வேட்டியை மடித்து கட்டிய ஹோண்டா, ஹூண்டாய்! மாருதியை நசுக்க போறாங்க! இந்த 2க்கும் முன்னாடி அவங்க கார் நிக்காது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

ஆனால் வரும் மாதங்களில் இந்தியாவின் மிட்-சைஸ் செடான் (Mid-size Sedan) செக்மெண்ட்டும் எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2 புதிய மிட்-சைஸ் செடான் கார்கள் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அந்த 2 புதிய மிட்-சைஸ் செடான் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி வாருங்கள். இனி செய்திக்குள் செல்வோம்.

வேட்டியை மடித்து கட்டிய ஹோண்டா, ஹூண்டாய்! மாருதியை நசுக்க போறாங்க! இந்த 2க்கும் முன்னாடி அவங்க கார் நிக்காது!

2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் (2023 Honda City Facelift)

5வது தலைமுறை ஹோண்டா சிட்டி கார், கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ஹோண்டா நிறுவனம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கு சிட்டி கார் உதவி வருகிறது. இந்த சூழலில் ஹோண்டா சிட்டி காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) மாடல் கடந்த 2022ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்த புதிய மாடலில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் புதிய முன் பக்க மற்றும் பின் பக்க பம்பர்கள் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வசதிகளை பொறுத்தவரையில், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம்.

அத்துடன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடலின் விலை குறைவான புதிய வேரியண்ட் ஒன்றையும் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் தொடர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா (New-Gen Hyundai Verna)

ஹூண்டாய் நிறுவனம் வெர்னா காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. இது புதிய தலைமுறை மாடல் என்பதால், வெளிப்புற டிசைன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் சொனாட்டா மற்றும் ஹூண்டாய் எலாண்ட்ரா ஆகிய கார்களை மனதில் வைத்து, புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா டிசைன் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அதேபோல் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரில், புத்தம் புதிய கேபின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அடாஸ் (ADAS) உள்பட ஏராளமான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்படலாம். அத்துடன் தற்போது உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினிற்கு பதிலாக புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படலாம்.

எப்போது வரும்?

2023 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா ஆகிய 2 கார்களும் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்களுக்கு இதன் காரணமாக இந்திய சந்தையில் மிக கடுமையான போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Upcoming sedan cars india honda city facelift new gen hyundai verna
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X