சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரின் எடையை எப்படியெல்லாம் குறைக்கலாம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே எரிபொருளை சிக்கனமாக செலவு செய்யவும், காரின் உமிழ்வுகளை (Emissions) குறைக்கவும் மாற்று வழிகளை கண்டறிந்தாக வேண்டிய தேவை இருக்கிறது. காரின் எடையை குறைப்பது இந்த பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். எடை அதிகமாக இருந்தால் கார் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல அதிக ஆற்றலை எடுத்து கொள்ளும்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் எடை குறைவாக இருந்தால், குறைவான ஆற்றலே தேவைப்படும். இதன் மூலம் காரின் மைலேஜ் அதிகரிக்கும். எனவேதான் எரிபொருளை சேமிக்க வேண்டுமென்றால், காரின் எடையை குறைக்க வேண்டும் என கூறுகிறோம். அத்துடன் எடை குறைவாக இருந்தால், கார் வேகமாகவும் செல்லும். அதாவது காரின் செயல்திறன் அதிகரிக்கும்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் காரின் எடையை எப்படி குறைப்பது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே காரின் எடையை எந்தெந்த வழிகளில் எல்லாம் குறைக்கலாம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். காரின் மைலேஜ் மற்றும் செயல்திறனை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு, இந்த தகவல்கள் நிச்சயம் பயனளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உங்கள் கார் பழையது என்றால், ஏர் கண்டிஷனிங் கம்ப்ரஸரை (Air Conditioning Compressor) அகற்றவோ அல்லது மாற்றவோ செய்யலாம். ஏனெனில் இதன் எடை சுமார் 5 கிலோ இருக்கும். அதேபோல் ஹீட்டர் மேட்ரிக்ஸ் (Heater Matrix), பேன் (Fan) மற்றும் அது தொடர்பான பைப்களை அகற்றுவதன் மூலம் நீங்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட கிலோ எடையை குறைக்கலாம்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் காரின் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஸ்டீரியோ மற்றும் ஸ்பீக்கர்களும் முக்கியமான இலக்காக இருக்க வேண்டும். அதே நேரத்தில் இன்றியமையாத பாகங்களை அகற்ற முடியாது. எனவே அந்த பாகங்களுக்கு பதிலாக எடை குறைவான பாகங்களை பொருத்தலாம். உதாரணத்திற்கு காரின் பேட்டரிகள் 10 முதல் 15 கிலோ எடை வரை இருக்கும். அவற்றுக்கு பதிலாக சிறிய பேட்டரிகளை பொருத்தலாம். இது 50 சதவீத எடையை குறைக்க உதவி செய்யும்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே சமயம் நீங்கள் எப்போதும் காரில் தனியாக பயணம் செய்ய கூடியவர் என்றால், உங்களுக்கு நிறைய பாகங்கள் தேவைப்படாது. பின் இருக்கைகளையும், முன்னால் உள்ள கோ-டிரைவர் இருக்கையையும் அகற்றுவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்யலாம். பின் இருக்கைகளை அகற்றுவதன் மூலமாக மட்டும் உங்கள் காரின் எடை சுமார் 25 கிலோ வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தேவையை பொறுத்து இந்த விஷயத்தில் நீங்கள் முடிவு செய்யலாம்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் எடை குறைவான பாடி பேனல்களை பொருத்தலாம். அதாவது அலுமினியம் மற்றும் ஸ்டீல் பாடி பேனல்களுக்கு பதிலாக ஜிஆர்பி (GRP - Glass Fibre-reinforced Plastic) மூலம் உருவாக்கப்பட்ட பாகங்களை பயன்படுத்தலாம். ஜிஆர்பி மூலம் உருவாக்கப்பட்ட பானெட், டோர்கள் மற்றும் மேற்கூரை ஆகியவை நீங்கள் கணிசமான அளவில் எடையை சேமிக்க உதவி செய்யும்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் கண்ணாடி விண்டோக்களுக்கு பதிலாக பாலிகார்பனேட்டை (Polycarbonate) பயன்படுத்துவது குறித்தும் நீங்கள் பரிசீலனை செய்யலாம். இதன் மூலம் ஒரு விண்டோவிற்கு 1-2 கிலோ எடையை குறைக்க முடியும். அதேபோல் இலகுவான வீல்களை பயன்படுத்துவது குறித்தும் நீங்கள் யோசிக்கலாம். இதன் மூலம் ஒரு வீலுக்கு 2-3 கிலோ வரையில் எடையை குறைக்க முடியும்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

எடை குறைவான வீல்களை பயன்படுத்தினால், சஸ்பென்ஸனின் வேலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக காரின் ஆக்ஸலரேஷன் அதிகரிக்கும். அதேபோல் இலகுவான வீல்களை பொருத்துவதன் மூலம் இன்ஜினின் வேலைப்பளுவையும் உங்களால் குறைக்க முடியும். இந்த யுக்திகளை நீங்கள் கையாண்டால், காரின் எடை குறையும்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதேபோல் தேவையில்லாத பொருட்கள் எதையும் காரில் வைக்காதீர்கள். ஒரு சிலர் காரின் பின்னால் உள்ள 'பூட்' பகுதியில் தேவையில்லாத பொருட்களை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். எடை அதிகமாக அந்த பொருட்கள் நீண்ட காலமாக காருக்குள்ளேயே இருந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் எடுப்பதற்கு மறந்து விட்டால், அந்த பொருள் நிச்சயமாக காருக்கு உள்ளேயேதான் இருக்கும்.

சூப்பரா மைலேஜ் கிடைக்கும்... காரின் எடையை எப்படி குறைக்கலாம் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதுபோன்ற சிறு சிறு தவறுகளை தவிர்ப்பதன் மூலமும் நீங்கள் காரின் எடையை குறைக்கலாம். தற்போது கார் நிறுவனங்கள் கூட எடையை குறைப்பதற்குதான் முயற்சி செய்து வருகின்றன. மைலேஜ் மற்றும் செயல்திறனை அதிகரிக்கலாம் என்பதுதான் இதற்கு காரணம். எனவே நீங்களாகவும் காரின் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்யலாம்.

Most Read Articles
English summary
Easy ways to reduce your car s weight
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X