சும்மா ஸ்டைல் மட்டும் கிடையாது.. காரில் அலாய் வீல் மாட்டுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

கார் வைத்திருக்கும் பலர் அதை மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும் என நினைத்தால் அவர் முதலில் மாற்ற நினைப்பது அலாய் வீல் தான். அதை எப்படித் தேர்வு செய்வது என காணலாம்.

காரை மாடிஃபிகேஷன் செய்ய நினைக்கும் பலர் முதலில் தங்கள் காருக்கு அலாய் வீல் பொருத்தவேண்டும் என நினைக்கின்றனர். இதற்காக ஆஃப்டர் மார்கெட்டில் உள்ள கடைகளுக்குச் சென்று தங்கள் காருக்கான அலாய் வீலை வாங்கி பொருத்திக்கொள்கின்றனர்.

சும்மா ஸ்டைல் மட்டும் கிடையாது.. காரில் அலாய் வீல் மாட்டுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

இப்படியாக அலாய் வீலை வெளி மார்கெட்டில் வாங்கும்போது அதில் பல விஷயங்களைச் சொல்லி ஏமாற்றப்படுகிறார்கள். இப்படி ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால் நம் முதலில் அலாய் வீல்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அலாய் என்பது மெக்னீஷியம் மற்றும் மற்ற மெட்டல்கள் சேர்ந்தது தான் அலாய். இந்த அலாய் வீல் பொருத்துவதால் என்ன பலன் கிடைக்கும் என்றால் இந்த அலாய் வீல் துரு பிடிக்காது. மழை வெயில் தண்ணீர் என எது பட்டாலும் இது துருப் பிடிக்காது என்பதால் தான் அலாய் வீல் மீது மக்களுக்கு மோகம் அதிகமாக இருக்கிறது.

இது மட்டுமல்ல டிரம் வீலை விட அலாய் வீல் எடை குறைவாக இருக்கும். இதனால் காரின் பெர்ஃபாமென்ஸ் அதிகமாகும். வீல் சுற்றுவதற்கு அதிக பளூவை எடுத்துக்கொள்ளாது. இதனால் காரின் வேகம் அதிகமாகும். மைலேஜூம் அதிகரிக்கும். இந்த அலாய்களில் மொத்தம் 3 வகையான அலாய்கள் தான் அதிகம் புலக்கத்தில்இருக்கிறது. கேஸ்ட் அயன், ஃபோர்ஸ்டு அலாய், சிங்கிள் பிளாக் அலாய்.

அதில் கேஸ்ட் அயன் அலாய் வீல்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது அலாய் வீலுக்கான மெட்டிரிலை உருக்கி அதை அதை மோல்டில் ஊற்றி தயார் செய்வார்கள். இது நல்ல ஸ்டிாராங்காக இருக்கும். அதே நேரத்தில் எட சற்று அதிகமாக இருக்கும், ஆனால் விலை குறைவு தான். அடுத்தாக ஃபோஜ்டு அலாய் வீல், இது முழு இரும்பை சிஎன்சி மிஷினை கொண்டு அலாய் வீலாக மாற்றுவார்கள். இது சற்று விலை அதிகம். ஆனால் எடை மிகவும் குறைவாக இருக்கும். பெரும்பாலும் ரேஸ் கார்கள், லாம்போர்கினி போன் விலை உயர்ந்த கார்களில் இதைப் பயன்படுத்துவர்.

இது இரண்டும் தான் மார்கெட்டில் அதிகம் விற்பனையாகும் அலாய் வீலாகும். இதில் ஃபோர்ஜ்டு அலாய் வீல் அதிக விலை இருக்கும். இது பெரும்பாலும் அதிக விலைகொண்ட கார்களுக்கே பயன்படுத்துவர். பெரும்பாலும் கேஸ்ட் அயன் அலாய் வீல் தான் தான் விற்பனையாகிறது. மார்கெட்டில் சில போலியான ஃபோர்ஜ்டு அலாய் வீல் இருக்கிறது. அதனால் கவனமாக இருங்கள். ஃபோர்ஜ்டு அலாய் வீல் கேஸ்ட் அயனை விட எடை குறைவாக இருக்கும். அதனால் பெர்ஃபாமென்ஸ் மேலும் அதிகமாகும், மைலேஜூம் சிறப்பாகக் கிடைக்கும்.

அடுத்தாக வீல் சைஸை சரியாகத் தேர்வு செய்ய வேண்டியது முக்கியமான விஷயம். மாடிஃபிகேஷன் செய்யும் பலர் பெரிய வீலை பொருத்த வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இந்தியாவில் ஆர்டிஓ விதிமுறைகளின்படி காரின் வீல் காரின் பாடி லைனை விட்டு வெளியே வந்திருக்கக்கூடாது. அப்படி வெளியே வரும்படி மாடிஃபிகேஷன் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கார் பாடிக்குள்ளேயே இருக்கும்படியான அலாய்களை பொருத்திக்கொள்ளலாம்.

பொதுவாகப் பெரிய வீலை பொருத்துவது சிறப்பாக இருக்கும். பெரிய வீலாக இருந்தால் பயணம் சொகுசாக இருக்கும். ஆனால் இதற்காகக் கொஞ்சம் மைலேஜை நாம் விட்டுக் கொடுக்க வேண்டியது வரும். சாலையில் பாதுகாப்பாகவும், நல்ல சொகு வசதியுடன் செல்ல வேண்டும் என்றால் பெரிய அலாய் வீல்களை வாங்கலாம். ஆனால் அது உங்கள் காரின் பாடியை விட்டு வெளியே வராமல் இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அலாய் வீல்கள் வெளி மார்கெட்டில் ஒரு நல்ல தரத்தில் வாங்க வேண்டும் என்றால் ரூ10-11 ஆயிரம் முதல் லட்சக்கணக்கிலான விலையில் உங்கள் கார், வீல் அளவு, அதன் தரம், டிசைன் ஆகியவற்றை வைத்து அதன் விலை மாறுபடுகிறது. நீங்கள் உங்கள் காருக்கு அலாய் வீல் மாற்ற நினைத்தால் இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்கும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
How to Choose Alloy Wheels for your Car
Story first published: Wednesday, November 23, 2022, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X