டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!

நடப்பாண்டின் முதல் மாதமான ஜனவரியில் டொயோட்டா வாகனங்களின் விற்பனை நம்ப முடியாத அளவு வளர்ச்சியை பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி, டொயோட்டா நிறுவனத்திற்கு மிக சூப்பரான மாதமாக அமைந்திருக்கின்றது. ஆரம்பமே அமர்களம் என கூறும் அளவிற்கு அமோகமான விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் மொத்த வியாபாரம் 12,835 யூனிட்டுகளாக அதிகரித்து உள்ளன. ஆமாங்க இத்தனை யூனிட் புதிய வாகனங்களே 2023 ஜனவரியில் விற்பனையாகி இருக்கின்றது. இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரியைக் காட்டிலும் 175 சதவீதம் அதிகம் ஆகும்.

டொயோட்டா

2022 டிசம்பரையும் பின்னுக்கு தள்ளியிருக்கு 2023 ஜனவரி

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 2022 ஜனவரியில் 7 ஆயிரத்து 328 யூனிட் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இதேபோல், 2022 டிசம்பரையும் 2023 ஜனவரி வீழ்த்தி இருக்கின்றது. ஆமாங்க, 2022 டிசம்பரில் ஆகிய விற்பனையைக் காட்டிலும் 2023 ஜனவரியில் ஆகிய விற்பனை எண்ணிக்கை அதிகமானதாகக் கட்சியளிக்கின்றது. 2022 டிசம்பரில் 10,421 யூனிட் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது.

வரவேற்பு அடுத்து வரும் மாதங்களிலும் அதிகரிக்கும்

இதைவிட 23.16 சதவீதம் அதிகம் விற்பனையே 2023 ஜனவரியில் ஆகி இருக்கின்றது. இந்த விற்பனை வளர்ச்சியின் வாயிலாக டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு முன்பை விட பல மடங்கு டிமாண்ட் அதிகரிப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதேபோல் தொடர்ச்சியாக டொயோட்டாவின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டிருப்பதையும் நம்மால் அறிய முடிகின்றது. இந்த விற்பனை வளர்ச்சிக்கு நிறுவனத்தின் புதுமுக வருகைகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.

டொயோட்டா

இன்னோவா ஹைகிராஸ்க்கு வரவேற்பு அதிகம்

நிறுவனம் இந்திய சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது வழக்கமான இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகள் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கே தற்போது இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. டொயோட்டாவின் இந்த தயாரிப்பிற்கு மட்டும் இல்லைங்க பிற வாகன மாடல்களான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹைலக்ஸ் ஆகியவற்றிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.

ப்ரீ லான்ச் புக்கிங்

இவற்றிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பினாலேயே நிறுவனத்தால் 2023 ஜனவரி விற்பனையில் புதிய உச்சத்தை எட்ட முடிந்திருக்கின்றது. டொயோட்டா நிறுவனம் இன்னும் ஒரு சில தினங்களில் இன்னோவா க்ரிஸ்டாவின் டீசல் வேரியண்டிற்கான விற்பனையைத் தொடங்க இருக்கின்றது. தற்போது ப்ரீ லான்ச் புக்கிங் பணிகள் இந்த காருக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாக இன்னோவா க்ரிஸ்டா டீசல் இருக்கின்றது. இதன் விற்பனையை சில வாரங்களுக்கு முன்னர் டொயோட்டா அதிரடியாக நிறுத்தியது.

டொயோட்டா

வேற லெவல்ல அப்டேட் பண்ணியிருக்காங்க

காத்திருப்பு காலம் அதிகரித்து விடக் கூடாது என்கிற காரணத்திற்காகவே இதன் விற்பனை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் டீசல் இன்னோவா க்ரிஸ்டாவிற்கான புக்கிங்குகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. புதிய அவதாரத்தில் இந்த இன்னோவா க்ரிஸ்டா டீசல் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதை நிறுவனம் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. வெளிப்புறத் தோற்றத்தை சிறப்பு அணிகலன்களால் அலங்கரித்திருக்கின்றது.

இதன் காரணமாக கூடுதல் கவர்ச்சியான காராக இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாறியிருக்கின்றது. இதற்கு ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் ப்ரீ-லான்ச் புக்கிங் தொடங்கி இருக்கின்றது. இதுதவிர, அர்பன் க்ரூஸர் ஹைரடர் சிஎன்ஜி-யின் விற்பனை பணிகளும் நாட்டில் தொடங்கப்பட்டு உள்ளது. சமீபத்திலேயே இதன் விலைகளை டொயோட்டா அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சிஎன்ஜி அர்பன் க்ரூஸர் ஹைரைடரை விற்பனையகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் தொடங்கியது.

ஹைரைடர் சிஎன்ஜி அறிமுகம்

அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி மாடல் எஸ் (S) மற்றும் ஜி (G) என்கிற இரண்டு வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கும். இதில், எஸ் வேரியண்ட்டிற்கு 13.23 லட்ச ரூபாயும், ஜி வேரியண்ட்டிற்கு 15.29 லட்ச ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனங்களின் விற்பனை தொடக்கம் அடுத்தடுத்த மாதங்களிலும் டொயோட்டாவிற்கு நல்ல வரவேற்பை வளர்ச்சியையே வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota wholesales grow 175 percent
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X