கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம் என்பதற்கான காரணங்கள்!

கார் டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது பற்றி பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. அது சரியானதுதானா என்பதை இந்த செய்தியில் காணலாம்.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

கோடை காலத்தில் கார் டயர் வெடிக்கும் சம்பவங்களும், அதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படுவது குறித்த சமபவங்களும் அதிக அளவில் நடக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், டயரில் இருக்கும் காற்று வெப்பத்தால் விரிவடைவதுதான்.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

கோடை காலத்தில் நீண்ட நேரம் காரை ஓட்டும்போது டயர் சூடாகிறது. இது டயருக்குள் இருக்கும் காற்றின் குளிர்ச்சித்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

காற்று விரிவடைவதால், காற்றழுத்தம் வெகுவாக உயர்ந்து டயர் வெடிப்புக்கு வழிகோலுகிறது. உதாரணத்திற்கு ஒவ்வொரு 10 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை உயர்வுக்கும் 1.9% அளவுக்கு காற்றழுத்தத்தில் வேறுபாடு ஏற்படும். அதாவது, 0.9 பிஎஸ்ஐ அளவு காற்றழுத்தம் மாறுபடும்.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

சாதாரண காற்றைவிட நைட்ரஜன் வாயுவானது குளிர்ச்சித்தன்மை மிகுந்தது. இதனால், வெளிப்புற வெப்ப நிலை மற்றும் உராய்வு காரணமாக சூடான போதிலும் நைட்ரஜன் வாயுவின் வெப்பநிலையில் அதிக மாற்றம் ஏற்படாது.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

இதனால், நைட்ரஜன் வாயு நிரப்பிய டயர்களில் காற்றழுத்தம் சீராக இருப்பதால் டயர் வெடிப்புக்கு வாய்ப்பு குறைவாகிறது.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் நைட்ரஜன் வாயு நிரப்பிச் செல்வது பாதுகாப்பானது. அத்துடன் மற்றொரு முக்கிய விஷயம்.

நைட்ரஜன் வாயுவை நிரப்பும்போது காற்றழுத்தம் சீராக பராமரிக்கப்படுவதால், மைலேஜ் சிறப்பாக இருக்கும்.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

சாதாரண வாயுவை நிரப்பும்போது, அதில் இருக்கும் ஆக்சிஜன் ஆக்சிடேஷன் எனப்படும் வேதி மாற்றம் அடைந்து சில சமயங்களில் சக்கரங்களின் ரிம் பகுதியில் துருப்பிடித்து பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால், நைட்ரஜன் வாயு நிரப்பும்போது ரிம் பகுதி அதிக பாதிப்புகளை சந்திக்காது. இதுவும் மிக முக்கிய பாதுகாப்பு விஷயம்.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

மேலும், காற்றழுத்தம் அடிக்கடி குறைவதால் டயர் தேய்மானமும் அதிகரிக்கும். புதிய டயர்களை மாற்றுவது என்பது கார் பராமரிப்பில் மிகப்பெரிய செலவீனங்களில் ஒன்று. எனவே, டயர் அதிக காலம் உழைப்பதற்கும் நைட்ரஜன் வாயு நிரப்புவது நல்ல உபாயமாக இருக்கும்.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

நைட்ரஜன் வாயு நிரப்புவதில் இருக்கும் ஒரே பாதகமான விஷயம், இதற்கான கட்டணம். சாதாரண வாயு கட்டணமில்லாமல் பெட்ரோல் பங்குகளில் வழங்கப்படுகிறது. ஆனால், நைட்ரஜன் வாயு நிரப்புவதற்கு ஒரு டயருக்கு ரூ.40 வரை சார்ஜ் செய்யப்படுகிறது. எனினும், இது உங்கள் குடும்பத்தாரின் உயிர் பிரச்னை என்பதை மனதில் வைத்து நைட்ரஜன் வாயு நிரப்புவதே சிறந்ததாக இருக்கும்.

கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம்... ஏன் தெரியுமா?

டயரில் நைட்ரஜன் நிரப்பும்போது காற்றழுத்தம் அதிக வேறுபாடு இல்லாமல் சரியாக இருக்கும்போது பிரேக் சிஸ்டத்தின் செயல்பாடும் துல்லியமாக இருக்கும்.

Most Read Articles
English summary
Benefits Of Filling Nitrogen Gas In Car Tires.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X