பெட்ரோல், டீசல் குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகள்: இதை எல்லாம் நம்பாதீங்க

இன்று வாகனங்களை சிறப்பாக பராமரிக்கவும், சிறப்பாக செயல்படவைக்கவும் பல டிப்ஸ்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் டிப்ஸ்களை வழங்கி வருகின்றனர். இதை பயன்படுத்தி சிலர் வாகனங்கள் குறித்த பொ

இன்று வாகனங்களை சிறப்பாக பராமரிக்கவும், சிறப்பாக செயல்படவைக்கவும் பல டிப்ஸ்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் டிப்ஸ்களை வழங்கி வருகின்றனர். இதை பயன்படுத்தி சிலர் வாகனங்கள் குறித்த பொய்யான தகவல்களும் வதந்திகளும் பரப்பி வருகின்றனர்.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

சிலர் காலையில் பெட்ரோல் போட்டால் நல்ல மைலேஜ் தரும் என சொல்லுவார்கள், சிலர் ஜெட் பெட்ரோல் போட்டால் வாகனம் மேலும் வேகமாக செல்லும் என கூறுவார்கள். இவை எல்லாம் உண்மையா இல்லை வதந்தியா வாருங்கள் கீழே பார்க்கலாம்.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

ஃபோர்டு நிறுவனத்தின் முத்த பொறியாளர் காலிங் ஹார்டிங் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டிரைவருக்கு தெரிவதும் ஒரிஜிலாக இருக்கும் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமே ஒன்றாக இருக்காது. அதனால் இன்ஸ்ட்ரூமென்ஸ்ட் கிளஸ்டரில் உள்ளதை வைத்து நாம் ஒரு முடிவிற்கு வர முடியாது.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

இங்க காலிங் காரில் எரிபொருள் குறித்த 5 கட்டுகதைகள் குறித்த தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

காலையில் எரிபொருள் நிரப்புவது

பெட்ரோல்கள் வெளியில் நேரத்தில் விரிவடையும், அதனால் குளிராக இருக்கும் போதே பெட்ரோலை வாகன டேங்கிற்குள் செலுத்தி விட்டால் அதிக அளவிலான பெட்ரோல்களை கொள்ளும் என பலர் கூறி வருகின்றனர்.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

இந்த கூற்று உண்மை தான் ஆனால் பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல்கள் பூமிக்கு அடியில் உள்ள டேங்கில் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் வெளியில் உள்ள வெப்ப நிலைக்கும் உள்ளே உள்ள வெப்ப நிலையால் உள்ளே இருக்கும் பெட்ரோலுக்கு இந்த தாக்கம் இருக்காது. இதனால் நீங்கள் எப்பொழுது வேண்டுமே அப்பொழுது பெட்ரோல் அடித்துக்கொள்ளுங்கள்

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

எரிபொருள் தீர்ந்து போவது இன்ஜினிற்கு கேடு

டேங்கில் எரிபொருளின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் இன்ஜின் சிறப்பாக செயல்படும். எப்பொழுதும் குறைவான எரிபொருளுடனேயே பயன்படுத்துவது இன்ஜினிற்கு ஆயுளை குறைக்கும் என சிலர் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எரிபொருள் டேங்கில் கீழ் பகுதியில் தான் எரிபொருளை இன்ஜினிற்கு எடுத்து செல்லும் குழாய் அமைக்கப்பட்டிருக்கும்.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

அதனால் உங்கள் வாகனத்தில் எவ்வளவு எரிபொருள் இருக்கிறது என்று எல்லாம் இன்ஜினிற்கு தெரியாது. எரிபொருள் அதிகமாக இருக்கும் போதும் குறைவாக இருக்கும் போதும் ஒரே மாதிரியாகதான் செயல்படும். முற்றிலுமாக எரிபொருள் இல்லாத நிலையில் மட்டும் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள் இது வேண்டுமானால் இன்ஜினின் தரத்தை பாதிக்கலாம்.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

பிரிமியம் பெட்ரோலை பிரிமியம் இல்லாத காரில் பயன்படுத்துதல்

பெட்ரோல் பங்க்களில் பவர் பெட்ரோல் பிரிமியம் பெட்ரோல், ஆயில்களிலும் வித்தியாச வித்தியாசமான ஆயில்கள் எல்லாம் இருக்கும். அதில் சிலவை விலை அதிகமாக இருக்கும் ஆனால் சாதாரண எரிபொருளை விட சுத்தமான எரிபொருள் என்று எதுவும் இல்லை.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

கம்பஷன் ஆகும் போது எல்லா விதமான எரிபொருளும் ஒரே மாதிரியாக தான் கம்பஷன் ஆகிறது. இதனால் இன்ஜினின் பெர்பாமென்ஷில் எந்த வித மாற்றமும் இருக்காது.எந்த வித எரிபொருளாக இருந்தாலும் ஒரே ஸ்டாண்ட்டான தயாரிப்பில் தான் இருக்கும்.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

ரேஞ்ச் ரீடிங்

தற்போது உங்கள் வாகனத்தின் உள்ள எரிபொருளை கொண்டு எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்று சொல்லக்கூடியதே ரேஞ்ச் ரீடிங். எரிபொருள் தீரும் காலத்தில் இதில் காட்டும் அளவிற்கு நான் பயணிக்கவில்லை இருந்தாலும் எரிபொருள் தீர்ந்து விட்டது இந்த ரேஞ்ச் ரீடிங் எல்லாம் ஏமாற்று வேலை என சிலர் புலம்புவார்கள்.

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

ரேஞ்ச் ரீடிங் என்பது நீங்கள் நெடுதூரம் பயணிக்கும் அளவை கணக்கிட்டு தற்போது உள்ள எரிபொருளின் அளவை கணக்கிட்டு வழங்கும். இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் அதிக டிராபிக் உள்ள ரோடுகளில் பயணித்தால் ரேஞ்ச் ரீடிங் குறிப்பிடும் அளவு கீ.மீ தூரத்தை நீங்கள் பயணிக்க முடியாது. அதை விட குறைவான தூரம் தான் கிடைக்கும். அதே போல உங்களது டிரைவ்விங் ஸ்டைலை பொருத்தும் மைலஜின் அளவு மாறும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

பெட்ரோல் டீசல் குறித்து பரப்பபடும் கட்டுக்கதைகள்

இப்படியாக வாகனங்கள் செலு்த்தப்படும் எரிபொருள் குறித்த தவறான தகவல்கள் பரப்ப்பப்பட்டு வருகின்றனர். இதில் பலவை உங்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவும், ஏற்படுத்தப்படும் மார்கெட்டிங் ஸ்டாடஜியாக இருக்கலாம். இதனால் நீங்கள் உஷாராக இருந்து உங்களது தேவையானதை நீங்களே தேர்வு செய்யுங்கள்

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

பெட்ரோல், டீசல் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருவதை போல், வாகனத்தின் மைலேஜ் தொடர்பாகவும் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இந்த கட்டுக்கதைகளை நீங்கள் நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை. உண்மை என்னவென்று தெரிந்து கொண்டால், சிறப்பான மைலேஜை நீங்கள் பெறலாம். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

புதிய கார் வாங்கும்போது இந்தியர்கள் அதிகம் கவனிக்கும் விஷயம் மைலேஜ். மைலேஜை வாரி வழங்கும் கார்களுக்குதான் இந்தியர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்ற விஷயம் உலகிற்கே தெரிந்ததுதான். எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்றவாறு எரிபொருள் சிக்கனத்தில் தலைசிறந்து விளங்கும் கார்களை இங்கு விற்பனை செய்து வருகின்றன.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

ஆனால் எரிபொருள் சிக்கனம் தொடர்பாக இந்தியர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினால், பெரும்பாலானோருக்கு இல்லை என்பதுதான் உண்மை. எரிபொருள் சிக்கனம் தொடர்பான பல விஷயங்களை நம்மில் பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். அவற்றை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால், உங்கள் காரில் இருந்து சிறப்பான மைலேஜை பெறலாம்.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

இன்ஜினை ஐட்லிங்கில் விட்டால் மைலேஜ் பாதிக்குமா?

இன்ஜினை நீண்ட நேரம் ஐட்லிங்கில் (Idling) விட்டாலும் மைலேஜ் பாதிக்காது என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். அது உண்மை எனவும் நம்புகின்றனர். ஆனால் இது தவறு. இன்ஜின் ஐட்லிங்கில் இருந்தாலும் கூட எரிபொருளை எரித்து கொண்டேதான் இருக்கும். எனினும் கார் வேகமாக ஓடி கொண்டிருப்பதை காட்டிலும் இந்த சமயத்தில் எரிபொருள் நுகர்வு சற்று குறைவாக இருக்கும்.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

எனவே ஐட்லிங்கில் விடுவதை விட இன்ஜினை ஆஃப் செய்வதே சிறந்தது. இதன்மூலம் அதிக எரிபொருளை மிச்சம் பிடிக்கலாம். இருந்தபோதும் ஓரிடத்தில் நீங்கள் 15 வினாடிகளுக்கு உள்ளாக மட்டுமே காத்திருக்க வேண்டியதாகிறது என்றால், இன்ஜினை ஆஃப் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஒரு இடத்தில் நீங்கள் 15-20 வினாடிகளுக்கும் மேலாக நிற்க வேண்டியுள்ளது என்றால், இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள்.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

க்ரூஸ் கண்ட்ரோலுக்கும், மைலேஜிற்கும் தொடர்பு உள்ளதா?

க்ரூஸ் கண்ட்ரோல் என்பது கார்களில் வழங்கப்படும் ஒரு வசதி மட்டும்தான். அதற்கும் மைலேஜிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. உண்மையில் க்ரூஸ் கண்ட்ரோல் காரின் மைலேஜை அதிகரிக்கிறது. கார் ஒரே சீரான வேகத்தில் பயணம் செய்ய க்ரூஸ் கண்ட்ரோல் வசதி உதவி செய்கிறது.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தினால் லாங் டிரிப்களை எளிதாக மேற்கொள்ள முடியும். க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை நீங்கள் பயன்படுத்தும்போது, தேவையில்லாத ஆக்ஸலரேஷன் மூலம் இன்ஜின் எரிபொருளை வீணாக்குவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். இதன் விளைவாக உங்கள் காரின் மைலேஜ் அதிகரிக்கும்.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

எடைக்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும் தொடர்பு உள்ளதா?

க்ரூஸ் கண்ட்ரோலுக்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை என்பதை போல், எடைக்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை எனவும் கூட சிலர் நம்புகின்றனர். ஆனால் இதுவும் தவறுதான். எடைக்கும், மைலேஜிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காரில் எடை குறைவாக இருந்தால், இன்ஜினிற்கான வேலையும் குறைவாகதான் இருக்கும்.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

அதாவது எடை குறைவாக இருக்கும் சமயத்தில், கார் 'மூவ்' ஆக இன்ஜின் குறைவான எரிபொருளை மட்டுமே நுகரும். இதன் மூலம் உங்கள் கார் நல்ல மைலேஜை வழங்கும். எனவே காரில் தேவையில்லாமல் எடையை திணிக்காதீர்கள். உங்கள் காரின் பூட்டில் அதிக எடையுடைய பொருட்கள் தேவையில்லாமல் இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள்.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

எந்த பெட்ரோல் பங்க்கில் வேண்டுமானாலும் எரிபொருள் நிரப்பலாமா?

''அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான எரிபொருள்தான் விற்பனை செய்யப்படுகிறது. எனவே எங்கே நிரப்புகிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல'' என பலர் நினைக்கின்றனர். இந்தியாவில் பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரு தவறான எண்ணம் இது. பெட்ரோல் பங்க்கின் நிறுவனம் ஒன்றாக இருந்தாலும் கூட, அவை வெவ்வேறு நபர்களால், வெவ்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

இதில், ஒரு சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எரிபொருளில் கலப்படம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டிஸ்ப்ளேவில் நீங்கள் பார்க்கும் அளவை விட உங்களுக்கு குறைவான எரிபொருள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டிருக்கும். இதுபோன்று பெட்ரோல் பங்க்குகளில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேற்றப்படுகின்றன.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

எனவே உங்கள் காரின் மைலேஜ் குறைந்தால், அது நீங்கள் உங்கள் பெட்ரோல் பங்க்கை மாற்றியாக வேண்டிய நேரம் என்பதன் அறிகுறியாக கூட இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க உங்களுக்கு சௌகரியமான அதே சமயம் தரமான மற்றும் சரியான அளவில் எரிபொருளை வினியோகம் செய்யும் பெட்ரோல் பங்க்கை கண்டறியுங்கள். அங்கு எரிபொருள் நிரப்புவதை கடைபிடிக்கலாம்.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

பிரேக்கிங்கிற்கும், மைலேஜிற்கும் தொடர்பு உள்ளதா?

பிரேக்கிங்கிற்கும், மைலேஜிற்கும் தொடர்பு இல்லை என பலர் நினைக்கின்றனர். ஆனால் இதுவும் தவறு. காரின் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது காரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே பிரேக் பிடிக்கப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு தேவையில்லாமல் தொடர்ந்து பிரேக்குகளை பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.

இந்த கட்டுக்கதைகளை நம்புவதால்தான் உங்கள் வாகனம் மைலேஜை வாரி வழங்குவதில்லை... உண்மை இதுதான்

தேவையில்லாமல் பிரேக்குகளை பயன்படுத்தினால், பிரேக் பேடுகள் (Brake Pads) சேதம் அடையும் என்பதுடன், மைலேஜ் குறைந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை பிரேக் பிடிக்கும்போதும் காரின் வேகம் குறைகிறது. இதன்பின் மீண்டும் நீங்கள் ஆக்ஸலரேட்டரை மிதிக்கும்போது, மறுபடியும் வேகம் எடுக்க இன்ஜின் கடினமாக வேலை செய்ய வேண்டியதாகிறது.

இதன் காரணமாக மைலேஜ் குறையலாம். எனவே தேவைப்படும் நேரங்களில் மட்டும் பிரேக்குகளை பயன்படுத்துங்கள். முன்னதாக ஒரு சிலர் வாகனத்தின் மைலேஜ் தொடர்பாக தாங்கள் கேள்விப்பட்ட கட்டுக்கதைகளை மற்றவர்களுக்கும் உபதேசம் செய்கின்றனர். அவர்களும் அதனை ஆராயாமல் அப்படியே நம்புகின்றனர். இதுபோன்ற தகவல்களை எல்லாம் ஆராய்ந்து செயல்பட்டால், உங்கள் வாகனம் சிறப்பான மைலேஜை வழங்குவது உறுதி.

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
fuel myths you need to stop believing.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X