காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

'ஹாட் கார்களில்' ஏற்படும் 'ஹுட் ஸ்ட்ரோக்' காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Arun

'ஹாட் கார்களில்' ஏற்படும் 'ஹுட் ஸ்ட்ரோக்' காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க பெற்றோர்களின் அஜாக்கிரதையால், இதுபோன்ற விபரீதங்கள் நிகழ்வதால், கவனமாக இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

கடுமையான வெயிலில் கார் நிற்கும்போது, எக்காரணத்தை முன்னிட்டும் காருக்குள், குழந்தைகளை விட்டு செல்லாதீர்கள். ஏனெனில் 'ஹுட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு, பிஞ்சு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழக்க நேரிடலாம். கடந்த 2017ம் ஆண்டில், பெற்றோர்களின் அஜாக்கிரதையால், அமெரிக்காவில் மட்டும் 44 குழந்தைகள் இப்படி உயிரை விட்டுள்ளனர்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

பொதுவாக வெளியில் இருக்கும் வெப்பநிலையை காட்டிலும், காரின் இன்டீரியரில் மிக அதிக அளவிலான வெப்பநிலை நிலவும். அதாவது வெறும் பத்தே நிமிடங்களில், கார் இன்டீரியரின் வெப்பநிலையானது 20 டிகிரி பாரன்ஹுட் அளவிற்கு உயர்ந்து விடும்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

உதாரணத்திற்கு வெளி பகுதியில் 80 டிகிரி பாரன்ஹூட் வெப்ப நிலை நிலவுகிறது என வைத்து கொள்வோம். அதே நேரத்தில் காரின் இன்டீரியரில், 135-140 டிகிரி பாரன்ஹுட் வெப்பம் கொளுத்தி எடுத்து கொண்டிருக்கும். இப்படி கிடுகிடுவென வெப்ப நிலை உயரும் சூழலில், குழந்தைகளை காருக்குள் விட்டு செல்லலாமா?

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

அதையும் மீறி குழந்தைகளை காருக்குள் விட்டு சென்றால், அவர்களது உடலின் வெப்பநிலையும் அளவுக்கு அதிகமாக உயரும். அதாவது வயது வந்த ஒருவரின் (அடல்ட்) உடல் வெப்பநிலையை காட்டிலும், குழந்தைகளின் உடல் வெப்பநிலையானது 5 மடங்கு வேகமாக அதிகரிக்கும் என்றால் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

சுட்டெரிக்கும் அப்படிப்பட்ட வெப்பத்தை சின்னஞ்சிறு குழந்தைகளால் எப்படி தாங்கி கொள்ள முடியும்? கடந்த 1998ம் ஆண்டில் இருந்து, 'ஹாட் கார்களால்' ஏற்பட்ட 'ஹூட் ஸ்ட்ரோக்கினால்', அமெரிக்காவில் மட்டும் 729 குழந்தைகள் மாண்டு போயுள்ளனர். உலகம் முழுவதும் கணக்கிட்டால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

பெற்றோர்களின் அஜாக்கிரதையால், காருக்குள் விட்டு செல்லப்பட்டு, 'ஹுட் ஸ்ட்ரோக்' காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அமெரிக்காவில் சகஜமாகி விட்டது. அப்படிப்பட்ட அஜாக்கிரதையான பெற்றோருக்கு அங்கு மிக மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

ஆனால் நீங்கள் அதுபோன்று அஜாக்கிரதையான பெற்றோராக இருக்க கூடாது. கார் ஹூட் ஸ்ட்ரோக் காரணமாக 54 சதவீத குழந்தைகள் உயிரிழக்க காரணம் வெறும் ஞாபக மறதிதான். ஆம், ஓர் சிறிய ஞாபக மறதி, அழகிய மழலையின் உயிரை ஈவு ஈரக்கமில்லாமல் பறித்து விடுகிறது.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

ஒரு சிலர் வெளியில் எங்கேயாவது செல்லும்போது, குழந்தைகளையும் உடன் அழைத்து செல்வார்கள். ஆனால் காரில் இருந்து இறங்கும்போது, குழந்தைகள் உள்ளே இருப்பதை மறந்து, அப்படியே காரை லாக் செய்து சென்று விடுவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஹுட் ஸ்ட்ரோக் காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

வேறு ஒரு சிலரோ, ஓரிரு நிமிடங்களில் வந்து விடுவோம். எனவே குழந்தைகள் காரிலேயே இருக்கட்டும் என்று எண்ணி, குழந்தைகளை அப்படியே விட்டு செல்வார்கள். இப்படி செய்வதும் அதிகபட்ச தவறுதான். ஏனெனில் ஹூட் ஸ்ட்ரோக் என்பது மிக வேகமாக நடக்கும். நீங்கள் திரும்பி வர ஓரிரு நிமிடங்கள் தாமதமானால் கூட, அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கலாம்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

இன்னும் ஒரு சிலர், வெளியில் சென்றிருக்க கூடிய சமயங்களில், விண்டோவை பாதி இறக்கி விட்டு விட்டு, குழந்தைகளை காருக்குள் விட்டு செல்வார்கள். இதுவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுதான். எந்த ஒரு சூழ்நிலையிலும், குழந்தைகளை காருக்குள் விட்டு செல்லாதீர்கள்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

நீங்கள் வீட்டில் இருந்தாலும் கூட, கார் லாக் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை நன்கு உறுதிபடுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், காரின் உள்ளே சென்று விளையாடுவது என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. அப்படி விளையாடும் நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

ஒரு வேளை வீட்டில் இருந்த குழந்தையை திடீரென காணவில்லை என்றால், முதலில் காருக்குள் தேடி பாருங்கள். அதுமட்டுமின்றி கார் என்பது விளையாட்டு பொருள் அல்ல என்பதை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி புரிய வையுங்கள்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

உங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லை என்றாலும் கூட, கார் லாக் செய்யப்பட்டிருப்பதை உறுதிபடுத்தி கொள்வதே சிறந்தது. ஏனெனில், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களின் குழந்தைகள் வந்து, காரில் ஏறி விளையாடலாம் அல்லவா? எனவே காரின் டோர் மற்றும் டிரங்க் ஆகியவற்றை நன்கு லாக் செய்து விடுவதே நல்லது.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

சரி, ஒகே. 'ஹூட் ஸ்ட்ரோக்' பிரச்னை குழந்தைகளுக்கு மட்டும்தான் ஏற்படுமா? என நினைத்து விட வேண்டாம். முதியவர்களுக்கும் கூட 'ஹுட் ஸ்ட்ரோக்' பிரச்னை மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வளவு ஏன், நாய்களும் கூட 'ஹுட் ஸ்ட்ரோக்' பிரச்னையால் சிரமப்படுகின்றன.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வரும் நாய்களையும் ஒரு சிலர் காரில் அழைத்து செல்வார்கள். ஆனால் நாயை உள்ளே வைத்து, டோரை மட்டும் லாக் செய்து விட்டு கிளம்பி விடுவார்கள். அந்த நாய் விண்டோ வழியாக ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருக்கும். இப்படி செய்தால், உங்கள் செல்லப்பிராணியின் உயிருக்கும் ஆபத்துதான்.

காருக்குள் அடைத்து குழந்தைகளை கொல்லும் 'கேர்லெஸ்' பெற்றோர்... போலீஸ் எச்சரிக்கை...

எனவே எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும், காரை லாக் செய்யும்போது, காரில் உள்ள அனைவரும் இறங்கி விட்டார்களா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை நன்கு உறுதிபடுத்தி கொள்ளுங்கள். அதன்பின்பே நீங்கள் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும் என போலீசாரும் கூட இதனை எச்சரிக்கையாகவே தெரிவித்துள்ளனர்.

Cover Image Source :Improv

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Police: Dangers of leaving kids in hot cars. read in tamil.
Story first published: Saturday, June 2, 2018, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X