எலெக்ட்ரிக் / பெட்ரோல் - டீசல் காரில் எதில் பராமரிப்பு செலவு குறைவு? விரிவான விளக்கம் இதோ...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல்/ டீசல்கள் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் பராமரிப்பு விஷயங்களை இங்கே ஒப்பீடு செய்ய இருக்கிறோம். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மத்திய அரசின் வாகன் தளத்தின் விபரங்களின் படி இந்தியாவில் இந்த 2022-23ம் நிதியாண்டின் முதல் பாதியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கிட்டத்தட்ட 333 சதவீதம் அதிகமாகியுள்ளது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை விரும்பி வாங்கத் துவங்கிவிட்டனர். ஆனால் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை நம்பி வாங்கலாமா? அதனால் உண்மையிலேயே லாபமா? குறைந்த விலையில் உள்ள பெட்ரோல்/டீசல் கார்களை விட்டு விட்டு அதிகவிலையில் உள்ள எலெக்ட்ரிக் கார்களை ஏன் வாங்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

எலெக்ட்ரிக்/பெட்ரோல்-டீசல் காரில் எதில் பராமரிப்பு செலவு குறைவு? விரிவான விளக்கம் இதோ...

இந்த குழப்பத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்றால் ஒரு ஒப்பீட்டை நாம் செய்து பார்க்க வேண்டும் கார் வாங்கும் முன் விலையை ஒப்பிட்டால் நமக்கு பெட்ரோல்/ டீசல் கார்கள் தான் விலை குறைவு, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம் தான். ஆனால் அதற்கு பிறகான செலவுகளை நாம் ஒப்பீடு செய்தால் பெட்ரோல் செலவை விட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போடும் செலவு மிகவும் குறைவு அதுக்கு இது சரியாகப் போகிறது என வைத்துக்கொண்டாலும் இருக்கும் மிகப்பெரி குழப்பம் பராமரிப்பு தான்.

பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு பராமரிப்பு அதிகமா? எலெக்ட்ரிக் கார்களுக்கு பராமரிப்பு அதிகமாக என்ற கேள்வி பலருக்கு விடை தெரியாத ஒரு கேள்வியாக இருக்கிறது. அதற்கான தெளிவான பதிலை இங்கே காணலாம். பெட்ரோல்/ டீசல் வாகனங்களில் இன்ஜின், ப்யூயல் லைன்கள், பெட்ரோல் டேங்க் ஆகியவை இருக்கிறது. இது எல்லாம் எலெக்ட்ரிக் கார்களில் எலெக்ட்ரிக் மோட்டார் கண்ட்ரோலர் மற்றும் பேட்டரி பேக்காக மாறிவிடுகிறது.

வாகனத்தை ஓட வைக்கும் இயந்திரத்தைப் பொருத்தவரை எலெக்ட்ரிக் வாகனம் தான் மிக சிம்பிளாக இருக்கிறது. ஐசிஇ வாகனங்களை விட குறைவான பாகங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களில்தான் இருக்கிறது. பெட்ரோல்/டீசல் வாகனங்களில் உள்ள பாகங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்காவிட்டால் அது செயல் இழந்து போகும். அதே நேரம் பெட்ரோல்/டீசல் காரில் உள்ள ஸ்டியரிங், பிரேக், சஸ்பென்சன் மற்றும் ஏசி சிஸ்டம் எல்லாம் அப்படியே எலெக்ட்ரிக் காரிலும் இருக்கிறது.

பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏர்ஃபில்டர், இன்ஜின் ஆயில்,ஸ்பார்க் பிளாக், ரேடியேட்டர் கூலண்ட் உள்ளிட்டவற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எலெக்ட்ரிக் காரில் ஒரேயொரு மோட்டார் மட்டும் தான் இருக்கிறது அதை மட்டும் சரியாக பராமரித்தால் போதுமானது. மற்ற எந்த கவலையும் இல்லை. அதே நேரம் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் அதிக எடை கொண்டது.

இதனால் பெட்ரோல்/டீசல் இன்ஜின் காரில் உள்ள சஸ்பென்சன் இந்த இன்ஜின் எடையையும் தாங்க வேண்டும். ஆனால் எலெக்ட்ரிக் காரின் மோட்டார் செட்டப் இன்ஜினைவிட எடை குறைவு அதனால் சஸ்பென்சன் இவ்வளவு வெயிட்டையும் தாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தான் எலெக்ட்ரிக் கார்களின் எடை சாதாரண காரை விடக் குறைவான எடையில் இருக்கிறது. அதே நேரம் பெட்ரோல்/டீசல் இன்ஜின் செயல்படும் போது அதிர்வுகள் இருக்கும்.

இந்த அதிர்வுகள் காருக்குள் கடத்தப்பட்டு காருக்குள்ளும் அதிர்வுகள் தெரியும். கார் இன்ஜின் ஸ்டார் ஆகிவிட்டாலே கார் அதிர துவங்கிவிடும். ஆனால் எலெக்ட்ரிக் கார்களில் இந்த பிரச்சனை கிடையாது எலெக்ட்ரிக் இன்ஜின் அதிர்வுகள் இல்லாமல் இயங்கும் திறன் கொண்டது. இதனால் எலெக்ட்ரிக் கார்களில் அதிர்வுகள் இருக்காது. இதனால் எலெக்ட்ரிக் கார்களின் டயர்களும், பாடியும் நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

பொதுவாக குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டிய இன்ஜின் ஆயில் ஸ்பார்க் பிளாக், ரேடியேட்டர், ஆயில் ஃபில்டர் ஆகிய கருவிகள் மாற்ற வேண்டும் அது எல்லாம் எலெக்ட்ரிக் காரில் மாற்ற வேண்டியது இல்லை என்றாலும் கியர் ஆயில், சார்ஜர், பிரேக் பேட், லைட்டுகள், வைப்பர், ஏசி பராமரிப்பு ஆகிய விஷயங்கள் மற்ற கார்களில் எப்படிப் பராமரிப்பு செய்ய வேண்டுமோ அதே போல தான் எலெக்ட்ரிக் காரிலும் பராமரிப்பு செய்ய வேண்டும்.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Car maintenance cost in electric and ice engine cars
Story first published: Saturday, November 26, 2022, 15:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X