விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்களுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

கார் விபத்தில் சிக்கினால் காரில் உள்ளவர்கள் காயமின்றி தப்பிக்கவும், குறைவாகன காயங்கள் மட்டுமே ஏற்பட்டுவும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.

நவீன கார்கள் பல மிக வேகமாக செல்லும் இன்ஜின் திறனுடன் உருவாக்கப்படுவதால் அந்த கார்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் அதிகம் தான்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

ஆனால் அதே நேரத்தில் கார்கள் விபத்தில் சிக்காமல் இருக்க பல்வேறு தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். என்னென்ன தொழிற்நுட்பங்கள் எல்லாம் காரை விபத்தில் சிக்காமல் பாதுகாக்கிறது என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

இந்நிலையில் அதையும் மீது கார் விபத்தில் சிக்கினால் காரில் உள்ளவர்கள் காயமின்றி தப்பிக்கவும், குறைவாகன காயங்கள் மட்டுமே ஏற்பட்டுவும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். இவை அனைத்து வாகனங்களிலும் இல்லாவிட்டாலும் மார்க்கெட்டில் என்வெல்லாம் இருக்கின்றன என கீழே பார்க்கலாம்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

வலுவான கார் பாடி

காரின் பாடிகள் சற்று வலுமிக்க தாக உருவாக்க்கப்படுகின்றன. இதுவே காரில் உள்ளே உள்ளவர்களுக்கு விபத்து மூலம் ஏற்படு்ம பாதிப்புகளை குறைக்கும். தற்போது உருவாக்கப்படும் கார்களுக்கு செயற்கை விபத்து சோதனை நடத்தப்படுகிறது. இதன் மூலமே அந்த காரின் டிசைன் அங்கிகரீக்கப்படும்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

ஏர் பேக்

விபத்திற்குளாகும் காரில் இருப்பவர்களுக்கு அதிகமான காயம் ஏற்படுவதில் இருந்தும் மரணம் ஏற்படும் வாயப்பு்களையும் ஏர் பேக் குறைக்கிறது. கார் விபத்தில் சிக்கியதை உணர்ந்து ஏர்பேக் நொடிபொழுதில் விரிவடைந்து பயணிகளை எதிலும் மோதவிடாமல் குஷன் போல காக்கிறது. இது சீட்டில் எந்த பகுதியில் பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையும் கணிக்கும்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

ஹெட்ரெஸ்ட்

விபத்தில் தலையில் ஏற்படும் காயம் தான் மிகவும் ஆபத்தானது. இதுதான் பயணிகளை மரணத்திற்கும் கொண்டு செல்லும். அதனால் கார் சீட்களில் குஷன் போன்ற ஹெட்ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தலையில் ஏற்படும் காயங்கள் குறைவு, குழந்தைகளுக்கான குறைந்த உயரத்திலான ஹெட்ரெஸ்ட்களும் மார்க்கெட்டில் உள்ளன.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

சீட்டில் பொருத்தப்பட்ட ஏர் பேக்

விபத்தின் போது சீட் இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டால் ஏர் பேக்கின் பயன் இல்லாமல் போகும். அவ்வாறான சூழ்நிலைகளில் சீட் இருக்கும் இடத்தில் இருந்து நகரும் போது தானாக விரியும் ஏர்பேக்குகள் சீட்டுடன் பொருத்தப்படுகிறுது. இதனால் முதுகு,கழுத்து பகுதிகள் விபத்தில் இருந்து பாதுகாக்கப்படும். இது பொரும்பாலும் முன்பக்க சீட்டில் தான் பொருத்தப்படும். மற்ற சீட்களில் ஆப்ஷன் முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

சைடு ஏர்பேக்

இது எம்.பி.வி போன்ற கார்களில் பயன்படுத்தப்படும். காரின் பின்புறம இருக்கும் பயணிகளுக்கு கார் சைடு போஷனினில் விபத்து நடந்தால் அவர்களை பாதுகாக்க உதவும். இது காரின் விட்டோவிற்கு மேல் இருந்து ஏர் பேக் விரிவடைந்து பெரும்பாலான சைடு போஷன்களை கவர் செய்யும். இதனால் காரின் பின்புறம் உள்ளவர்களுக்க விபத்தில் காயம் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

கால்களுக்கான ஏர்பேக்

தற்போது நாம் பார்த்திஏர் பேக் எல்லாம் உடல், தலை, முதுகு, கழுத்து ஆகிய பகுதிகளை பாதுகாப்பது தான். ஆனால் விபத்தில் பலருக்கு காலின் தான் அடிபடும் அதனால் கால் பகுதிக்கான ஏர்பேக்குகளும் நவீன கார்களில் அமைக்கப்படுகிறது. இது விபத்தில் கால்களிலும் கால் முட்டிகளிலும் அடிபடுவதை குறைக்கும்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

சீட் பெல்ட்

பொதுவாக விபத்து நடக்கும் போது எதிரில் உள்ள பொருளில் முட்டியோ சீட்டில் இருந்து தூக்கி வீசப்படுவதாலோ தான் அதிக காயம் ஏற்படுகிறது. இதை தடுக்க காரில் நிச்சயம் சீட் பெலட் அணிய வேண்டும். அது விபத்து நடந்தால் உங்களை உடம்பை தூக்கி விசப்படாமல் பாதுகாக்கும்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

குழந்தைகளுக்கான சீட்

காரில் பாதுகாப்பு அம்சங்கள் குழந்தைகளின் உயரத்திற்கும் உடலமைப்பிற்கும் ஏற்றது கிடையாது. அதனால் குழந்தைகளுக்கான தனி சீட் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதில் தனி ஏர் பேக், எனபல குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் இது ஈசியாக கார் சீட்டிலேயே பொருத்தும் வசதி கொண்டது. இது விபத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்.

விபத்தில் சிக்கிய காருக்குள் இருப்பவர்ளுக்கு இவைகள் தான் பாதுகாப்பு

நடந்து செல்பவர்களுக்கான பாதுகாப்பு

கார் மெதுவாக செல்லும் போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது மோதினாலும், அவர்களுக்கு அதிக காயம் ஏற்படாத வண்ணம் கூர்மையான டிசைன்கள் நவீன கார்களில் தவிர்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Car passive safety features explained. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X