோவா காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் தருமா! அதான் எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova HyCross) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை (Price) 18.30 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 28.97 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

G, GX, VX, ZX மற்றும் ZX (O) என மொத்தம் 5 வேரியண்ட்களில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் கிடைக்கும். இது ஒரு ஹைப்ரிட் (Hybrid) கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். விலை எவ்வளவு என்பது தெரிவதற்கு முன்பாகவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை நிறைய பேர் முன்பதிவு செய்து விட்டனர். அதிக மைலேஜ் உள்ளிட்ட காரணங்களால், இந்த காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களை முன்பதிவு செய்வதற்குதான் வாடிக்கையாளர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய டொயோட்டா இன்னோவா காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் தருமா! அதான் எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!

இவ்ளோ மாசம் வெயிட் பண்ணணுமா?

எனவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு 12 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு அதிக காத்திருப்பு காலம் இருப்பதால், இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்பதை, டொயோட்டா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார்களை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

மைலேஜை வாரி வழங்கும் இன்ஜின்!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 21.2 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என டொயோட்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதுதவிர ஸ்ட்ராங் ஹைப்ரிட் அல்லாத 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்படுகிறது.

இவ்ளோ வசதிகள் இருக்கா!

சிறப்பான மைலேஜ் கிடைப்பதுடன், ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருப்பதும், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. வசதிகளை பொறுத்தவரையில், சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, சப் வூஃபர் உடன் 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பாதுகாப்பிற்கும் பஞ்சமே இல்ல!

டொயோட்டா இன்னோவா காரின் முந்தைய மாடல்களே தாராளமான இடவசதிக்கு பெயர் பெற்றவை. இந்த சூழலில், முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது, புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் உள்ளே இடவசதி மிகவும் தாராளமாக உள்ளது. அத்துடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. 6 எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹை பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

மீண்டும் முன்பதிவு துவங்குமா?

இதற்கிடையே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கு முன்பதிவு நிறுத்தப்பட்டிருப்பது தற்காலிகமானதுதான். காத்திருப்பு காலம் ஓரளவிற்கு குறைந்த பிறகு, முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் சேர்த்து, மற்றொரு புதுவரவான டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களுக்கும் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மாருதியும் களத்தில் இறக்குது!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் இந்த காரை தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த 2 நிறுவனங்களுக்கும் இடையே கூட்டணி இருப்பதால், அவை கார்களை பரிமாறி கொள்கின்றன. டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) இதற்கு ஒரு உதாரணம். மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) கார்தான் டொயோட்டா பிராண்டில், க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை, மாருதி சுஸுகி நிறுவனம் வேறு ஒரு பெயரில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross deliveries begin in india all details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X