இந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி? வழிகாட்டு முறைகள்!

இந்தியாவில் இருந்து கொண்டு சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி? எங்கே பெறுவது? அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது? அதற்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? அவைகளை கீழே உள்ள செய்தியில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

இந்தியாவில் சுற்றுலா செல்லும் பலருக்கு தாங்கள் செல்லும் வாகனத்தை தாங்களே ஓட்டி செல்ல வேண்டும் என்ற ஆவல் இருக்கும். அது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். கார்/பைக்கில் நெடுதூர பயணம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை அனுபவித்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

நெடுதூரம் பயணிப்பதில் கிடைக்கும் அனுபவங்கள் பார்க்கும் வித்தியாசமான முகங்கள் என அதை ரசிப்பதற்கு என தனி மனது வேண்டும். இப்படி இந்தியாவில் தாங்கள் நினைத்த இடத்திற்கு தங்கள் வாகனங்களியே சென்ற பலர் வெளிநாடுகளுக்கு டூர் சென்றால் தலைகீழாக மாறிவிடுகின்றனர்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

வெளிநாடுகளில் அவர்கள் பயணிப்பது பெரும்பாலும் பொது வாகனங்களிலோ, அல்லது வாடகைக்கு எடுத்து ஒரு டிரைவரை வைத்து இயக்குகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் உள்ள ஓட்டுநர் உரிமம் இந்தியாவை தவிர மாற்ற நாடுகளில் செல்லாது என்பதால் தான்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

ஆனால் இந்தியாவில் வழங்கப்படும்சர்வதேச ஓட்டுநர் உரிமம் மற்ற நாடுகளிலும் செல்லும் நீங்கள் அந்த டிரைவிங் லைசன்ஸை இந்தியாவிலேயே பெற முடியும். இதை வைத்துக்கொண்டு நீங்கள் வெளிநாடு சென்றாலும் அங்கு பெரும்பாலும் வாடைகை கார்கள் கிடைக்கும் அதை வைத்துக்கொண்டு நீங்களே கார்களை டிரைவ் செய்து அந்த நாட்டை சுற்றி பார்க்கலாம்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

இந்த செய்தியில் அந்த இந்தியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் எங்கு எடுப்பது, எப்படி எடுப்பது, அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

தேவையான ஆணவங்கள்

இந்திய ஒட்டுநர் உரிமம்- உங்களிடம் இந்திய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை எடுக்க முடியாது. நீங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வெளிநாடு சென்று திருப்பி வரும் வரை உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகும் காலத்திற்குள் இருக்க வேண்டும்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

இந்திய பாஸ்போர்ட் - நீங்கள் சசர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது உங்களிடம் குறைந்தது 6 மாதம் பாஸ்போட்டிற்கு வேலிடிட்டி இருக்க வேண்டும்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

விமான டிக்கெட் - சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் போது உங்களிடம் நீங்கள் செல்லவிருக்கும் நாட்டிற்காக எடுக்கப்பட்ட விமான டிக்கெட், மற்றும் திரும்பி வருவதற்கான விமான டிக்கெட் ஆகியவற்றை கேட்க ஆர்.டி.ஓ அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

விசா - நீங்கள் செல்ல நாட்டிற்கு செல்ல உங்களிடம் விசா உள்ளதோ அதன் ஒரு நகலையும் நீங்கள் இதற்காக விண்ணப்பிக்கும் போது அதனுடன் இணைக்க வேண்டும். நீங்கள் செல்லும் நாட்டில் இந்தியர்களுக்கு "விசா ஆன்

அரைவல்" வசதி இருந்தால் அதற்காக ஆதாரத்தையும் நீங்கள் விண்ணப்பத்தின் போது சம்ர்பிக்க வேண்டும்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

போட்டோ- சர்வதேச லைசன்ஸிற்காக நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களிடம் 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உங்களிடம் இருக்க வேண்டும்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

விண்ணப்பம்

CMV4 விண்ணப்பம் - நீங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் ஆர்.டி.ஓவிடம் CMV4 என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் கையெழுத்திட்டு சமர்பிக்க வேண்டும்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

மருத்துவ சான்று - நீங்கள் சமர்பிக்கும் CMV4 விண்ணப்பத்தில் நீங்கள் டிரைவிங் செய்வதற்கு பிஸிக்கல் ஆகவும், மெட்டலாகவும் தகுதியாக இருக்குறீர்கள் என்பதை உறுதி செய்து பதிவு செய்யப்பட்ட மருத்துவர் சீல் வைத்து கையெப்பம் இட வேண்டும்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

என்ஓசி - நீங்கள் இந்திய டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய அதே ஆர்டிஓ விடமே சர்வதேச டிரைவிங் லைசன்சையும் வாங்க முடியும். நீங்கள் தற்போது வசிக்கும் இடம் நீங்கள் இந்திய டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய இடம் இல்லை என்றால் தற்போது நீங்கள் வசிக்கும் இடத்திற்கு உட்பட்ட ஆர்டிஓ விடம் சர்வதேச டிரைவிங் லைசன்ஸிற்கு விண்ணப்பிக்கலாம் அதற்காக நீங்கள் இந்திய டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய ஆர்டிஓ விடம் என்ஓசி வாங்கி அதை இந்த சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இந்தியாவில் சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் பெறுவது எப்படி?

கட்டணம்

சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் ரூ 500 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆர்டிஓ அதிகாரி உங்களது விண்ணப்பதிற்கு ஒப்புதல் அளித்த பின்பு ஓரிரு நாட்களில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் வந்து விடும். இந்த காலம் ஆர்டிஓ அலுவலக செயல்பாட்டை பொருத்து மாறுபடலாம்.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
how to get international driving license in india. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X