உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கான ஆக்ஸசரீஸில் சிலவற்றில் சில ஆபத்துக்கள் இருக்கிறது. சில கார் ஓட்டுநர்கள் இந்த விதமான ஆக்ஸரீசை குறைந்த விலை அல்லது காருக்கு அழகூட்டுதல் உள்ளிட்ட சில காரணங்க

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கான ஆக்ஸசரீஸில் சிலவற்றில் சில ஆபத்துக்கள் இருக்கிறது. சில கார் ஓட்டுநர்கள் இந்த விதமான ஆக்ஸரீசை குறைந்த விலை அல்லது காருக்கு அழகூட்டுதல் உள்ளிட்ட சில காரணங்களால் வாங்கி சிக்கலில் மாட்டி கொள்ளகின்றனர்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

மார்கெட்டில் இருக்கும் பெரும்பாலா பொருட்கள் பயனுள்ளதாக இருந்தாலும் சில பொருட்கள் மட்டும் இவ்வாறான ஆபத்துக்களை விளைவிளைவிக்ககூடியவை. அவ்வாறான ஆக்ஸசரீஸ்களை கீழே காணலாம். இவைகளில் ஏதேனும் ஒன்று உங்கள் காரில் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள், இது போன்ற பொருட்களை உங்களிடம் யார் விற்க முயன்றாலும் வாங்க வேண்டாம்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

தரமில்லாத பிளோர்மேட்

இந்தியாவில் கார்களுக்கான பிளோர் மேட்டில் பல்வேறு வகையான பிளோர் மேட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் சில தரமில்லாத ஆபத்து விளைவிக்ககூடிய பிளோர் மேட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதிரியான பிளோர்மேட்கள் தரையில் சரியாக பிட் ஆகாமல் இருக்கும்.

இவ்வாறான பிளோர் மேட்கள் ஆக்ஸிலரேட்டர், பிரேக், கிளட்ச் ஆகியவற்றை நாம் மிதிக்கும் போது அது பிளோர் மேட்டிற்கு இடையில் சிக்கி பெரும் விபத்திற்கு காரணமாக இருக்கும். இவ்வாறாக நடந்த விபத்தில், விபத்து நடந்ததற்கு பின் எவ்வாறு இந்த விபத்து நடந்தது என்பத விளக்கும் வீடியோவை நீங்கள் மேலே பாருங்கள்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

ஸ்டியரிங் கவர்

சில கார் ஓனர்கள் தங்கள் காரின் உட்புறத்தை அழகாக வைக்க ஸ்டியரிங்கில் கவர் ஒன்றை மாட்டிக்கொள்ளகின்றனர். பெரும்பாலான கவர்கள் நல்ல கிரிப்பாக இருந்தாலும் சில ஸ்டியரிங் கவர்கள் கிரிப் இல்லாமல் இருக்கும். இதனால் நீங்கள் காரில் செல்லும் போது ஸ்டிரிங் கிரிப் இல்லாமல் கார் உங்கள் கண்ட்ரோலை இழந்து விபத்தில் சிக்க நேரிடலாம்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

கலர் ஃபாக் லைட் மற்றும் கலர் ஹெட்லைட்

சில கார்களின் ஃபாக் லைட்டிலோ அல்லது ஹெட்லைட்டிலலோ மஞ்சள் நிற டிரான்ஸ்பரன்ட் சீட் ஒன்று ஒட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறாக லைட்களில் கலர் ஷீட்களை ஒட்டுவது லைட்களில் தரத்தை குறைத்து விடும் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சத்தை உங்களுக்கு தராது. இதனால் பனி காலங்களில் இரவு நேரத்தில் கார் ஓட்ட உங்கள் மிகுந்த சிரமமாக இருக்கும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவது.

பொதுவாக எதிரில் வரும் வாகனத்தின் கண்கள் கூசாமல் இருக்க ஹெட்லைட்டின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதை நாம் பார்த்திருப்பபோம் ஆனால் சில கார் பிரியர்கள் தங்கள் கார் ஸ்போர்ட்ஸ் கார் போன்ற லுக்கில் இருக்க வேண்டும் என்பதற்காக கருப்பு ஸ்டிக்கர்களை ஹெட்லைட்டில் ஓட்டி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. இரவு நேரத்தில் ஹெட்லைட்டில் இருந்து வரும் வெளிச்சம் மிக குறைவாகவும் மங்களாகவும் இருக்கும். இதனால் உங்களுக்கு எதிரில் வரும் வாகனம் தெரியாமலும் எதிரில் வருபவருக்கு உங்கள் வாகனம் தெரியாமலும் விபத்தில் சிக்க நேரிடும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

காரின் பின்புறம் வைக்கப்படும் அழகு பொருட்கள்

சில கார் ஓட்டுநர்கள் நமது காருக்கு பின்னால் வரும் வாகனத்தில் வருபவர்களை கவரும் விதமாக காரிற்கு பின்னாள் உள்ள டிரேயில் தலையணை, பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை வைக்கின்றனர். இது டிரைவருக்கு ரியர் வீயூவை சரியாக தெரியாமல் செய்ய வழி வகுக்கும். மேலும் சில நேரத்தில் வேகமாக பிரேக் பிடிக்கும் போது அவை பின்புற சீட்டில் இருப்பவர்கள் மீது விழும். இது தேவையில்லாமல் டிரைவருக்க கவன சிதறலை ஏற்படுத்தும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

ரூப்பில் பொறுத்தப்பட்ட வீடியோ பிளேயர்

காரில் ரூப்பில் பொருத்தப்பட்ட வீடியோ பிளேயர்கள் டிரைவரின் கவனத்தை சிதற வைக்கின்றன. சில கார்களில் ஃபேக்டரி பிட்டிங்காகவே இது மாதிரியான வீடியோ பிளேயர்கள் வருகின்றன. அவை காரை ஓடும் போது இயங்காது. ஆனால் விற்பனைக்கு பின் வெளியில் பொருத்தப்படும் வீடியோ பிளேயர்கள் எல்லா நேரத்திலும் இயங்கும். இதனால் டிரைவருக்கு கவன சிதறல் ஏற்படும்.

சில கார்களில் இந்த பிளேயர் திறந்து வைத்தால் டிரைவருக்கு ரியர் வீயூ தெரியாமல் பாதிக்கப்படும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

கலர் மாற்றப்பட்ட பின் பக்க லைட்

சில கார் ஓனர்கள் தங்கள் காரின் கலருக்கு ஏற்ற வகையில் பின்ன பக்க லைட்டின் கலரையும் மாற்றி விடுகின்றனர். ஆனால் உலகளவில் பின் பக்க லைட்டின் கலர்கள் டிரைவிங்கின் போது மிக முக்கிய நீங்கள் பிரேக் பிடித்தால் பின் பக்கம் சிவப்பு லைட் எரிந்து பின்னால் வருபவர்களை எச்சரிக்கும். ஆனால் நீங்கள் லைட்டின் கலரை மாற்றினால் எல்லா லைட்டும் ஒரே கலராக தெரிந்து பின்னால் வருபவர்களை குழப்பி விபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பாக அமையும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

விற்பனைக்கு பின்பான எலெக்ட்ரிக்கல் மாற்றம்

காரை வாங்கியதற்கு பின் காரில் சில வெளியில் விற்பனையாகும் ஆக்ஸசரீஸை பொருத்த சிலர் காரில் உள்ள கம்பெனி மூலம் செய்யப்பட்ட வயரிங்கை மாற்று கின்றனர். இதனால் சில் எலெக்ட்ரிக்கலில் இருக்கும் பொருட்கள் விரைவில் சூடாகி வீணாக போகும் வாய்ப்புகள் உள்ளது. இவை பெரும்பாலும் காரில் உயர் ரக ஸ்பீர்கள் மற்றம் ஆடியோ சிஸ்டர் பொருத்தப்படும் போது நடக்கிறது.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

ஸ்டியரிங் ஸ்பின்னர்

சிலர் காரின் ஸ்டியரிங்கில் சிறிய ரக வீல்களை பொருத்துகின்னறர். இது காரை சிரமப்படாமல் திருப்ப உதவுகிறது. ஆனால் இதன் தரம் கேள்வி குறித் தான். சில நேரங்களில் நீங்கள் காரை திருப்பும் போது இது உடைத்தாலோ அல்லது ஜாம் ஆனாலோ உங்களுக்க சிக்கல் ஏற்படும். மேலும் காரில் வேகமாக செல்லும் போது இவ்வாறான வீல்களை பயன்படுத்துவது காரை விபத்திற்கு கொண்டு சென்று விடும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!

சீட் பெல்ட் அக்ஸசரீஸ்

சிலர் வெளிமார்கெட்டில் விற்கப்படும் பேன்சி சீட் பெல்ட்களை பயன்படுத்துகின்றனர். இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இதன் தரம் கேள்வி குறியாகதான் இருக்கும். அவசர காலகட்டத்தில் இது உங்கள் காலைவாரிவிட்டால் உங்கள் உயிருக்கு நீங்களே வினை வைத்தது போல மாறிவிடும்.

Most Read Articles
English summary
10 car accessories that can be very dangerous. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X