ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்குவது, ஒட்டுவது குறித்து ஏராளமான செய்திகளை படித்து அலுத்திருப்பீர்கள். ஆனால், ஃபாஸ்டேக் ஸ்டிக்கரில் சில பிரச்னைகள் எழும் வாய்ப்புள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்குவது கடினமாக இருந்தாலும் ஒட்டுவது மிக மிக எளிதான விஷயம்தான். இதில் கம்ப சூத்திரம் எதுவும் இல்லை. ஆனால், சில விஷயங்களை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டால் சில பிரச்னைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பேடிஎம் அல்லது வங்கி மூலமாக வாங்கும்போது வீட்டிற்கு டெலிவிரி கொடுக்கப்படும். அப்போது, அந்த கவர் பிடிக்கப்பட்டுள்ளதா அல்லது ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் சேதமில்லாமல் வந்துள்ளதாக என்பதை உடனடியாக பார்த்துவிடுங்கள்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

மேலும், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கவரையும் மிக கவனமாக பிரிக்கவும். ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வெளியில் எடுத்தவுடன், அது கசங்காமல் அல்லது சேதமடையாமல் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களது வங்கி கொடுத்திருக்கும் ஆன்லைன் பக்கம் மூலமாக செயல்படும் நிலையில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை காரின் முன்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியின் உட்புறமாக ஒட்ட வேண்டும். அதாவது, உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ மிரருக்கு பின்புறத்தில் விண்ட்ஷீல்டில் ஒட்ட வேண்டும்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

மேலும், ஸ்டிக்கரை கோந்து உள்ள பகுதியை மூடியிருக்கும் கவரை மெதுவாக பிரித்து எடுக்கவும். ஏனெனில், அந்த ஸ்டிக்கரில் பொறிக்கப்பட்டு இருக்கும் குறியீடு சேதமடையக்கூடாது. சில வேளை, பிரித்து ஒட்டும்போது அந்த குறியீடு முற்றிலும் சிதைந்துவிடும். இது ஃபாஸ்டேக் வாங்கும் நிறுவனத்தின் வழிகாட்டு முறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால், பலர் இதனை பொருட்படுத்தாமல் செய்வதால் சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

அதேபோன்று, ஒட்டுவதற்கு முன்னதாக விண்ட்ஷீல்டு கண்ணாடியை ஃபைபர் க்ளாத் கொண்டு நன்கு துடைத்துவிடுங்கள். ஸ்பிரே எதுவும் பயன்படுத்தினால் நன்றாக உலர்ந்த பின்னரே ஒட்டுங்கள். ஈரப்பதமாக இருக்கும்போது ஒட்டுவதை தவிர்த்து விடுங்கள்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

மேலும், ஸ்டிக்கரை ஒட்டும்போது மடங்காமல் சரியான கோணத்தில் நேராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு ஒட்டுங்கள். ஒட்டிய பின்னர் சற்றே சாய்வாக இருக்கிறது என்று கருதி, அதனை திரும்ப பிரித்து எடுத்து ஒட்ட முற்பட வேண்டாம். அதில் உள்ள குறியீடு எழுத்துக்கள் சேதமடைந்துவிடும்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

எனவே, ஒட்டிய பின்னர் விட்டுவிடுங்கள். அதனை எடுத்து மீண்டும் ஒட்டுவதற்கு முயன்றால் கதை கந்தல் ஆகிவிடும். இதுபோன்று சிறிய சேதம் ஏற்பட்டாலும், சுங்கச் சாவடியில் உங்களது ஃபாஸ்டேக் வேலை செய்யாது. செயலிழந்ததாகவே காட்டும்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

சரி, ஃபாஸ்டேக் கூரியரில் வரும்போது சேதமடைந்துவிட்டது என்றால், அதுகுறித்த சம்பந்தப்பட்ட வங்கி அல்லது வாலட் நிறுவனத்திடம் உடனடியாக உங்களது குறியீட்டு எண்ணை வைத்தோ அல்லது வாலட் மூலமாகவே புகார் தெரிவிக்கலாம்.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

ஒருவேளை, நீங்கள் ஒட்டும்போது சேதமடைந்துவிட்டால், ஒன்றும் செய்ய இயலாது. அந்த ஸ்டிக்கர் டோல்கேட்டுகளில் வேலை செய்யாது. எனவே, நீங்கள் புதிதாக ஆர்டர் செய்தே வாங்க முடியும். மாற்று ஸ்டிக்கர் வழங்குவதற்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கனவே உள்ள உங்களது கணக்குடன் இந்த மாற்று ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதால் பிரச்னையில்லை.

ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டும்போது கவனம்... இல்லாட்டி கதை கந்தல்தான்... !!

ஏற்கனவே ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை எடுத்துவிட்டு முழுமையாக சுத்தம் செய்து உலர விட்ட பின்னர், அந்த இடத்தில் புதிய ஸ்டிக்கரை ஒட்டுங்கள். இப்போதும் நீங்கள் கவனமாக மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ டிப்ஸ்
English summary
Here are some of the important points to remember when you paste fastag sticker in your car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X