பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

காரை பார்க் செய்வது போல், மோட்டார்சைக்கிளை பார்க் செய்வது ஒன்றும் கடினமான வேலை இல்லை. இருப்பினும் பலர் தனக்கு தோன்றும் விதத்தில் பைக்கை பார்க் செய்துவிட்டு போவதை பார்த்திருப்பீர்கள். பைக்குகளை எந்தெந்த விதத்தில் பார்க் செய்யலாம்? எந்தெந்த முறைகளை பின்பற்றக்கூடாது? என்பவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

முறை-1

மோட்டார்சைக்கிள்களை பின்பக்கமாக பார்க் செய்வது எப்போதுமே சிறந்ததாக இருக்கும். எப்படி பார்க் செய்தாலும் முதலில் பார்க் செய்யப்படும் இடம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் பைக்கின் டயருக்கு பிடிமானம் மிகவும் அவசியமாகும். ரிவர்ஸில் பார்க் செய்வதால் மீண்டும் வாகனத்தை எளிமையாக அந்த இடத்தில் இருந்து எடுக்க முடியும்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் ஓரத்தில் பார்க் செய்யும்போது முடிந்தவரையில், ரிவர்ஸில் பார்க் செய்ய முயற்சியுங்கள். எப்போதும் நாம் முன்னோக்கியே பைக்கை இயக்குவதால், நெருக்கடியான பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு ரிவர்ஸில் வருவது ஏற்றதாக இருக்காது. அதேபோல், பைக்கின் இருக்கையில் யாரும் அமரக்கூடாது என நினைக்கிறீர்கள் என்றால், இந்த முறையில் பார்க் செய்யலாம்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

முறை-2

சில சமயங்களில், எப்போதும் போல் முன் டயரை முதலாவதாக உள்ளே நுழைத்தும் பார்க் செய்யலாம். ஆனால் இவ்வாறான முறையில் சில விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, எந்த கோணத்தில் பைக்கை நிறுத்துகிறீர்கள் என்பது. ஏனெனில் பைக்கை வெளியே எடுக்க வேண்டுமெனில் ரிவர்ஸில் வர வேண்டும்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

அதற்கேற்ப 45 டிகிரி கோணத்தில் பைக்கை நிறுத்துவது சிறந்தது. இதன் மூலமாக நீண்ட தூரத்திற்கு ரிவர்ஸில் வர வேண்டி இருக்காது. பார்க்கிங் ஸ்பாட்டில் பைக்கை வந்த வேகத்தில் நன்கு உள்ளே சென்று நிறுத்தாதீர்கள். ஏனெனில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அங்கு உங்களது பைக் நிறுத்தப்பட்டிருப்பது தெரியாமல் கூட போகலாம்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

இதனால் தவறுதலாக யாரேனும் உங்களது பைக்கின் மீது மோத நேரிடலாம். ஆதலால், கார் பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்துகிறீர்கள் எனில், தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் நிறுத்த பாருங்கள். அதற்காக பாதி பைக் வெளியே இருப்பதுபோல் நிறுத்த வேண்டும். அது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பிரச்சனையாக அமைந்துவிடும்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

முறை-3

சாலையின் ஓரத்தில் வேறெந்த வாகனமும் நிறுத்தி வைக்கப்படவில்லை எனில், கார்களை போல் சாலைக்கு இணையாகவே பைக்கை நிறுத்தலாம். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. ஆனால் இந்த விஷயத்தில் ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், சாலையின் ஓரத்தில் வேறெந்த வாகனமும் இல்லாத போதும் அல்லது குறைவாக இருக்கும்போதும் மட்டுமே இவ்வாறு சாலைக்கு இணையாக நிறுத்த பாருங்கள்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

பார்க் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

பைக்கிற்கு இரு பக்கத்திலும் எந்த அளவிற்கு இடவசதி உள்ளது என்பது பார்க் செய்யும்போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆகும். தற்போதைய மாடர்ன் பைக்குகளில் செண்டர் ஸ்டாண்ட் வழங்கப்படுவதில்லை. இதனால் பார்க் செய்யும்போது பைக்கிற்கு இரு பக்கங்களிலும் அதிக இடம் தேவைப்படாது.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள், இதே எண்ணத்தில் தான் மற்ற பைக் ஓட்டிகளும் உங்களது பைக்கிற்கு அருகே அவர்களது பைக்குகளை நிறுத்துவார்கள். இதனால் பைக்கை பார்க்கிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கும் சமயத்தில் நெருக்கடியாக மாறலாம். ஆதலால் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கில் இருந்து சற்று போதுமான இடைவெளி விட்டே உங்களது பைக்கை நிறுத்த பாருங்கள்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

அதேபோல், பார்க் செய்யும் இடம் சறுகலாக உள்ளதா என்பதும் பார்க் செய்யும்போது கவனிக்க வேண்டியது ஆகும். ஏனெனில் சரிவாக உள்ள இடத்தில் உங்களது பைக்கை பார்க் செய்ய உள்ளீர்கள் எனில், முன்னோக்கி சென்று பார்க் செய்கிறீர்களா அல்லது ரிவர்ஸில் சென்று பார்க் செய்கிறீர்களா என்பது முக்கியமாகும். எங்களை கேட்டால், சரிவாகவோ அல்லது குண்டுக்குழியுமாக உள்ள இடத்திலோ ரிவர்ஸில் பார்க் செய்வது நல்லது.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

அப்போதுதான் உங்களால் யாருடைய உதவியும் இல்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்து வெளியே எடுக்க இயலும். பைக்கில் ரிவர்ஸில் இயங்க இயலாது, நகர்த்தி கொண்டே வர முடியும். அதேபோல், சரிவான பார்க்கிங் இடத்தில் இருந்து ரிவர்ஸில் வரும்போது போதுமான கண்ட்ரோல் கிடைக்காது. அதுவே முன்னோக்கி வருவதற்கு எளிமையாக சாவியை போட்டு பைக் ஸ்டார்ட் செய்தாலே போதும்.

பைக்கை முதல் கியரில் பார்க் செய்வது நல்லதா? அடேங்கப்பா... பைக் பார்க்கிங்கில் இவ்வளவு மேட்டரு இருக்கா!!

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, பைக்கை முதல் கியரில் பார்க் செய்யுங்கள் என்கின்றனர் பைக் ஆர்வலர்கள். குறிப்பாக, சரிவான பகுதியில் கட்டாயம் முதல் கியரில் பார்க் செய்ய வேண்டுமாம். ஏனெனில் கியரில் இருக்கும்போது பைக் தாழ்வான பகுதியை நோக்கி சரிவது தவர்க்கப்படும். ஆதலால், சிக்னலிலோ அல்லது போக்குவரத்து நெரிசலிலோ நிற்கும்போது மட்டுமின்றி, பார்க் செய்யும்போதும் பைக்கை முதல் கியரில் நிறுத்துங்கள். ஆனால் அதன்பின் பைக்கை எடுக்கும்போது உங்களது வாகனம் கியரில் இருப்பதை மறந்துவிடாதீர்கள்.

Most Read Articles
English summary
How to park motorcycle you can do different ways
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X