காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

கோடைகால வெயிலில் நிறுத்திய பைக்கிலேய உட்கார முடியவில்லையே, வெயில்லில் நிறுத்திய காருக்குள் ஏறுவது அம்மன் கோவில் திருவிழாவில் தீமிதிக்க செல்வது போன்ற உணர்வை தரும்.

கோடைகால வெயிலில் நிறுத்திய பைக்கிலேய உட்கார முடியவில்லையே, வெயில்லில் நிறுத்திய காருக்குள் ஏறுவது அம்மன் கோவில் திருவிழாவில் தீமிதிக்க செல்வது போன்ற உணர்வை தரும். அவர்களுக்கு காருக்குள் உள்ள ஏ.சி.யை பயன்படுத்தி எப்படி விரைவாக காருக்குள் உள்ள வெப்பத்தை குறைக்கலாம் என கீழே காணலாம்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

கோடை காலம் என்றாலே மக்களுக்கு வேர்த்து கொட்டி விடும், அப்படி இருக்கையில் தற்போது கோடை காலத்தை அனுபவித்து வரும் உங்களின் நிலைமை எங்களுக்கு நீங்கள் சொல்லாமலேயே புரிகிறது. கோடைய வெயிலை சமாளிக்க பலர் பைக் பயணங்களை தவிர்த்து காரில் பயணம் மேற்கொள்வர்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

பைக் பயணத்தை விட கோடையில் கொடுமையானது கார் பயணம் தான். சும்மாவே வெயிலில் காரை நிறுத்தினால் காருக்குள் ஹீட் ஏறி விடும் அதில் இப்பொழுது சூரியன் வேறு சுட்டெரிக்கிறான் கேட்கவா வேண்டும், காருக்குள் போய் உட்காருவது. அடுப்பை ஆன் செய்து விட்டு அதன் மீது ஏறி உட்காருவதும் ஒன்று தான்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

நடைமுறை இப்படியிருக்கையில் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் காரில் உள்ள ஏ.சி. தான். காரில் ஏறிவிட்டு ஏசியை போட்டால் சிறிது நேரத்தில் இந்த சூடு எல்லாம் குறைந்து இதமான பயண அனுபவத்தை வழங்கி விடும். இவ்வாறான ஏ.சி.யை மிக விரைவில் கார் முழுவதையும் குளிர்விப்பதற்கான வசதி ஒன்று இருக்கிறது. அந்த டிப்ஸ்சை கீழே பார்க்கலாம்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

வெளியில் உள்ள வெப்ப அளவை விட காருக்குள் சுமார் 50 டிகிரி வரை அதிக வெப்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் காரில் ஏறியதும் முதலில் ஏசியை ஆன் செய்யாமல் அனைத்து கண்ணாடிகளையும் இறக்கிவிட்டு விட்டு முதல் ஒரு நிமிடம் ஏசியை போடாமல் பயணம் செய்யுங்கள் இதனால் வெளியில் உள்ள வெப்பத்தின் அளவும் காருக்கு உள்ளே உள்ள வெப்பத்தின் அளவும் ஒரே சீராக நிலைக்கு வரும்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

அதன் பின் ஜன்னல்களை அடைத்து விட்டு ஏ.சி.யை ஆன் செய்யுங்கள் என்னதான் நீங்கள் வெளிக்காற்றை உங்கள் காருக்கள் விட்டாலும் வெளியில் உள்ள வெப்பத்தை விட உள்ளே அதிக அளவு வெப்பம் தான் இருக்கும். உதாரணமாக வெளியில் 100 டிகிரி வெப்பம் இருந்தால் காருக்குள் 150 டிகிரி வெப்பம் இருக்கும். இதை நினைவில்வைத்து கொள்ளுங்கள்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

கார்களில் பொருப்பட்டுள்ள ஏசி அதிகமாக வைக்கப்பட்டால் அது காருக்குள் இருக்கும் காற்றையே உள்ளே இழுத்து குளிர்வித்து வெளியே அனுப்பும். ஆனால் குறைந்த அளவில் இருந்தால் வெளியில் உள்ள காற்றை இழுத்து குளிர்வித்து உள்ளே அனுப்பும் அதனால் உங்களுக்கு விரைவாக குளிர் கிடைக்க வேண்டும் என்றால் ஏ.சி.யை அதிகமாக வைக்க கூடாது.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

ஏன் என்றால் தற்போது நீங்கள் காருக்குள் 70 டிகரி வெப்பத்தை கொண்டு வர முயற்சி செய்கிறீர்கள் என எடுத்து கொள்வோம். அதில் உள்ளே காற்றேயே குளர்விக்கும் முறையை ஏ.சி. கையாண்டால் முன்னார் சொன்னது போல் காருக்குள் இருக்கும் 150 டிகரி வெப்பம் உள்ள காற்றை 70 டிகிரியாக மாற்ற வேண்டும் அப்பொழுது ஏ.சி. காற்றில் உள்ள 80 டிகிரி வெப்பத்தை குளிர்விக்க வேண்டும்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

அதே நேரத்தில் வெளியில் உள்ள காற்றை குளிர்வித்தால் வெளியில் உள்ள 100 டிகரி வெப்பத்தை தான் 70 டிகிரியாக குளிர்விக்க வேண்டும் அதாவது 30 டிகிரி குளிர்வித்தால் போதும். அதனால் வெளியில் இருந்து காற்றை எடுப்பது தான் காரை விரைவாக குளிர்விக்கும் அதனால் காரில் ஏ.சி. யை அதிகபட்ச குளிரில் வைக்காதீர்கள்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

அதன் பின் உங்கள் காருக்கு போதுமான குளிர் கிடைத்தவுடன் காரின் ஏ.சி.யை அதிக பட்சத்திற்கு செட் செய்யுங்கள். உங்கள் காருக்குள் போதுமான குளிர் கிடத்து விட்டால் வெளியில் உள்ள வெப்பத்தை விட உங்கள் காருக்குள் இருக்கும் வெப்பம் குறைவாக இருக்கும்.

காருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்

அப்பொழுது தான் ஏசி குளிர்விக்க கூடிய காற்று ஏற்கனவே குளிர்ச்சியாக இருக்கும் ஏ.சி.யும் அதை விரைவாக குளிர்வித்து அனுப்பும், நீங்களும் நீண்ட நேரம் இந்த குளிரை அனுபவிக்க முடியும்.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How to Cool Down Your Car as Quickly as Possible.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X