இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

எரிபொருள் சிக்கனம் குறித்து, ஃபோர்டு மோட்டார் கம்பெனி நடத்திய சர்வேவில், இந்திய டிரைவர்களிடம் காணப்படும் சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் வெளிப்பட்டுள்ளன. திர்ச்சியளிக்கும் அந்த புள்ளி விபரங்கள் குறித்

By Arun

எரிபொருள் சிக்கனம் குறித்து, ஃபோர்டு மோட்டார் கம்பெனி நடத்திய சர்வேவில், இந்திய டிரைவர்களிடம் காணப்படும் சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் வெளிப்பட்டுள்ளன. அதிர்ச்சியளிக்கும் அந்த புள்ளி விபரங்கள் குறித்தும், அதிக மைலேஜ் கிடைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது? என்பது குறித்தும் பின்வரும் ஸ்லைடர்களில் விரிவாக காணலாம்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

இந்திய டிரைவர்கள் பெரும்பாலானோருக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள்தான் டிரைவிங் பாடம் சொல்லி கொடுக்கும் குருநாதர்கள். எனவே முறையான பயிற்சி இல்லாமலேயே, அவர்களுக்கு மிக எளிதாக டிரைவிங் லைசென்ஸ் கிடைத்து விடுகிறது.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

அதுமட்டுமின்றி தங்கள் குருநாதர்கள் செய்யும் தவறுகளை, அச்சு பிசகாமல் அவர்களும் அப்படியே செய்கின்றனர். தேவையில்லாமல் ஹாரன் ஒலிப்பது, எந்நேரமும் கிளட்ச் பெடல் மீது கால்களை வைத்து கொண்டே இருப்பது என அப்படியான தவறுகளை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

இதனிடையே ஃபோர்டு மோட்டார் கம்பெனியானது, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளை சேர்ந்த 9,500 டிரைவர்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. இதில், காரின் எரிபொருள் சிக்கனம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

இந்த சர்வேவில் கலந்து கொண்டு பதில் அளித்தவர்களில் 1,023 பேர் இந்தியாவை சேர்ந்த டிரைவர்கள் ஆவர். சர்வேவின் முடிவில், எரிபொருள் சிக்கனம் குறித்த இந்திய டிரைவர்களின் சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் வெளிப்பட்டுள்ளன.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

ஜிபிஎஸ் எதுக்கு இருக்கு?

டிராபிக் ஜாமில் சிக்கி கொள்வதும், ஆமை வேகத்தில் காரை நகர்த்துவதும் அதிக அளவிலான எரிபொருளை வீணடித்து விடும். எனவே ஒரு இடத்தில் இருந்து புறப்படும்போது, ஜிபிஎஸ் பயன்படுத்தினால், டிராபிக் ஜாமில் இருந்து தப்பிக்கும் வகையில், மாற்று வழிகளை கண்டறிய முடியும்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

ஆனால் 27 சதவீத இந்திய டிரைவர்கள் மட்டுமே ஜிபிஎஸ் செக் செய்வது பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். எனவே எரிபொருளை மிச்சம் பிடிக்க வேண்டுமானால், ஒரு இடத்தில் இருந்து புறப்படும் முன், ஜிபிஎஸ் செக் செய்து, அதற்கு ஏற்றவாறு பாதையை தேர்ந்து எடுத்து பயணியுங்கள்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

க்ரூஸ் கண்ட்ரோல் யூஸ் பண்ணுங்க பாஸ்

க்ரூஸ் கண்ட்ரோலால், மைலேஜில் எந்த நன்மையும் கிடைப்பது இல்லை என 78 சதவீத இந்திய டிரைவர்கள் புலம்பி தள்ளியுள்ளனர். அதாவது அவர்கள் மனதில், க்ரூஸ் கண்ட்ரோல் குறித்த நம்பிக்கை அப்படிதான் உள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறு.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

கார் நிலையான வேகத்தில் பயணிக்க க்ரூஸ் கண்ட்ரோல் உதவி செய்கிறது. கார் சீரான வேகத்தில் பயணித்தால், தேவையில்லாத ஆக்ஸலரேஷன் தடுக்கப்படும். இதன்மூலம் எரிபொருள் வீணாவதை நிச்சயம் குறைக்க முடியும். பின் எப்படி மைலேஜ் கிடைக்காமல் போகும்?

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

ஹார்ஸ் ஆக்ஸலரேஷன் வேண்டவே வேண்டாம்

ஆக்ஸலேட்டரை தாறுமாறாக மிதிப்பதால், மைலேஜ் விஷயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என 40 சதவீத இந்திய டிரைவர்கள் நம்புகின்றனர். அதாவது ஆக்ஸலேட்டரை எப்படி மிதித்து தள்ளினாலும், மைலேஜில் எந்த பாதிப்பும் ஏற்படாதாம். ஆனால் அதுவும் தவறுதான். ஆக்ஸலேட்டரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

ஆக்ஸலேட்டரை தாறுமாறாக மிதிப்பதும், இன்ஜினின் வேகத்தை தேவையில்லாமல் திடீர் திடீரென அதிகரிப்பதும் காரின் மைலேஜில் பாதிப்பை உண்டாக்கி விடும். ஆனால் இந்த உண்மையை இந்திய டிரைவர்களில் ஏறத்தாழ பாதி பேர் அறிந்து வைத்திருக்கவில்லை. மனம் போன போக்கில்...இல்லை இல்லை... கால் போன போக்கில் அவர்கள் ஆக்ஸலரேஷன் செய்கின்றனர்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

ஆப் பண்ணலாமா? வேண்டாமா?

கார் சும்மா நின்று கொண்டிருக்கையில், இன்ஜினை ஆப் செய்யாமல் ஆன் செய்தே வைத்திருந்தாலும் கூட, மைலேஜில் எந்த பிரச்னையும் வராது என 26 சதவீத இந்திய டிரைவர்கள் நம்புகின்றனர். அதாவது சிக்னல் உள்ளிட்ட இடங்களில் கார் சும்மா நிற்கும்போது, இன்ஜினை ஆப் செய்வதற்கு பதிலாக, ஆன் செய்தே வைத்திருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

அதாவது கார் சும்மா நிற்கையில், இன்ஜினை ஆப் செய்யாமல் இருந்தால், அதிக அளவிலான எரிபொருள் மிச்சம் ஆகும் என நான்கில் ஒரு இந்திய டிரைவர் நம்புகிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

ஆனால் உண்மை வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது. 15 வினாடிகளுக்கு மேல் கார் சும்மா நின்று கொண்டிருந்தால், இன்ஜினை ஆன் செய்து வைத்திருப்பதற்கு பதில், ஆப் செய்வதே சிறந்தது. இதன்மூலம் நல்ல மைலேஜ் கிடைக்கும்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

மலைப்பாதையில் மைலேஜ் குறையுமா?

மேடு, பள்ளங்களை உள்ளடக்கிய மலைப்பாதைகள், நேரடியாக காரின் மைலேஜில் தாக்கத்தை உண்டாக்கி விடும். அதாவது சமதளத்தில் பயணிக்கும் ஒரு கார் உறிஞ்சும் எரிபொருளை விட, மலைப்பாதையில் பயணிக்கும் கார் அதிக அளவிலான எரிபொருளை நுகர்ந்து கொள்ளும்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

ஆனால் மலைப்பாதைகளில் பயணிக்கையில், காரின் எரிபொருள் அதிக அளவில் வீணாகாது, மைலேஜில் எந்த பாதிப்பும் உண்டாகாது என்று 52 சதவீத இந்திய டிரைவர்கள் நம்புகின்றனர்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

டெம்பரேச்சர் முக்கிய காரணி

ஒவ்வொரு இன்ஜினும் குறிப்பிட்ட டெம்பரேச்சரில் மட்டும்தான், அதன் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும். குளிர்காலத்தில் அத்தகைய வெப்பநிலையை அடைய இன்ஜின் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இது காரின் மைலேஜில் தாக்கத்தை உண்டாக்கும். ஆனால் குளிர் காலநிலையானது, மைலேஜில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை 73 சதவீத இந்திய டிரைவர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

மறுபக்கம் கோடை காலம் என்றால், ஏசி பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கும். இதுவும் கூட காரின் மைலேஜை குறைக்கும் அம்சம்தான். ஆனால் 'ஹாட்' ஆன காலநிலை, காரின் மைலேஜை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது 64 சதவீத இந்திய டிரைவர்களுக்கு தெரிவதில்லை.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

வெயிட்லெஸ்தான் மைலேஜூக்கு உகந்தது

காரில் அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றி சென்றால், நல்ல மைலேஜ் நிச்சயம் கிடைக்காது. எவ்வளவு குறைவான சுமையுடன் பயணிக்கிறோமோ, அவ்வளவு அதிகமான மைலேஜை எதிர்பார்க்கலாம்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

ஆனால் 65 சதவீத இந்திய டிரைவர்களுக்கு இது தெரிவது இல்லையாம். எனவே தேவையில்லாத பொருட்களை எல்லாம் காரில் இருந்து கழற்றி விடுவது நல்லது. நெடுந்தூர பிரயாணங்களின்போது, அத்தியாவசியமான பொருட்களை மட்டும் காரில் எடுத்து செல்லலாம்.

இந்திய டிரைவர்கள் முட்டாள்களா? இதையெல்லாமா நம்புவாங்க? அதிர்ச்சியளிக்கும் ஃபோர்டு சர்வே...

சரியான நேரத்தில் சர்வீஸ் அவசியம்

சரியான நேரத்தில் காரை சர்வீஸ் செய்வதன் மூலம், கார் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும். நல்ல மைலேஜையும் எதிர்பார்க்கலாம். ஆனால் ரெகுலராக சர்வீஸ் செய்தால், நல்ல மைலேஜ் கிடைக்கும் என்பதை 33 சதவீத இந்திய டிரைவர்கள் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர். அப்படியானால் மூன்றில் ஒருவர் மட்டுமே சரியான நேரத்தில் காரை சர்வீசுக்கு விடுகிறார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
8 STUPID things Indian drivers believe about fuel efficiency. read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X