டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி vs மாருதி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி... இந்த இரண்டு கார் மாடலில் எது பெஸ்ட்?

கடந்த காலங்களில் டீசல் வாகனங்களுக்கு நிலவி வந்ததைப்போல் இன்றைய காலகட்டத்தில் சிஎன்ஜி வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வாகனங்களின் மீதான மோகம் தற்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவதை நம்மால் உணர முடிகின்றது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையான உயர்ந்துக் கொண்டிருப்பதும் ஓர் முக்கிய காரணமாகும்.

இந்த நிலையிலேயே மக்கள் மத்தியில் சிஎன்ஜி கார்களுக்கு டிமாண்ட் உயர்ந்து வருவதை உணர்ந்து வாகன உற்பத்தியாளர்கள் சிஎன்ஜி வாகனங்களை அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் மாருதி சுஸுகி அதன் கிராண்ட் விட்டாரா சிஎன்ஜியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது நிகழ்ந்த சில தினங்களிலேயே டொயோட்டா நிறுவனம் அதன் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் மாடலில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

சிஎன்ஜி

இரண்டும் ஒரே கார் மாடல்கள்தான் ஆனால் வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆமாங்க ஒர் கார் மாடலைதான் மாருதி சுஸுகி அதன் சின்னத்தின்கீழும், டொயோட்டா அதன் லோகோவின்கீழும் விற்பனைக்கு வழங்குகின்றன. இரண்டிலும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. இருப்பினும், இந்த இரண்டில் எதை வாங்கலாம் என்கிற சந்தேகம் சிஎன்ஜி கார் பிரியர்கள் மத்தியில் எழும்பாமல் இல்லை. இத்தகைய சந்தேகம் கொண்டவர்களுக்கு உதவும் விதமாகவே இந்த பதிவை நாங்கள் தற்போது தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

அதாவது, மாருதி சுஸுகி அதன் கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி தேர்வில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளை வழங்குகின்றது?, அதேபோல் டொயோட்டா நிறுவனம் அதன் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி தேர்வில்? என்ன சிறப்பு வசதிகளை வழங்குகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். இதை வைத்து உங்களுக்கான எந்த சிஎன்ஜி கார் பெஸ்ட் என்பதை சுலபமாக தேர்வு செய்து கொள்ளலாம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சிஎன்ஜி

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி (Maruti Suzuki Grand Vitara CNG)

மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாராவின் டெல்டா மற்றும் ஜெட்டா ஆகிய இரு விதமான வேரியண்டுகளிலேயே சிஎன்ஜி ஆப்ஷனை வழங்குகின்றது. இதில், டெல்டா வேரியண்டில் கிடைக்கும் சிஎன்ஜி தேர்விற்கு ரூ. 12.85 லட்சமும், ஜெட்டா வேரியண்டில் கிடைக்கும் சிஎன்ஜிக்கு ரூ. 14.84 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேவேளையில் கிராண்ட் விட்டாரா 10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி (Toyota Urban Cruiser Hyryder CNG)

மாருதி சுஸுகியை போலவே டொயோட்டா நிறுவனமும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் இரு விதமான தேர்வுகளிலேயே சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்குகின்றது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாடலின் எஸ் மற்றும் ஜி ஆகிய இரு வேரியண்டுகளிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், எஸ் வேரியண்டில் கிடைக்கும் சிஎன்ஜி தேர்விற்கு ரூ. 13.23 லட்சமும், ஜி வேரியண்டில் கிடைக்கும் சிஎன்ஜிக்கு ரூ. 15.29 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை வழக்கமான அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் பெட்ரோல் தேர்வைக் காட்டிலும் 95 ஆயிரம் ரூபாய் அதிகம் ஆகும்.

சிஎன்ஜி

எஞ்ஜின் விபரம்:

இரு பிராண்டின் சிஎன்ஜி தேர்வுகளிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என இரண்டிலும் இந்த மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 88 பிஎச்பி பவரையும், 121 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே மோட்டார்கள் வழக்கமான பெட்ரோலில் இயங்கும்போது 103 பிஎச்பி பவரையும், 136 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் இடம் பெற்றிருக்கும் மோட்டார் சற்று மாறுபட்ட பவரை வெளியேற்றும். திறன் வெளிப்பாட்டில் லேசான வித்தியாசம் தென்பட்டாலும் மைலேஜ் விஷயத்தில் பெரியளவில் வித்தியாசம் இருக்காது. ஆமாங்க, இரு சிஎன்ஜி கார்களும் ஒரே மாதிரியான ரேஞ்ஜை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. 26.6 கிமீ வரையில் இவை மைலேஜ் தரும்.

சிறப்பம்சம் விஷயத்தில் மாற்றம்

டொயோட்டா அதன் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மாருதி சுஸுகி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பவும் அந்தந்த கார் மாடல்களில் சிறப்பு அலங்கார அம்சங்களை வழங்கி வருகின்றது. இரண்டும் பிரீமியம் தர சிஎன்ஜி கார்களாகும். ஆகையால், பெரிய தொடுதிரை, செல்போன் இணைப்பு மற்றும் ஆப்பிள் கார் ப்ளே - ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Toyota urban cruiser hyryder cng vs maruti grand vitara cng
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X