வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா? இது செம ஐடியாவா இருக்கே...

பலருக்கு தங்கள் வாகனத்தை மைலேஜை எப்படி கணக்கிட வேண்டும் என தெரியாது. இது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

இந்தியாவில் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் கவலையே தன் வாகனம் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதுதான். பொதுவாக எல்லோரும் சொல்லும் புகார் வாகனம் வாங்கும்போது இவ்வளவு மைலேஜ் தரும் என சொல்கிறார்கள். ஆனால் அவ்வளவு எல்லாம் தருவதில்லை மிக குறைவாக தான் தருகிறது என பலர் குற்றம்சாட்டுவார்கள்.

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

பொதுவாக இந்தியாவில் வாகனங்களுக்கு மைலேஜ் குறித்து அளிக்கப்படும் ARAI சான்றின் அடிப்படையில் தான் இந்த மைலேஜ் சொல்லப்படுகிறது. அந்த மைலேஜ் ரியல் உலகில் குறைவாக கிடைக்கும். ARAI சான்று என்பது ஒரு ரோலரின் வாகனத்தை ஓட விட்டு அதற்கான மைலேஜை கணக்கிடும் முறையை பின்பற்றி வழங்கப்படும் சான்று ஆனால் ரியல் உலகில் பள்ளம் மேடுகள் நிறைந்து இருப்பதால் அது அப்படியே கிடைப்பதில்லை.

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

அப்படி என்றால் உங்கள் வாகனம் எவ்வளவு மைலேஜ் தான் தருகிறது என நீங்கள் எப்படி தெரிந்து கொள்வது? இதற்கென்று ஒரு முறை உள்ளது அதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக காணப்போகிறோம். அதற்கு முன்னர். நீங்கள் புதிதாக வாகனம் வாங்கும் முன் நீங்கள் மைலேஜை சோதித்திருந்தாலும் தற்போதும் அதே மைலேஜை தான் அந்த வாகனம் தரும் என நம்பாதீர்கள். அதை விட குறைந்த மைலேஜை கூட தரலாம் அதனால் வாகனம் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதை அவ்வப்போது பிரசோதனை செய்து கொள்ளுங்கள்

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

ஸ்டெப்1 : வாகனத்திற்கு முழு டேங்க் எரிபொருள்

நீங்கள் பெட்ரோல் அல்லது டீசல் எந்த வாகனத்தை பயன்படுத்தினாலும் அந்த வாகனத்தை மைலேஜை துள்ளியாக கணக்கிக்க நீங்கள் அந்த வாகனத்தின் எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்ப வேண்டும். பொதுவாக பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் போடும் நாசில்கள் எல்லாம் ஒரு வாகனத்தின் பெட்ரோல் நிறைந்தால் தானா கட் ஆகும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படியாக கட் ஆகும் அளவிற்கு எரிபொருளை நிரப்பிகொள்ளுங்கள். எவ்வளவு எரிபொருளை நிரப்பியுள்ளோம் என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

ஸ்டெப் 2 : டிரிப் ரீசெட்

வாகனத்தில் முழு பெட்ரோலை நிரப்பிய பின் வாகனத்தை எடுக்கும் முன்பு வாகனத்தின் ட்ரிப் மீட்டரை ரீ செட் செய்யுங்கள் அப்படியாக ரீசெட் செய்வது மூலம் இனி நீங்கள் எவ்வளவு கி.மீ பயணிக்கிறீர்கள் என்பதை அளக்க முடியும். எவ்வளவு பெட்ரோல் நிரப்பியுள்ளீர்கள் எவ்வளவு தூரம் பயணித்துள்ளீர்கள் என்பதை வைத்து தான் உங்கள் வாகனத்தின் மைலேஜை கணக்கிட முடியும்.

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

ஸ்டெப் 3 : வாகனத்தை ஓட்டுங்கள்

அதன் படி நீங்கள் உங்கள் வாகனத்தை வழக்கம் போல பயன்படுத்த துவங்குங்கள், அன்றாடம் எந்த தேவைகளுக்காக நீங்கள் வாகனத்தை பயன்படுத்துவீர்களோ அந்த தேவை நேரத்தின் போது மட்டும் இந்த பரிசோதனையை செய்யுங்கள் நீங்கள் வழக்கத்தை விட வேகமாக சென்றாலும் அதிக பெட்ரோலை குடிக்கும். அதே நேரத்தில் வழக்கத்தை விட கரடு முரடான பாதைகளில் ஒட்டினாலோ அல்லது வேறு டிரைவர்களை ஓட்ட வைத்தாலோ உண்மையான மைலேஜ் தெரியாமல் போய்விடும்.

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

ஸ்டெப் 4 : நீண்ட தூரம் பயணம்

நீங்கள் வெளியூர்களுக்கு டூர் செல்லும் போதோ அல்லது, நீண்ட தூர பயணங்களில் இந்த சோதனையை செய்யாதீர்கள்.அத நேரம் அதிகமாக பெட்ரோல் இருக்கிறது என வேகமாக செல்வது போன்ற விஷயங்களையும் செய்யாதீர்கள் நீங்கள் வழக்கமாக எப்படி பயன்படுத்துவீர்களா அப்படியே பயன்படுத்துங்கள் இந்த மைலேஜைகண்டு பிடிக்க குறைந்த பட்சம் 250-300 கி.மீ பயணிக்க வேண்டும் அப்பொழுது தான் ஒரளவு துள்ளியாக கணக்கிட முடியும்.

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

ஸ்டெப் 5 : மீண்டும் எரிபொருள்

உங்களால் வாகனத்தை எவ்வளவு நாள் பயன்படுத்த முடியுமோபயன்படுத்துங்கள் ஆனால் அடுத்தமுறை எரிபொருளை நிரப்பும் போது வாகனம் குறைந்தபட்சம் 250-300 கி.மீ தூரமாவது பயணித்திருக்க வேண்டும் அல்லது எரிபொருள் டேங்க் பாதிக்கும் குறைவாகவாவது காலியாகியிருக்க வேண்டும். அப்பொது மீண்டும் எரிபொருளை நிரப்புங்கள். இந்த முறையும் முழு டேங்க் எரிபொருளையும் நிரப்ப வேண்டும்.

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

ஸ்டெப் 6 : கணக்கிடும் முறை

இரண்டாவது முறை நீங்கள் எரிபொருளை நிரப்பியதும் எவ்வளவு எரிபொருளை நிரப்பியுள்ளீர்கள் என கணக்கிட்டு கொள்ளுங்கள் தற்போது நீங்கள் எவ்வளவு எரிபொருளை நிரப்பியுள்ளீர்கள் என்பது தான் நீங்கள் பயன்படுத்திய எரிபொருளின் அளவு. நீங்கள் மொத்தம் எவ்வளவு கிலோ மீட்டர் பயணித்துள்ளீர்களோ அதை இரண்டாவது முறை எவ்வளவு எரிபொருளை நிரப்பியுள்ளீர்கள் என்பதுடன் வகுத்தால் அதுதான் உங்கள் வாகனத்தின் மைலேஜ்

வாகனத்தின் மைலேஜை கணக்கிட இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ? இது செம ஐடியாவா இருக்கே . . .

உதாரணமாக முதல் முறை எரிபொருளை டேங்க் முழுவதும் நிரப்பிவிட்டு 300 கி.மீ பயணித்த பின்பு மீண்டும் 10 லிட்டர் பெட்ரோல் போட்டு டேங்க் நிரைந்துவிட்டால் உங்கள் வாகனம் லிட்டருக்கு 30 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. என பொருள், கார், பைக், என இரண்டிற்கும் மைலேஜை கணக்கிட இந்த முறையையே பயன்படுத்தலாம் . இது போல உங்களுக்கு வாகனம் குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமண்டில் கேளுங்கள் அதற்கான விளக்கத்தை தர முயற்சிக்கிறோம்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How to calculate milage in a vehicle step by step guide
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X