ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் எல்பிஜி மாடல் அறிமுகம் - விபரம்!

By Saravana

ரூ.4.96 லட்சம் விலையில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் எல்பிஜி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கருத்தில்கொண்டு எல்பிஜியில் இயங்கும் கிராண்ட் ஐ10 காரை ஹூண்டாய் களமிறக்கி உள்ளது. இதன்மூலம், கிராண்ட் ஐ10 காரின் விற்பனை அதிகரிக்கும் என ஹூண்டாய் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கிராண்ட் ஐ10 காரின் எல்பிஜி மாடலின் மைலேஜ் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


வேரியண்ட்

வேரியண்ட்

கிராண்ட் ஐ10 காரின் மேக்னா வேரியண்ட்டில் மட்டும் இந்த எல்பிஜி சிலிண்டர் கிட் பொருத்தப்பட்ட மாடல் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக இந்த காரில் காரின் யூரோ-5 மாசுக்கட்டுப்பாடு அம்சம் கொண்ட 998சிசி கப்பா பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் எல்பிஜி கிட் கொண்டதாக வந்துள்ளது. இந்த எஞ்சின் 68 பிஎச்பி பவரையும், 94 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் எல்பிஜி மாடல் லிட்டர் அளவீட்டின்படி, 20.3 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

மேக்னா வேரியண்ட்டின் அடிப்படையிலான இந்த எல்பிஜி மாடலில் ரியர் பார்க்கிங் சென்சார்கள், கீ லெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங், பனி விளக்குகள், பவர் விண்டோஸ், ரியர் ஏசி வென்ட்டுகள், என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்மென்ட் ரியர் வியூ கண்ணாடிகள் போன்ற வசதிகள் இருக்கும்.

விலை

விலை

ரூ.4,96,034 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai India has been launching successful products in the market for a while now. The South Korean manufacturer had recently launched its Grand i10 hatchback in India. They have launched it in petrol as well as diesel versions and have decided to further increase its range. 
Story first published: Friday, July 4, 2014, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X