புதிய பெயரில் பிஎஸ்-4 டீசல் அம்பாசடர் காரை களமிறக்கும் எச்எம்!

Ambassador
வாடிக்கையாளர்களால் செல்லமாக அம்பி என்று அழைக்கப்படும் அம்பாசடர் காரின் புதிய பிஎஸ்-4 டீசல் எஞ்சின் மாடலை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த காரை அம்பாசடர் என்றில்லாமல் புதிய பெயரில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது பிஎஸ்-3 டீசல் எஞ்சின் மற்றும் பிஎஸ்-4 பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் அம்பாசடர் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு நிதி அமலில் இருக்கும் 17 மாநகரங்களில் இந்த புதிய டீசல் அம்பாசடரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

பிஎஸ்-3 டீசல் எஞ்சினைவிட புதிய பிஎஸ்4 டீசல் எஞ்சின் அதிக பவர் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்ஸி மார்க்கெட்டை கருத்தில்கொண்டே புதிய அம்பாசடர் காரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கொண்டு வருகிறது.

ஏனெனில், புதிய அம்பாசடர் காரில் புதிதாக எதுவும் இருக்காது. எஞ்சினை தவிர. எனவே, தொழில்நுட்ப வசதிகள், டிசைன் என்று எடுத்து பார்த்தால் இப்போது மார்க்கெட்டில் இருக்கும் கார்களுடன் போட்டி போட முடியாத நிலை இருக்கிறது.

இதனால், தனிநபர் மார்க்கெட்டில் எடுபடாது என்று ஆட்டமொபைல் துறை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
English summary
C K Birla group's automobile arm Hindustan Motors will launch a new model of its iconic car Ambassador, powered by a 1.5 litre BS IV-compliant diesel engine. According to the company, it will soon introduce the BS IV complaint model with a new name in the market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X