ஒவ்வொரு நிறுவனமும் கார்களுக்கு வழங்கும் வாரண்டி விபரம்: எது பெஸ்ட் தெரியுமா?

By Saravana Rajan

பழைய கார்களைவிட நவீன யுக கார்கள் அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக நம்பகத்தன்மை கொண்டதாக வந்தாலும், தொழில்நுட்ப பிரச்னை இல்லாமல் இல்லை. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் ரீகால் என்ற அறிவிப்பை வெளியிட்டு கார்களில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருகின்றன.

பல கார்களில் பிரச்னை ஏற்பட்டால்தான் ரீகால் செய்ய தீர்மானிக்கின்றன. ஆனால், ஒரு சில கார்களில் மட்டுமே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அதேநேரத்தில், சந்தைப்போட்டியை கருதியும், வாடிக்கையாளர்களிடத்தில் நம்பகத்தன்மையை பெறுவதற்குமாக வாரண்டி என்ற சிறப்புத் திட்டத்தை கார் வாங்கும்போது அனைத்து நிறுவனங்களும் வழங்குகின்றன.

01. மாருதி சுஸுகி

01. மாருதி சுஸுகி

காரை டெலிவிரி கொடுத்த நாளிலிருந்து முதல் இரண்டு ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ தூரத்திற்கான[எது முதலில் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்] வாரண்டியை மாருதி கார் நிறுவனம் வழங்குகிறது. இதுதவிர, Forever Yours என்ற பெயரில் கூடுதல் ஆண்டுகளுக்கான சிறப்பு வாரண்டி திட்டத்தையும் மாருதி வழங்குகிறது. ஓர் ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக வாரண்டி காலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இது 60,000 கிமீ முதல் 80,000 கிமீ வரையிலான வாரண்டியை பெற முடியும். இந்த காலத்தில் எஞ்சின் பிரச்னை மற்றும் எலக்ட்ரிக்கல் பாகங்களை மாற்றித் தருவதற்கு இந்த வாரண்டி பயன்படும். இந்த வாரண்டி காலத்தை எடுப்பதற்கு முன்னர், நிபந்தனைகளை முழுமையாக அறிந்து கொண்டு போடுவது அவசியம்.

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மாடலுக்கு தக்கவாறு 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை அடிப்படை வாரண்டியை வழங்குகிறது. அதைவிட்டு, கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, வெர்னா மற்றும் எக்ஸென்ட் உள்ளிட்ட கார்களுக்கு மைலேஜ் வாரண்டி என்ற 3வது ஆண்டு முதல் 5வது ஆண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு வாரண்டியை தருகிறது. இது வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையில் அமைகிறது.

03. ஹோண்டா கார்ஸ் இந்தியா

03. ஹோண்டா கார்ஸ் இந்தியா

ஹோண்டா கார் நிறுவனம் முதல் இரண்டு ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ தூரத்திற்கான அடிப்படை வாரண்டியை வழங்குகிறது. இது மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு பொருந்தும். கூடுதல் வாரண்டி என்பது ஓர் ஆண்டு அல்லது 20,000 கிமீ தூரத்திற்குமாக கிடைக்கும். அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரம் வரைக்கும் வாரண்டியை நீடித்துக் கொள்ள முடியும். அடிப்படை அல்லது கால நீட்டிப்பு செய்யப்பட்ட வாரண்டி புதுப்பிக்கத் தவறிய உரிமையாளர்களும் வேண்டும்போது இந்த வாரண்டியை பெற்றுக் கொள்ள முடியும்.

04. மஹிந்திரா

04. மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் அடிப்படையில் 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியை வழங்குகிறது. 4வது மற்றும் 5வது ஆண்டுகளுக்கு ஷீல்டு என்ற பெயரில் வாரண்டி கால நீட்டிப்புக்கான திட்டத்தை வழங்குகிறது. இதற்கான கட்டணம், வாகனத்தின் வகையை பொறுத்து மாறுபடுகிறது.

05. டாடா மோட்டார்ஸ்

05. டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் மாடலுக்கு தகுந்தவாறு அடிப்படை வாரண்டியை வழங்குகிறது. நானோ காருக்கு 4 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ தூரத்திற்கான வாரண்டியும், டியாகோ, இன்டிகா விஸ்டா காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ தூரத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது. கூடுதல் வாரண்டியை பொறுத்தவரையில் ஓர் ஆண்டு அல்லது 75,000 கிமீ தூரத்திற்கும், 2 ஆண்டுகள் ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியுமாக வழங்கப்படுகிறது. ஆரியா, போல்ட், ஸெஸ்ட் ஆகிய கார் மாடல்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது. கூடுதல் வாரண்டியாக ஒரு ஆண்டு அல்லது 1.50 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியும் பெறலாம்.

06. டொயோட்டா இந்தியா

06. டொயோட்டா இந்தியா

டொயோட்டா இந்தியா நிறுவனம் 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான அடிப்படை வாரண்டியை வழங்குகிறது. கூடுதல் வாரண்டியை பொறுத்தவரை ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையும், அதிகபட்சமாக 1.80 லட்சம் கிமீ தூரத்திற்கும் வாரண்டியை பெற்றுக் கொள்ளலாம்.

07. ஃபோர்டு இந்தியா

07. ஃபோர்டு இந்தியா

ஃபோர்டு இந்தியா நிறுவனம் 2 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான அடிப்படை வாரண்டி காலத்தை வழங்குகிறது ஃபோர்டு. அதிகபட்சமாக 5 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான கூடுதல் வாரண்டியை பெற முடியும். எண்டெவர் எஸ்யூவிக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுக்கான கூடுதல் வாரண்டியை பெற முடியும்.

08.ஃபோக்ஸ்வேகன் இந்தியா

08.ஃபோக்ஸ்வேகன் இந்தியா

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2 ஆண்டுகள் அடிப்படை வாரண்டி வழங்கப்படுகிறது. கார் எத்தனை ஆயிரம் கிமீ தூரம் ஓடியிருந்தாலும் வாரண்டியை பெற முடியும். மேலும், 3 ஆண்டுகளுக்கு பெயிண்ட் வாரண்டியும், போலோ, வென்ட்டோ கார்களுக்கு 6 ஆண்டுகள் வரை துருப்பிடிக்காத தன்மைக்கான வாரண்டியும் கொடுக்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா, பஸாத் மற்றும் பீட்டில் கார்களுக்கு 12 ஆண்டுகள் துருப்பிடிக்காத தன்மைக்கான வாரண்டியை வழங்குகிறது ஃபோக்ஸ்வேகன். கூடுதல் காலத்திற்கான வாரண்டியை பொறுத்தவரையில், ஓர் ஆண்டு அல்லது 80,000 கிமீ வரையிலும், 2 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியையும் பெற முடியும்.

09. ரெனோ இந்தியா

09. ரெனோ இந்தியா

ரெனோ இந்தியா நிறுவனம் 2 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான வாரண்டியை வழங்குகிறது. கூடுதல் வாரண்டி காலம் குறித்த தகவல்கள் வெளிப்படையான தகவல் இல்லை.

10. நிசான் இந்தியா

10. நிசான் இந்தியா

நிசான் நிறுவனமும் 2 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரம் வரையிலான வாரண்டியை வழங்குகிறது. இதுதவிர, 2 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ தூரதிற்கான கூடுதல் வாரண்டி காலத்தை நிசான் வழங்குகிறது. மேலும், எத்தனை முறை வேண்டுமானாலும் வாரண்டி பெறலாம். வரம்பு ஏதும் இல்லை. சாலை அவசர உதவித் திட்டமும் உண்டு.

11. ஃபியட் இந்தியா

11. ஃபியட் இந்தியா

ஃபியட் நிறுவனம் 3 ஆண்டுகள் வரை அடிப்படை வாரண்டி வழங்குகிறது. ஓடிய தூரம் மாடலுக்கு தக்கவாறு கணக்கிடப்பட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஃபியட் லீனியா மற்றும் புன்ட்டோ கார்கள் ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியுடன் வருகின்றன. வர்த்தக ரீதியில் இயக்கப்படும் வாகனங்களுக்கு 60,000 கிமீ தூரம் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. கூடுதலாக 2 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி கொடுக்கப்படுகிறது.

12. செவர்லே இந்தியா

12. செவர்லே இந்தியா

செவர்லே நிறுவனம் 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியை அனைத்து கார்களுக்கும் வழங்குகிறது. கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்திற்கான வாரண்டியை வழங்குகிறது. 4வது மற்றும் 5வது ஆண்டுகளுக்கு வாரண்டியை நீடித்துக் கொள்ளும் திட்டமும் உண்டு.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்திய கார் சந்தையிலேயே டொயோட்டா கார் நிறுவனம் மிகச்சிறந்த வாரண்டியை வழங்குகிறது. குறிப்பாக, டொயோட்டா உள்பட ஜப்பானிய நிறுவனங்களின் தயாரிப்புகளின் மீதான நம்பகத்தன்மை பிற நிறுவனங்களைவிட மிக அதிகமாக இருக்கிறது.

வெளிநாடுகளில் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வெளிநாடுகளில் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 
Most Read Articles

English summary
Car Warranty: A Guide To Which Brand Provides The Best Warranty In India.
Story first published: Monday, August 1, 2016, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X