பூட்டப்பட்ட காரை டென்னிஸ் பந்தை வைத்து திறக்க முடியுமா? உண்மை என்ன?

பூட்டப்பட்ட காரை டென்னீஸ் பந்தை வைத்துத் திறக்க முடியுமா? சமூகவலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்கள் எல்லாம் உண்மையா? இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

வாகன திருட்டு என்பது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் காரை திருடர்கள் பல யுக்திகளைப் பயன்படுத்தித் திருடிச் சென்று விடுகிறார்கள். இந்த பிரச்சனை உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலுமே இருக்கிறது. கார் திருட்டுகளைத் தடுக்க பல்வேறு தொழிற்நுட்ப அம்சங்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

உதாரணமாக காருக்கான லாக்கிங் சிஸ்டம், ஜிபிஎஸ், கீலெஸ் டெக்னலாஜி உள்ளிட்ட பல அம்சங்கள் காரின் பாதுகாப்பிற்காகத் தான் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாகச் சமூகவலைத்தளங்களில் பூட்டப்பட்ட கார்களை திறக்க டிப்ஸ் என்ற பெயரில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

அதன்படி ஒரு கார் பூட்டப்பட்ட நிலையில் நின்று கொண்டிருக்கும் போது அதன் உரிமையாளர் காரின் சாவியைத் தொலைத்துவிட்டாலோ அல்லது காரின் சாவியை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டாலோ காரை திறப்பதற்கான எளிதாக வழியாக அந்த வீடியோவில் சொல்லித்தரப்படுகிறது. அதில் அவர்கள் டென்னீஸ் பந்தை எடுத்து ஒரு புறம் மட்டும் ஓட்டைப்போட்டுவிட்டு அந்த ஓட்டை சரியாக காரின் கதவில் சாவி போடும் பகுதியில் வைக்க வேண்டும்.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

பின்னர் அந்த பந்தை வேகமாக அழுத்துவது மூலம் பந்துக்குள் காற்று அழுத்தமாகச் சென்று காரின் பூட்டப்பட்ட கதவு திறந்துவிடும் என அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான செயல்முறை விளக்கமும் செய்து காட்டப்படுகிறது. இது போன்று ஓரிரு வீடியோ மட்டுமல்ல ஏகப்பட்ட வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் உலாவருகின்றன.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

இதைப் பார்க்கும் போது மக்களுக்கு உண்மையிலேயே இப்படி டென்னீஸ் பந்தை வைத்துப் பூட்டியிருக்கும் காரை திறந்து விடலாம் என நினைப்பார்கள். இதைச் சிலர் பூட்டியிருக்கும் காரை திறக்கும் டிப்ஸாக நினைத்தாலும் பலர் கார்கள திருடர்கள் எளிதாகத் திறக்கும் வழியாக இது இருப்பதாகவே கருதினர். பொது இடத்தில் நிறுத்தப்பட்டுப் பூட்டப்பட்ட காரை எளிதாகத் திருடர்கள் திருட இந்த டெக்னிக்கை பயன்படுத்துவார்கள் எனக் கருதி வருகின்றனர்.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

ஆனால் இது முற்றிலும் பொய் இப்படியாகப் பூட்டப்பட்ட காரை டென்னீஸ் பந்தை வைத்து எல்லாம் திறக்க முடியாது. வெறும் காற்றின் அழுத்தத்தை வைத்து எல்லாம் கதவின் லாக்கை திறக்க முடியாது. இது முற்றிலும் பொய்யான தகவல் தான். இதைச் சிலர் முயற்சி செய்து பார்த்து ஃபெயிலியர் வேறு நடந்திருக்கிறது. இந்த வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

உண்மையில் இது சாத்தியமே இல்லை. சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில் எல்லாம் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக இது ஏமாற்றப்பட்டுச் செய்யப்பட்டுள்ளது. இப்படியான போலியாக டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை நம்பி நீங்கள் உங்கள் காரின் சாவியை வேண்டுமென்றே காருக்குள் வைத்து அதைத் திறந்து பார்த்து முயற்சிக்க வேண்டாம். பின்னர் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

உங்கள் காரின் சாவி தொலைந்துவிட்டாலோ அல்லது தெரியாமல் காருக்குள்ளேயே வைத்து காரை பூட்டிவிட்டாலோ நீங்கள் அந்த சாவியை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு இரண்டு வழிகள் தான் இருக்கிறது. முதல் வழி பொதுவாக கார் வழங்கும் போதே அதற்கு இரண்டு சாவிகள் வழங்கப்படும். ஒரு சாவி தொலைந்துவிட்டால் அல்லது காருக்குள்ளேயே வைத்து நீங்கள் லாக் செய்துவிட்டால் நீங்கள் இரண்டாவது சாவியைப் பயன்படுத்தி காரை திறக்கலாம்.

டென்னீஸ் பந்தை வைத்து காரை திறக்க முடியுமா ?

அல்லது அதற்கும் வாய்ப்பு இல்லை என்றால் நீங்கள் உங்கள் நிறுவனத்தின் அருகில் உள்ள ஷோரூமை தொடர்பு கொண்டால் அவர்கள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் செய்யும் நபர்களை நீங்கள் இருக்கும் இடத்திற்கே அனுப்பி அவர்கள் உங்கள் காரின் கதவைத் திறக்க உதவி செய்வார்கள். இதுவே சரியான வழி மற்றபடி இப்படியான போலியான விஷயங்களை நம்பி ஏமாறாதீர்கள்.

Most Read Articles
English summary
Can a locked car unlock using a tennis ball know full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X