கார் எஞ்சினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் விடுவதால் ஏற்படும் தீமைகள்!

காரின் மதிப்பை கூட்டுவதற்கும், கவலையில்லா பயணங்களை தருவதற்கும் மட்டுமின்றி, பாக்கெட்டிற்கு பங்கம் வராமல் அதிக மைலேஜ் பெறுவதற்கும் கார் எஞ்சினை பக்குவமாக பராமரிப்பது அவசியம்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் காரை பயன்படுத்துவோருக்கு அடிக்கடி காரை ஐட்லிங்கில் விட்டு வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிலர் எவ்வளவு நேரமானாலும், கார் எஞ்சினை ஆஃப் செய்யமாட்டார்கள்; சிலர் உடனே எஞ்சினை ஆஃப் செய்துவிடுவது வழக்கம். இதில், எது சரி, தவறு என்பதை ஸ்லைடரில் காணலாம்.

சரியா, தவறா?

சரியா, தவறா?

ஐட்லிங் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் அதன் உண்மைகள் பற்றிய தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் தொடர்ந்து காணலாம்.

1. எரிபொருள்

1. எரிபொருள்

எரிபொருளை மிச்சப்படுத்தும் வழிமுறைகளை படித்தும், கேட்டும் கடைபிடிக்கும் பலர் கார் எஞ்சினை ஆஃப் செய்து, ஸ்டார்ட் செய்வதைவிட நீண்ட நேரம் ஐட்லிங்கில் விட்டுவைப்பதால் எரிபொருளை சேமிக்க முடியும் என்று கருதுகின்றனர். ஆனால், கார் எஞ்சினை ஆஃப் செய்து ஸ்டார்ட் செய்யும்போது அதிக எரிபொருளை கிரகிக்கும் என்பதும் தவறான கருத்து.

தேய்மானம்

தேய்மானம்

கார் எஞ்சினை நிறுத்தி, ஸ்டார்ட் செய்யும்போது கார் எஞ்சின் பாகங்கள் அதிக உராய்வு மற்றும் தேய்மானம் ஏற்படுவதாக கருதுகிறோம். ஆனால், தற்போது வரும் பாகங்கள் இதுபோன்ற உராய்வு மற்றும் தேய்மானங்களை தாங்கும் விதத்திலும், மிகவும் தரமானதாக கொடுக்கப்படுவதால், கவலைப்பட தேவையில்லை. மேலும், வீணாகும் எரிபொருளுக்கு செலவிடும் தொகையையும், தேய்மான பாகத்தை மாற்றுவதற்கு ஆகும் செலவையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, எரிபொருளுக்குத்தான் அதிகம் செலவு ஏற்படும் என்பதை மனதில் வையுங்கள். மேலும், ஐட்லிங்கில் நீண்ட நேரம் நிற்கும்போது கார் எஞ்சின் போதுமான வெப்பநிலையில் இயங்காது என்பதால், மைலேஜ் வெகுவாக குறையும்.

பராமரிப்பு செலவீனம்

பராமரிப்பு செலவீனம்

வீணாகும் எரிபொருளுக்கு செலவிடும் தொகையையும், தேய்மான பாகத்தை மாற்றுவதற்கு ஆகும் செலவையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, எரிபொருளுக்குத்தான் அதிகம் செலவு ஏற்படும் என்பதை மனதில் வையுங்கள். மேலும், ஐட்லிங்கில் நீண்ட நேரம் நிற்கும்போது கார் எஞ்சின் போதுமான வெப்பநிலையில் இயங்காது என்பதால், மைலேஜ் வெகுவாக குறையும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு

எஞ்சினை ஆஃப் செய்து வைப்பதால், எரிபொருள் மிச்சமாவதோடு, கார் எஞ்சின் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும். நகர்ப்புறங்களில் காற்று மாசுபடுதலுக்கு வாகன புகை மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

மாசுப்படுத்தும் அளவு

மாசுப்படுத்தும் அளவு

ஒவ்வொரு காரும் 10 நிமிடங்கள் ஐட்லிங்கில் நிற்பதை தவிர்த்தால், காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவை வெகுவாக தவிர்க்க முடியும் என க்ரீன் லிவிங் மற்றும் சஸ்டெயினபிள் பிசினஸ் என்ற இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க ஒவ்வொருவரும் சிறிய முயற்சியை செய்யலாமே.

உடல் பாதிப்புகள்

உடல் பாதிப்புகள்

நகர்ப்புறங்களில் வாகனப் புகையால் ஏற்பட்டிருக்கும் காற்று மாசு காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி, நுண்ணறிவுத் திறன் ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுவதாக நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதவிர, பெரியவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் புற்றுநோயைக் கூட ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

குழந்தைகளுக்கு பாதிப்பு

குழந்தைகளுக்கு பாதிப்பு

காற்றில் வாகனப் புகையின் நச்சுத்தன்மை வெகுவாக அதிகரித்து வருவதால், குழந்தைகளுக்கு பெரும் உடல் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். எனவே, நம் எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து அதிக நேரம் கார் எஞ்சினை ஐட்லிங்கில் விடுவதை தவிர்க்கலாம்.

பணச்சேமிப்பு

பணச்சேமிப்பு

சமீபத்திய ஆய்வுபடி, அமெரிக்காவில் வாகனங்கள் ஐட்லிங்கில் நிற்பதன் மூலம், ஆண்டுக்கு ரூ.80 கோடி அளவுக்கு எரிபொருள் மூலம் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, பணத்தையும், கார் எஞ்சினையும் பாதுகாக்க அதிக நேரம் எஞ்சினை ஐட்லிங்கிலில் விடாதீர்கள்.

Most Read Articles
English summary
Letting the engine idle, say, at a signal or while pulled over for a few minutes, does more harm than good! Let's take a look why.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X