எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

எஸ்யூவி கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இப்போது எஸ்யூவி கார்கள் மீதான மோகம் நம் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு எக்கச்சக்கமாக இருக்கிறது. பழைய காரை விற்றுவிட்டு புதிய காரை வாங்குவதற்கும், புதிதாக கார் வாங்குபவர்கள் பலரும் எஸ்யூவி வகை மாடல்களை தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், எஸ்யூவி கார்களை ஓட்டுபவர்கள் செய்யும் தவறுகளால் விபத்துக்கள் அதிகம் நடைபெறுவது வழக்கமாகி விட்டது.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

இந்த நிலையில், ஹேட்ச்பேக், செடான் போன்ற கார்களை ஓட்டுவதற்கும், எஸ்யூவி உள்ளடக்கிய சற்று பெரிய வடிவம் கொண்ட யுட்டிலிட்டி வகை கார்களை ஓட்டுவதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. எனவே, சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால் எஸ்யூவி போன்ற பெரிய ரக கார்களை பாதுகாப்பாக இயக்க முடியும். அதற்கான சில எளிய வழிமுறைகளை தொடர்ந்து பார்க்கலாம்.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

எஸ்யூவி, எம்பிவி ரக கார்களில் சக்திவாய்ந்த எஞ்சினுடன் கிடைக்கின்றன. எனவே, செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்பதால் ஓட்டுவதற்கு உற்சாகத்தை தரும். அதேநேரத்தில், வாங்கியவுடன் அதன் சூட்சுமங்கள் பிடிபடும் வரை மிதமான வேகத்தில் ஓட்டிச் செல்லுங்கள். பெரிய வித்தியாசங்கள் இல்லாதது போன்று தோன்றும். ஆனால், அவசர சமயத்தில் ஏமாற்றம் தந்துவிடும்.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

சாதாரண கார்களைவிட எஸ்யூவி வகை கார்களின் எடை அதிகமாக இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். எனவே, சீரான வேகத்தில் செல்வது அவசியம். சிறந்த பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருந்தாலும், எடை அதிகம் என்பதால் பிரேக் பிடித்து கட்டுப்படுத்தும்போது சற்று சிரமம் ஏற்படும். எனவே, முன்னால் மற்றும் பின்னால் இருக்கும் வாகனங்களுடன் போதிய இடைவெளியில் எஸ்யூவி, எம்பிவி கார்களை இயக்க பழகிக் கொள்ளுங்கள்.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

இப்போது மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரை பயன்படுத்திய ஒருவர் புதிய எஸ்யூவி மாடலை வாங்கும்போது, எஸ்யூவி மாடலின் கையாளுமை மிகவும் வேறுபட்டு இருக்கும். நெடுஞ்சாலையில் ஸ்விஃப்ட் காரை கட் அடிப்பது போல சென்று கட் அடித்து செல்ல முயலும்போது அது ஆபத்தில் முடியும். எஸ்யூவி கார்களின் கையாளுமை மாருதி ஸ்விஃப்ட் போன்ற சிறிய கார்கள் போன்று இருக்காது.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

பொதுவாக எஸ்யூவி உள்ளிட்ட யுட்டிலிட்டி ரக கார்களின் தரை இடைவெளி மிக அதிகமாக கொடுக்கப்படுகிறது. நம் நாட்டு சாலைகளுக்கு மிக ஏற்றது என்று விளம்பரம் செய்யப்பட்டாலும், நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும்போதும், வளைவுகளில் திருப்பும்போதும் மிக கவனமாக கையாள வேண்டும். அவசர சமயத்தில் கட் அடிக்கும்போது இவை கட்டுப்பாட்டை இழப்பதற்கு வாய்ப்பு அதிகம்.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

மூன்று இருக்கை வசதி கொண்ட எம்பிவி, எஸ்யூவி ரக கார்களில் கூரையில் கேரியர் கொடுத்து, கூடுதல் பொருட்களை பலர் ஏற்றிச் செல்கின்றனர். பெரும்பாலும் இதனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், கூரையில் கேரியரில் அதிக பாரத்தை ஏற்றும்போது காரின் நிலைத்தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இது விபத்துக்கும் வழிகோலும். இவ்வாறு அதிக பாரம் ஏற்றிச் செல்லும்போது மிக குறைவான வேகத்தில் காரை இயக்கவும்.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட அளவில் டயர்களில் காற்றழுத்தம் இருக்கிறதா என்பதை பரிசோதித்துவிடுங்கள். இது மிகவும் முக்கியம். டயர்களில் காற்றழுதத்தம் சரியாக இல்லாதபட்சத்தில், அது விபத்துக்கு வழிகோலும்.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

நகர்ப்புறத்தில் ஓட்டும்போது அடிக்கடி தடம் மாறுவதை தவிர்க்கவும். சிறிய கார் போன்று அடிக்கடி தடம் மாறும்போது விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தடம் மாறும்போது அதிக விரைவு காட்டாமல், இன்டிகேட்டர் விளக்குகளை போட்டு நிதானமாக செயல்படுங்கள். நெடுஞ்சாலையில் தடம் மாறும்போதும் மிகுந்த கவனம் தேவை.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் எல்லா எஸ்யூவி மாடல்களையும் கடுமையான ஆஃப்ரோடு விஷயங்களில் பயன்படுத்த இயலாது. 4 வீல் டிரைவ் மற்றும் ஹில் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட ஆஃப்ரோடு வசதிகள் கொண்ட எஸ்யூவிகளை இயக்கும்போது கவனம் தேவை.

எஸ்யூவி ரக கார்களை பாதுகாப்பாக ஓட்டுவதற்கான டிப்ஸ்!

அனுபவம் வாய்ந்த நண்பர்கள் அல்லது நல்ல பயிற்றுனர் ஒருவர் உதவியுடன் ஆஃப்ரோடு சாகசங்களில் ஈடுபடுவது நல்லது. கடினமான ஆஃப்ரோடு சாகசங்கள் செய்யும்போது அதிக அபாயம் இருப்பதையும் உணர்ந்து செயல்படுங்கள். இல்லையெனில் தவிர்ப்பது நல்லது.

யுட்டிலிட்டி கார்களை ஓட்டும்போது வேகத்தை விட விவேமகாக செயல்படுவது அவசியம்.

English summary
How to Drive an SUV Safely.Read in Tamil.
Story first published: Monday, March 27, 2017, 16:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X