பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!

உலகிலேயே அதிகமான கார்களை தயாரிக்கும் நிறுவனமாக டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகள் நம்பர் 1இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் எது என்று கேட்டால் சின்ன குழந்தை கூட மாருதி எனச் சொல்லி விடும் அந்த அளவிற்கு மாருதி காருக்கு மார்கெட்டில் செம மவுசு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 லட்சம் கார்கள் விற்பனை செய்கிறது. ஆனால் உலக அளவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது எனத் தெரியுமா? பலருக்கும் இது சற்று குழப்பமாக இருக்கும், சிலர் ஃபோக்ஸ்வேகன் என்பார்கள், சிலர் ஜெனரல் மோட்டார்ஸ் என்பார்கள்.

பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!

ஆனால் உண்மையில் உலக அளவில் அதிகம் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் டொயோட்டா தான். ஆம் இந்தியாவில் பெரிய அளவில் விற்பனையைப் பெறாத நிறுவனம் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவிலான விற்பனையைச் செய்து வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிகமான கார்களை விற்பனை செய்து நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் தனது துணை நிறுவனங்களான டைஹட்சு மோட்டார் கம்பெனி, ஹோனோ மோட்டார்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மொத்தம் 10.5 மில்லியன் கார்களை உலகம் முழுவதும் தயாரித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இரண்டாம் இடத்தில் வெறும் 8.3 மில்லியன் கார்களை மட்டுமே தயாரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகள் இல்லாத அளவிற்குக் குறைவான கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. டொயோட்டா என்னதான் நம்பர் 1 இடத்திலிருந்தாலும் பெரிய அளவில் வளர்ச்சியைச் சந்திக்கவில்லை. சர்வதேச அளவில் உள்ள டிமாண்ட், புதிய கார் நிறுவனங்களின் வருகை, குறிப்பாக டெஸ்லாவின் வளர்ச்சி ஆகியவற்றால் பெரிய அளவில் டொயோட்டா நிறுவனத்தால் வளர முடியவில்லை.

இது போகச் சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி காரணமாகப் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைக் குறைத்துள்ளது. மேலும் தங்கள் திறனைக் குறைத்துள்ளது. அதிகம் செலவு செய்வதில்லை. இந்த பிரச்சனை காரணமாக டொயோட்டாவும் அதிகமான கார்களை தயாரிக்க முடியவில்லை. டொயோட்டா காருக்காக பல வாடிக்கையாளர்கள் மாதக் கணக்கில் ஏன் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் டொயோட்டா நிறுவனம் ஒரே ஆண்டில் 10.6 மில்லியன்கார்களை தயாரிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் செமி கண்டெக்டர் மற்றும் மற்ற உதிரிப் பாக தட்டுப்பாடு காரணமாக முழு இலக்கை எட்டி பிடிக்க முடியவில்லை. டொயோட்டா மொத்தம் 10.4 மில்லியன் லைட் கார்களை தான் தயாரிக்க முடிந்தது. இருந்தாலும் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. அடுத்த இலக்காக 11 மில்லியன் லைட் கார்களை இந்தாண்டு தயாரிக்க முடிவு செய்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தாண்டு 7 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் போதுமான அளவு கார்களை தயாரிக்க முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஆனால் இந்த இழப்பை அடுத்த 2024ம் ஆண்டிற்குள் ஈடுசெய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டொயோட்டா நிறுவனம் பெட்ரோல் டீசல் மட்டும் இல்லாமல் வேறு தொழிற்நுட்பங்களிலும் தங்கள் கால் தடத்தைப் பதித்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் பேட்டரி வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள், ஹைட்ரஜன் வாகனங்கள், மற்றும் வழக்கமான கம்பஷன் இன்ஜின் வாகனங்கள் எனப் பல விதமான வாகனங்களைத் தயாரிக்கிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Toyota is the worlds top selling car maker for the third consecutive year
Story first published: Monday, January 30, 2023, 16:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X